யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடும்போக்குவாத்தை அனுமதிக்கின்றார் என பிரபல கல்வியியலாளர் கலாநிதி ராஜன் ஹூல் குற்றம் சுமத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யாழ் பல்கலைக்கழக துணை வேந்தரின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை என அவர் தெரிவித்துள்ள அவர் மாணவர்கள் கடும்போக்குவாத போராட்டங்களை நடாத்த அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக எழுக தமிழ் போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதனை அல்லது மாணவர்கள் பங்கேற்பதனை துணை வேந்தர் தடுத்திருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாக உள்ளன.