(Kiri Shanth with Arun Ambalavanar.)
முடிவு ஒன்று – தமிழ்த் தலைவர்களுள் மிகச் சிலரே புவிசார் அரசியல் தொடர்பில் சரியான தரிசனங்களோடு இருக்கிறார்கள். அல்லது புவிசார் அரசியலைக் குறித்து ஒரு பொது மேடையில் உரையாற்றக் கூடிய ஆழத்தோடு இருக்கிறார்கள்.
முடிவு இரண்டு – ஈ.பி,டி,பியின் உறுப்பினர் ஒருவர் ஒரு பொது மேடையில் வைத்து பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். ஒரு முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்பு இவ்வாறு தனது கடந்த காலத் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டிருப்பதை குறிப்பாகக் கவனிக்க வேண்டும். ஏற்கனவே சுரேஷ; பிரேமச்சந்திரன் 2001 இல் அவ்வாறு மன்னிப்புக் கேட்டுவிட்டார் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். தவராசாவின் மன்னிப்பு அக்கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடா என்பது தெரியவில்லை. ஆனால் அரசியல் தலைவர்கள் இவ்வாறு பொது மேடைகளில் மன்னிப்புக் கேட்பது என்பது ஒரு முக்கியமான ஜனநாயகப் பண்பே.
முடிவு மூன்று – இனப்பிரச்சினைக்கான தீர்வைக் குறித்து பகிரங்கமாகக் கூறவும் விவாதிக்கவும் தமிழரசுக்கட்சியிடம் எதுவும் இல்லை. அல்லது அதைப் பகிரங்கமாகக் கூறவோ விவாதிக்கவோ அவர்கள் தயாரில்லை. இந்த இரண்டிலும் எது சரி? தீர்வு அவர்களிடம் இல்லை என்றாலும் நிலமை பயங்கரம்தான். தீர்வை ஒரு மறைபொருளாக மூடுமந்திரமாக வைத்திருக்க விரும்பினால் அதுவும் ஆபத்துத்தான். ஏனெனில் இலங்கைத் தீவின் துயரங்கள் அனைத்துக்கும் ஊற்று மூலமாகக் காணப்படும் இனப்பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது மூடப்பட்ட அறைகளுக்குள் ரகசியமாக கண்டு பிடிக்கப்படும் ஒன்றாக இருக்கக் கூடாது. அது சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புக்களுடனும் பகிரங்கமாக உரையாடிக் கண்டுபிடிக்கப்படும் ஒன்றாகவே அமைய வேண்டும். உலகத்தின் வெற்றி பெற்ற எல்லாச் சமாதான முயற்சிகளும், நல்லெண்ண முற்சிகளும் அதிக பட்சம் வெளிப்படையானவைதான். ரகசியங்களிலிருந்தும் தந்திரங்களிலிருந்தும் சமாதானத்தைக் கட்டியெழுப்பலாமா? அது மட்டுமல்ல அது ஒரு ஜனநாயக நடைமுறை ஆகுமா?
முடிவு நான்கு:- தமிழ் ஜனநாயகச் சூழல் மேலும் போதியளவுக்கு வளர வேண்டியிருக்கிறது. எதிர்க்கருத்துக்களை முதலில் செவிமடுத்தபின் அவற்றுக்கு தர்க்கபூர்வமாக எதிர் வினையாற்றுவது என்பது ஒரு பண்பாடு. எங்களுக்கு விருப்பமானவற்றையே மற்றவர்கள் பேச வேண்டும், எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது பல் வகைமைகளுக்கு எதிரானது. எதிர்க்கருத்துக்களை அறிவு பூர்வமாக நிராகரிப்பது அல்லது வெற்றி கொள்வது என்பது அடிப்படையில் ஒரு பண்பாடுதான்.
