தனிநாயக அடிகளார் அப்பொழுது (1961-1970) மலேசியப் பல்கலைக்கழகத்திலே இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே தனது ‘தமிழ் கல்ச்சர்’ எனும் இதழ் மூலம் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்றுசேர்க்க முற்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர். அவர் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு பிரம்மாண்டமான முறையிலே முதல் மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஏப்ரல் 16-23 தேதிகளில் நடாத்தப்பட்டது. இந்த மாநாட்டில் அன்று தமிழியல் ஆய்வில் பங்கெடுத்த பல்லின ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இரண்டாவது மகாநாடு 1968
1968ல் சி.என்.அண்ணாத்துரை தலைமையிலான திமுக அரசு அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்தியது . அது 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10ஆம் நாட்களில் சென்னையிலே நடந்தது. அது மிகச் சிறந்த மகாநாட அமைந்தது.
மூன்றாவது மகா நாடு 1970
பேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1970 இலே நடத்தினார். முன்னைய இரு மாநாடுகளுக்கும் பாரீஸ் மாநாட்டிற்கும் பெரும் வித்தியாசம். சலசலப்பின்றி வழமை போல் நடைபெறும் கருத்தரங்கு போன்று அது அமைந்திருந்தது. இம்மாநாடு 1970 சனவரி 15-18 காலப்பகுதியில் நடைபெற்றது.
நான்காவது மகா நாடு 1974
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 1974ல் சனவரி 3-9 நாட்களில் பேராசிரியர் .வித்தியானந்தன் தலைமையில் மிகச் சிறப்பாக நடை பெற்றது.
ஐந்தாவது மகாநாடு 1981
எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு 1981 சனவரி 4-10 வரை மதுரையில் மிகப் பிரமாண்டமாய் நடத்தியது.இந்த மகாநாட்டில் நான் பேராசிரியர் கைலாசபதி அவர்களுடன் கலந்து கொண்டேன்.
ஆறாவது மகாநாடு 1987
1987 நவம்பர் 15-19 மலேசியா கோல்லாலம் பூரில் நடை பெற்றது.
ஏழாவது மகா நாடு 1989
1989 டிசம்பர் 1-8 திகதிகளில் மொரிசசில் நடை பெற்றது.
எட்டாவது மகாநாடு 1995
ஜெயலலித தலைமையிலான அரசு மதுரையில் 1995 சனவரி 1-5 திகதிகளில் மதுரையில் நடத்தியது இங்குதான் ஈழத் தமிழறிஞர்கள் புலிகள் என முத்திரை குத்தி நாடு கடத்தப் பட்டனர்.
ஒன்பதாவது மகா நாடு 2015
மலேசியா கோலாலம்பூரில் சனவரி 29 முதல் பெப்ரவரி 1வரை நடை பெற்றது.
தமிழறிஞர் தனிநாயகம் அடிகளாரினால் சரியான நோக்கோடு ஆரம்பிக்கப் பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அதன் நோக்கங்களை இழந்து இன்று செயலற்றுப் போய் உள்ளது.
உலகத் தமிழாரய்ச்சி மன்றம் புனரமைக்கப் படவேண்டும் அரசியல் கலப்பில்லாத தமிழாய்வை மட்டும் மனம் கொண்டு எதிர்காலத் திட்டமிடல்கள் மேற்கொள்ளப் படவேண்டும் .இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழறிஞர்கள் இதில் அக்கறை செலுத்த வேண்டும்.
இன்று இருக்கின்ற உலகத் தமிழாராய்ச்சி கழகத்தின் நிர்வாகிகள் யார் எவர் என்பது தெரியாமலேயே உள்ளது.ஒன்று அது சரியானபடி இயங்க வேண்டும் அல்லது அதே போன்ற வேறொரு அமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.