எழுப்பபடும் சந்தேகங்கள்

கொக்குவில்லில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பயிலும் இரண்டு மாணவர்கள் மீது காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட சர்ச்சைக்குரிய துப்பாக்கிச் சூடு

(டி.பி.எஸ் ஜெயராஜ்)

பகுதி – 1

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்பபாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இரண்டு இளநிலை பட்டதாரி மாணவர்கள் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்துள்ளார்கள், காவல்துறையினரால் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் துப்பாக்கிச் சூடு ஆத்திரமூட்டும் அரசியல் சர்ச்சை எழுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் அந்த மரணங்கள் ஒரு விபத்து காரணமாக ஏற்பட்டது என்று அறிவிக்கப்பட்டது ஆனால் அதைத் தொடர்ந்து உந்துருளியில் பயணம் செய்த இரண்டு பேருக்கு காவல்துறையினர் நிறுத்தும்படி வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அவர்கள் கீழ்படிய மறுத்ததினால் காவல்துறையினர் அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பின்னர் தெரிவிக்கப் பட்டது.

கொக்குவில்,குளப்பிட்டிச் சந்தியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையைச் சேர்ந்த ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப் பட்டுள்ளதுடன் அவர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டும் உள்ளார்கள். அந்த மரணங்கள் மற்றும் அவற்றை மூடிமறைக்க முற்பட்ட முறைகேடான முயற்சி என்பனவற்றின் விளைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக இளநிலை பட்டதாரிகள் பாரிய எதிர்ப்பில் இறங்கியுள்ளார்கள். இனங்களுக்கு இடையேயான ஒற்றுமையை விளக்கும் ஒரு அபூர்வமான காட்சியாக நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களும் கூட தங்கள் ஒற்றுமையைக் காண்பிப்பதற்காக எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தார்கள். இந்த கொலைகளுக்கு நியாயம் வேண்டி அநேகமான தமிழ் கட்சிகள் ஒன்றுசேர்ந்து வடக்கில் ஒரு ஹர்த்தாலை மேடையேற்றின. ரி.என்.ஏ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆகியோர் இந்தப் பிரச்சினையை பாராளுமன்றத்திலும் எழுப்பினார்கள், அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கா பாரபட்சமான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

அதற்கு சற்றும் தொடர்பற்றது என நன்றாகத் தெரிந்த ஒரு “கிளைக் காட்சியாக” கடந்தவார முடிவில் சுன்னாகத்தில் சிவில் உடையில் இருந்த இரண்டு காவலர்களை உந்துருளியில் வந்த குழு ஒன்று வெட்டியுள்ளது. அதற்கு உரிமை கோரும் விதத்தில் ஆவா குழு என்று அழைக்கப்படும் குழு ஒன்றால் பரவலாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டன. இவை அனைத்தும் யாழ்ப்பாணத்தை கொதி நிலையில் வைக்க காரணமாகிவிட்டன, அதேவேளை நாடு முழுவதும் வடக்கை அதிகம் அக்கறை மற்றும் கவலையுடனும் பார்க்கும்படியும் செய்துவிட்டது. இந்த குழப்பமான நிலையை இனப்பிரிவின் இரண்டு பக்கத்திலுமுள்ள பொறுப்பற்ற மற்றும் ஆத்திரமூட்டும் நடத்தையைக் கொண்ட சில குறிப்பிட்ட அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களின் ஒரு பிரிவு என்பன மேலும் சிக்கலாக்கி விட்டன.

இவை அனைத்தும் ஒக்ரோபர் 20, 2016 வியாழன் அன்று ஆரம்பமானது. யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பிரிவு மூன்றாம் வருட மாணவர்கள் இருவர் ஏபி 16 என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி வழியாக பிஏஎக்ஸ் 3142 என்கிற இலக்கமுடைய பஜாஜ் சிரி 100 உந்துருளியில் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். அந்த உந்துருளியை ஓட்டியவர் 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஷன் என்பவர், அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஊடக கல்விப் பிரிவில் பயின்று வந்தார். சுலக்ஷன் ஒரு திறமையான கலைஞரும் கூட அவர் தனது திறமையை வெளிப்படுத்தும் சில பிரசித்தமான காணொளிகள் மற்றும் யு – ரியுப் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

உந்துருளியின் பின்னிருக்கையில் அமர்ந்து வந்தவர் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞன பிரிவில் பயிலும் 23 வயதான நடராஜா கஜன் என்பவர். அவர்கள் இருவரும் சுன்னாகத்தின் அருகில் உள்ள கந்தரோடை எனும் இடத்தில் நடந்த ஒரு வைபவத்தில் கலந்து கொண்டுவிட்டு பல்கலைக்கழகத்தின் அருகிலுள்ள தங்கள் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். சுலக்ஷன் ஒரு கந்தரோடை வாசியாக உள்ள அதே சமயம் கஜன் கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்தவர். பல்கலைக்கழக வளாகத்தின் சுற்றாடாலான திருநெல்வேலி, தின்னைவேலி எனவும் அழைக்கப்படும், இதற்கும் கந்தரோடைக்கும் இடையே உள்ள மிகவும் வசதியான பாதை 18.5 கிலோமீற்றர் நீளமான ஏபி 16 அல்லது யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியாகும்.