– நிலாந்தன் –
மு . திருநாவுக்கரசின் புத்தக வெளியீட்டினை பற்றியும் அதிலிருந்து தான் அறிந்து கொண்டவற்றையும் நிலாந்தன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். வழக்கம் போல கட்டுரையின் தொனியில் இது தான் முடிந்த முடிவு என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. பரவாயில்லை , அது அவரது இயல்பு . ஆனால் கட்டுரையின் ஊடாக அவர் வைக்கும் சில வாதங்கள் மொண்ணைத் தனமானவை ,
உதாரணத்திற்கு , கஜேந்திரகுமாரும் சுரேஷும் பேசும் பொழுது கூட்டம் கலையாமலிருந்தது ,சுமந்திரனின் ஆதரவாளர்களும் பேசாமல் கவனித்துக் கொண்டிருந்தார்கள் என்று. அப்படி அது சரியென்றால் , இவரது கருத்தின் படி சுமந்திரனின் ஆதரவாளர்கள் என்று சொல்லப் படுபவர்கள் ஜனநாயக ரீதியில் மற்றவர்களது கருத்துக்களை கேட்டார்கள் என்றும் சொல்லலாம் அல்லவா. அந்த நிகழ்வில் கஜேந்திரகுமாரின் ஆதரவாளர்கள் எப்படியோ அதிகம் , ஆகவே சபை அமைதியாகத் தானே இருக்கும் . கட்டுரையை எழுதியவரும் ஆதரவாளர் தானே.அவருடைய குரலிலும் அது ஒலிக்கிறது அல்லவா .
தாம் செய்திருப்பது உலகப் புரட்சி போன்ற வாதங்கள் எம் போன்ற சிறுபிள்ளைகளிடமிருந்து வந்தால் பரவாயில்லை . தீர்க்கதரிசிகளே இவ்வாறு கூறுவதை “தமிழ் அறிவியலுக்குள்” வைத்து எவ்வாறு பார்ப்பது .
மேலும் முடிவு 1 உம் முடிவு 3 உம் , மண்டையில் உள்ள கொண்டையை மறந்த முடிவுகளாக உள்ளவை வருத்தத்தை அளிக்கிறது.
வாழ்க தமிழ் அறிவியல் ! எழுக தமிழ் அறிவியல் !
Arun Ambalavanar:
நிலாந்தன் அறம்,உண்மை,மறம் என்பவற்றுக்கு மதிப்புக்கொடுக்காத ஊடக யாவாரி என்பதை
நான் அறிந்தது பின்வரும் 2 விடயங்களில்.
1. நிலாந்தன் திருமணம் செய்தது
யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளை
அதிகாரத்தை பயன்படுத்தி வல்லுறக்குட்படுத்திய
க. அருந்தாகரனின் உறவுப்பெண்ணை.
நான் யாழ்பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பேராசிரியர்களால்
நடத்தப்படும் பாலியல் குற்றங்களை அம்பலப்படுத்தி எழுதிய கட்டுரையைப் படித்த நிலாந்தன் என்னுடனான ஒரு தொலைபேசி
உரையாடலில்
அருந்தாகரன் அப்படிப்பட்ட
கிரிமினல் இல்லையென்றும் அவரை எதிரிகளான
தீபச்செல்வன் முதலியோர் ஓரங்கட்ட இப்படி
அவதூறுகளை பரப்புகிறார்கள் என்றும் சொல்லி என் மனதை மாற்ற முயன்றார்.
இதற்குமுதல் நிலாந்தன் பிரபாகரனின்
மெய்பாதுகாப்பு அணியிலிருந்து வெளியேறி
இப்போது எழுத்தாளராக இருக்கும் ஒருவரிடமும்
அருந்தாகரன் பற்றி நான் எழுதியது பிழை
என்று வதந்தி பரப்பினார்.
2. IPKF காலத்தில் மண்டையன் குழு தலைவராக
இருந்து மாபாதக சித்ரவதைமூலம் புலி சந்தேக நபர்களை வதையாடி
கொன்ற சுரேஸ் பிரேமச்சந்திரன் நிலாந்தனின்
அரசியல் வர்த்தக பங்காளி. தேசம்நெற் ஆசிரியர்
Jeyapalan
சுரேசின் கொலைவரலாற்றை அம்பலப்படுத்திய
போது அதற்கு ஆதாரம் இருக்கா என்று inbox வழி
தொடர்புகொண்டு அதற்கு ஆதாரமிருக்கா என்று கேட்டார்.
சுரேஸ் பிரேமச்சந்திரன் 2009 மே க்கு பிறகு TNA ல் தன் செல்வாக்கை நிலைநிறுத்த ஆட்சேர்க்க முற்பட்டபோது
நிலாந்தனை வடமாகண சபை தேர்தலிலோ
பிறகு பாராளுமன்ற தேர்தலிலோ TNA சார்பாக
வேட்பாளராக வருமாறு நிலாந்தனை அழைத்தார்.
ஏனோ நிலாந்தன் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
சுரேசுக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.
தன்மோகி(Narcissist)நிலாந்தன் அன்றிலிருந்து Suresh லாபியிஸ்ட்.