நம் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் இன்று 01.10.2016

அற்புதமான நடிகன் என்பதோடு நான் மானசீகமாக அவரை என் நடிப்புக் குருவாகவும் ஏற்றுக் கொண்டவன்.அவர் நினைவை ஒரு கட்டுரையின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஸ்ரனிஸ்லாவ்ஸ்கியும்

இருவருமே நடிப்பு என்று பேசும் போது சாதனை படைத்தவர்கள்.ஒருவகையில் இருவருமே கண்டு பிடிப்பாளர்கள்தான்.லாஸ்கி நடிகனின் மனம் அதன் வழி வரும் முறை நடிப்பு அதற்கான பயிற்சிகள் என அவர் இன்று வரை நடிகர்களுக்கான ஒரு கையேடு.

சிவாஜியும் தமிழ் மரபில் மேடைக்கான நடிப்பையும் குறிப்பாக தமிழ் சினிமாவுக்கான நடிப்பையும் தமிழ் மரபுக்கூடாக சொல்லித்தந்தவர்.
லாஸ்கியயைப்போல் அவர் குறிப்புக்களாலோ எழுத்துக்களாலோ சொல்லவில்லை அவரது திரைப்படங்களும் அவர் அவ்வப்போது வழங்கிய பேட்டிகளும் சாட்சிகளாக இருக்கின்றன.

லாஸ்கி ஒரு நடிகனுக்கான பயிற்று முறை பற்றிப் பேசும் போது ஆறு நிலகள் பற்றிக் குறிப்பிடுவார்

1.தளர் நிலை- Relaxation

நடிகனின் குரலும் உடலும் எதற்கும் வளைந்து கொடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும் அதற்கான பயிற்சிகள் வேண்டும் .
இது சிவாஜிகணேசன் எந்த பாத்திரமானாலும் தன் உடலாலும் குரலாலும் மிக லாவகமாக வெளிப்படுத்தியவர்.

2. மனதை ஒரு நிலைப்படுத்தல்-Concern tration

நடிகனுக்கன பிரதான பண்பு இது மனதை ஒரு நிலைப் படுத்தி பாத்திர வார்ப்பை உருவாக்குதல்.சிவாஜிகணேசனிடம் இது அதிகமாகவே இருந்துள்ளது.பல இயக்குனர்களும் தங்கள் அனுபவப் பகிர்வில் இதனை வெளிப்படுத்தியுள்ளனர்.சிவாஜிகணேசனே ஒரு பேட்டியில் இப்படி கூறுவார்.எத்தனை முறை மேடையில் ஏறினாலும் புது நடிகனாகவே உணர்கிறேன் .ஒவ்வோரு காட்சியிலும் மனம் லயித்து நடிப்பதை நாம் பல நூறு படங்களில் பாத்திருக்கிறோம்.

3.உற்றுக் கவனித்தல்-Observation

நடிகன் என்பவன் அவதானிப்பு மிக்கவன் வாழ்க்கையில் நடை முறையில் தரிசிக்கும் மனிதர்களின் நடவடிக்கைகளின் அவதானிப்பில் பாத்திரங்களை வெளிப்படுத்தல் மனிதர்களை மாத்திரமல்ல எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்தல். அப்பர் சுவாமிகளாக நடித்த போது காஞ்சிப் பெரியவரை தான் பின் பற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளர்.பாபு படத்தில் ரிக்சாகாரனாக வந்த போது பலரை கவனித்து அவர்களது நடை உடை பாவனைகளை பின் பற்றியதாக சொல்லியிருக்கிறார்.

4.நம்பகத்தன்மையாக பாத்திரங்களை வெளிப்படுத்தல்-Making believable character
பார்வையாளர்கள் பாத்திரங்களை நம்ப வேண்டும் நடிகன் நம்ப வைக்க வேண்டும் .
இதனை மிக கச்சிதமாக செய்த நடிகனாக நாம் சிவாஜிகணெசனைப் பார்க்கலாம்.கப்பலோட்டிய தமிழன் ,கர்ணன் ,திருவிளையாடல் சிவன் என எண்ணற்ற பாத்திரங்களில் தோன்றி ரசிகர்களிடம் நம்பகத்தன்மையுள்ள நடிகனாக அவர் இருந்தார்.திருவிளையாடல் பார்த்த பலர் எழுந்து நின்று கும்பிட்டு பக்தி பூர்வமான சம்பவங்கள் அன்றைய பத்திரிகைகளில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

5.இயல்பாக உனர்வுகளை வெளிப்படுத்தல்-Spontenious effect

உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தல் முதல் மரியாதை படத்தில் ராதாவிடம் தன் காதலை வெளிப்படுத்தும் விதம் இதற்கு சிறந்த உதாரணமாக கொள்ளலாம். பல படங்கள்
6.சூழலைப் புரிந்து கொள்ளல்-
கதை களம் பாத்திரங்கள் என எல்லாவற்றையும் புரிந்து கொண்டு நடித்தல்.
ஏனைய பாத்திரங்களுடன் இசைந்து செல்லல்
இதற்கான இரண்டு சிறந்த உதாரணங்கள்
1.ஞான ஒளியில் மேஜர் சுந்த்ர்ராஜனுடனான இணைவு
2.உயர்ந்த மனிதனில் அசோகன் மேஜர் சுந்தர் ராஜன் இருவருடனும் சேர்ந்தியங்கிய திறன்…

(தொடரும்……..)