இந்திய அரசின் ஆதரவுடன். உருவாக்கப்பட்ட வட கிழக்கு மாகாண சபை மகிந்த ஆட்சிக்காலத்தில் ஜே.வி.பி தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது.இதன் பின்னணியில் மகிந்த அரசும் செய்ற்பட்டது. இப்போஅது இதை மீண்டும் இணைப்பது தொடர்பாக வட பகுதி அரசியல்வாதிகளும் தமிழர்களில் ஒரு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.இதை கிழக்கு வாழ் இஸ்லாமிய மக்களும் சிலகிழக்கு வாழ் தமிழர்களும் எதிர்கின்றனர்.
இஸ்லாமிய மக்கள் புலிகளின் காலத்தில் ஏற்பட்ட துயரங்களை மறக்கவில்லை. அவை மறக்கமுடியாத வடுக்கள்.அவர்களின் வடக்கு – கிழக்கையும் இணைக்கும் முயற்சியை எதிர்க்க அதுவே அடிப்படைக் காரணமாக இருக்கிறது.தமிழர் தரப்போ அந்த தவறுகளை மூடி மறைத்து பேரினவாத பூச்சாண்டி காட்டி கிழக்கு வாழ் இஸ்லாமிய மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர் .
வடக்கும் கிழக்கும் இணைந்தாலும் பிரிந்தாலும் ஒன்றுதான்.இரண்டையும் நிர்வகிக்கப்போவது தமிழ் பேசும் மக்களே.இதில் முரண்பட எதுவும் இல்லை.
இஸ்லாமிய மக்கள் தமிழர்களை நம்ப மறுப்பதுபோலவே கிழக்கு வாழ் தமிழ் மக்களும் இஸ்லாமிய அரசியல் தலைமைகளை நம்ப மறுக்கின்றனர்.எனவே இரண்டு தர்ப்பும் விட்டுக்கொடுப்புடன் புரிந்துணர்வை ஏற்படுத்தவேண்டும்.ஒருவரை ஒருவர் அடக்க நினைப்பது அல்லது ஆள நினைப்பது அநாகரீகமானது.
சென்ற பாராளுமன்ற தேர்தலில் ஹிஸ்புல்லா என்பவர் கோவில் காணியை அபகரித்து இஸ்லாமிய மக்களுக்கு வளாகம் கட்டிக்கொடுத்தாக பகிரங்கமாக சொன்னார்.இதை எந்த இஸ்லாமிய தலைவர்களோ மக்களோ கண்டிக்கவில்லை.நம்பகத்தன்மைக்கான சிறு உதாரணம்.அதேபோல தமிழ் அரசியல் தலைவர்களும் தவறுகளை வெளிப்படையாக கண்டிக்க முன்வரவேண்டும்.
வடக்கு கிழக்கு இணைப்பு என்பது கிழக்கு மாகாண மக்களின் விருப்புலேயே தங்கியுள்ளது.அதை வடக்குஅரசியல்வாதிகள் தீர்மானிக்க முடியாது.இந்த அரசியல் முரண்பாடுகளை இன முரண்பாடாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.
(Vijay Baskaran)