மற்றையவர்களின் செயற்பாட்டுச் சுதந்திரத்தை துப்பாக்கி முனையில் பிரபாகரன் தடுத்து கைகோர்த்து நின்ற மற்றத் தலைவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றதன் விளைவு தான் ஒட்டுமொத்தமாக முள்ளிவாய்க்காலின் அழிவுக்கு இட்டுச்சென்றது. 30 வருடங்கள் புலிகள் மட்டும் செயற்படலாம் என்ற செயற்பாட்டுச் சுதந்திரத்தின் விளைவுகள் தான் இவை. ஏதோ செயல் வீரர்கள் வெட்டிப் புடுங்குகிறோம் என்று சொந்த மக்களையே பலி கொடுத்தும் தலைமையைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது இந்தப் புலியிசத்தால்.
புலிகள் மீதான விமர்சனங்கள் ஒரு நாளும் சகோதரப் படுகொலை செய்யாது. சொந்த மக்களையே கொல்லாது. ஒட்டுமொத்தத்தில் இன்னொரு முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்துவிடக் கூடாது எனபதற்காகவே புலியிசத்தை விமர்சிக்க வேண்டியுள்ளது.
ஏனைய இயக்கங்களும் படுகொலையில் ஈடுபட்டவர்களே. அவர்கள் ஒன்றும் தூய்மையானவர்கள் அல்ல. ஆனால் புலிகள் மட்டுமே படுகொலைகளை அரசியல் சிந்தாந்தமாக ஏற்றுக்கொண்டவர்கள்.
இன்று புலிகளை விமர்சிப்பவர்களிடம் ஒன்றும் இல்லாததால் ஒருவருக்கும் ஆபத்து இல்லை. ஆனால் புலியிசத்திடம் எல்லாம் இருப்பதால் தமிழ் மக்களுக்கு பாரிய ஆபத்து உள்ளது. இன்னுமொரு பிரபாகரன் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் வேண்டாம் என்று சங்கே முழங்கு!!!
இதுவொரு புலி எதிர்ப்பு கோசம் அல்ல. மக்களுக்கு வரும் ஆபத்தை எச்சரிக்கும் அறைகூவல்.
கடந்த கால அரசியலை மீள்பரிசீலனைக்கு உட்படுத்துங்கள். எது நடந்ததோ அது கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். எது நடக்க வேண்டுமோ அது கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.
(Jeyabalan Thambirajah)