கந்தரோடையில் இருந்து பல்கலைக்கழக வளாகத்தை அடைவதற்கு ஒருவர் கந்தரோடையில் இருந்து சுன்னாகம் வந்து பின்னர் யாழ்ப்பாண நகரத்தை நோக்கி ஏபி 16 வீதி வழியாக மருதனாமடம், கோண்டாவில், தாவடி, குளப்பிட்டி என்பனவற்றைக் கடந்து கொக்குவில் சந்திக்கு வரவேண்டும் பின் அங்கிருந்து பல்கலைக்கழக வளாகத்தை நோக்கி திரும்பவேண்டும். இந்த இரண்டு பட்டதாரி மாணவர்களும் கே.கே.எஸ் வீதி என பொதுவாக பிரபலம் பெற்ற ஏபி 16 வீதி வழியாக உந்துருளியில் வந்து தாவடியை அடைந்து அங்கிருந்து கொக்குவில்லின் பொது இடமான குளப்பிட்டி சந்தியை அடைந்தபோதுதான் 20 ம் திகதி நள்ளிரவு 11.45 மணியளவில் இந்த துயரம் நடந்துள்ளது.

கே.கே.எஸ் வீதியிலுள்ள குளப்பிட்டி சந்தி

கே.கே.எஸ் வீதியிலுள்ள குளப்பிட்டி சந்தியில் அந்த நேரம் ஐந்து காவல்துறை காவலர்கள் கடமையில் இருந்துள்ளார்கள். அவர்கள் உதவிப் பரிசோதகர் சரத் திஸாநாயக்கா, சாஜன்ட்.பி.எஸ்.ஜயவர்தன, காவலர்கள் சந்தன, லக்ஷ்மண மற்றும் அந்த இடத்தில் கடமையில் இருக்கும் காவலர்கள் பயன்படுத்தும் மகேந்திரா ஸ்கார்ப்பியோ ஜீப் வண்டியின் சாரதியான காவலர் நவரத்ன ஆகியோராவர். குளப்பிட்டியில் கடமையாற்றும் காவலர்களுக்கு பொறுப்பானவர் உதவி பரிசோதகரான திசாநாயக்கா ஆவார். காவல்துறையினர் நள்ளிரவுக்கு சற்றுப் பின்னர் ஒரு அம்புலன்சை குளப்பிட்டிக்கு வரவழைத்து இரண்டு பேர் உந்துருளி விபத்தில் தீவிர காயமடைந்துள்ளதாகக் கூறி அவர்கள் இரண்டு பேரையும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளார்கள். 24 வயதான சுலக்ஷன் அனுமதிக்கும்போதே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. 23 வயதான கஜனும் கூட தனது காயங்கள் காரணமாக அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே இறந்துவிட்டார்.

காவல்துறை தலைமை நிலையத்துக்கு யாழ்ப்பாண காவல் நிலையத்தால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாணம் கொக்குவில்லில் நடந்த ஒரு உந்துருளி விபத்தில் கொல்லப்பட்டார்கள் என அறிவிக்கப்பட்டது. அவர்களது உந்துருளி சறுக்கி ஒரு சுவரில் இடிபட்டதாகச் சொல்லப்பட்டது. இந்த செய்தி ஊடகங்கள் மற்றும் பல தொலைக்காட்சி சேவைகள், மற்றும் வானொலி நிலையங்கள் என்பனவற்றுக்கு பரவலாக்கப்பட்டு யாழ்ப்பாணம், கொக்குவில்லில் இரண்டு இளநிலை பட்டதாரிகள் விபத்தில் மரணம் என்ற செய்தியாக வெளியிடப்பட்டது. இரண்டு பட்டதாரி மாணவர்கள் உந்துருளி விபத்தில் மரணமடைந்தார்கள் என்கிற காவல்துறையின் ஆரம்ப செய்தி பரவலாக நம்பப்பட்டது. இந்த நிலை நீண்ட நேரத்துக்கு நீடிக்கவில்லை. படிப்படியாக விபத்து மரணம் என்கிற கதையின் மிகவும் உண்மையான மறுபக்கம் விறுவிறுப்பாக தாக்கம் பெற ஆரம்பித்தது.

குளப்பிட்டிச் சந்திச் சுற்றாடலில் வசித்த மக்கள் நள்ளிரவில் துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்ட சத்தத்தை கேட்டுள்ளார்கள். ஒரு சறுக்கல் சத்தமும் கேட்டுள்ளது. சிலர் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக தங்கள் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்கள் அந்த இடத்தில் இருந்த காவலர்கள் அதிர்ச்சியடைந்து அங்கு ஒரு விபத்து நடந்துள்ளது எனத் தெரிவித்து அவர்களை வீட்டினுள்ளே செல்லும்படி கட்டளையிட்டுள்ளார்கள். மறுநாள் காலை விபத்து பற்றிய அந்தச் செய்தி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டபோது, இந்த குடியிருப்பாளர்கள் குழப்பமடைந்தார்கள். தாங்கள் கேட்ட துப்பாக்கி வேட்டுச் சத்தம் என்ன? அதுபற்றி ஏன் செய்தி அறிக்கைகளில் குறிப்பிடப் படவில்லை? காவல்துறை விபத்து சம்பவம் பற்றி மட்டுமே வலியுறுத்துவது ஏன்? அது வெறுமே ஒரு உந்துருளி சறுக்கல் மட்டுமே என்றால் காவல்துறையினர் அந்தக் காட்சியில் இருந்து அவர்களை விரட்டியடித்தது ஏன்?

கலைப்பீட மாணவர் சங்கம்

கால தாமதமாகவே அந்தப் பகுதி மக்கள் உந்துருளி விபத்தை விட மிகவும் முக்கியமான வேறு ஏதோ நடந்திருக்கிறது என்று சந்தேகப்பட ஆரம்பித்தார்கள். அவர்கள் தங்கள் சந்தேகத்தை ஒருவருக்கொருவர் பரப்பத் தொடங்கினார்கள். இறந்த மாணவர்கள் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களாக இருந்தபடியால் சிலர் தங்களுக்குத் தெரிந்த யாழ்ப்பாண வளாக மாணவர்களைத் தொடர்புகொண்டு அன்றைய நள்ளிரவில் தாங்கள் கேட்ட துப்பாக்கி வேட்டு சத்தம் பற்றி தெரிவித்தார்கள். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலைப்பீட மாணவர் சங்கம் மிகப் பெரிய மாணவ அங்கத்தவர்களைக் கொண்டதுடன் வளாகத்திலேயே மிகவும் தீவிரமான செயற்பாட்டிலுள்ள ஒன்று.

செப்ரம்பர் 24ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு கலைப்பீட மாணவர் சங்கம் 2500 இளநிலை பட்டதாரி மாணவர்களை அணி திரட்டி ஊர்வலமாகச் செல்லவும் மற்றும் அதில் பங்குபற்றவும் ஏற்பாடு செய்திருந்தது. இந்த இரண்டு மாணவர்களின் விபத்து மரணம் என்பது சந்தேகமாக உள்ளது என்பதை சங்கம் கேள்விப் பட்டதும், அந்த சந்தேகம் விரைவாகவும் மற்றும் பரவலாகம் இணையத்தளம் மற்றும் குறுஞ் செய்திகள் மூலமாகவும் எங்கும் பரவத் தொடங்கியது. விரைவிலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்கள் யாழ்ப்பாண மருத்துவ மனைக்கு வந்து சேர்ந்து உண்மையில் என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள்.

இதற்கிடையில் இந்த இரண்டு மாணவர்களின் உடலையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், காவல்துறையினரால் வெளியிடப்பட்ட ஆரம்ப அறிக்கைகளுக்கு முரணான ஒரு கண்டுபிடிப்பை கண்டு பிடித்தார்கள். சட்ட வைத்திய அதிகாரியின் (ஜே.எம்.ஓ) பூர்வாங்க அறிக்கையில் இறந்த மாணவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டு காயங்களால் இறந்துள்ள அதேவேளை மற்றவர் தலையில் கடுமையாக மோதப்பட்டதினால் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப் பட்டிருந்தது.

சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளியிடப்படாத போதிலும், வைத்தியசாலையில் ஊர்ஜிதமற்ற செய்திகளைப் பரப்புவோரினால் குறைந்தது ஒரு மாணவர் ஆயினும் துப்பாக்கிச் சூட்டினால் இறந்துள்ளார் என்கிற தகவல் எங்கும் பரப்பப் பட்டது. இந்த செய்தி மாணவர்களுக்கு எட்டியதும் அவர்கள் மேலும் பரபரப்படைந்தார்கள். தமிழ் பட்டதாரி மாணவர்களை வேண்டுமென்றே கொலை செய்துவிட்டு பின்னர் தவறான பத்திரிகை அறிக்கை மூலமாக அதை நசுக்கிவிட்டார்கள் என்று காவல்துறையினரையும் மற்றும் அதைத் தொடர்ந்து அரசாங்கத்தையும் குற்றம் சாட்டத் தொடங்கினார்கள். முக்கியமாக இளநிலை பட்டதாரி மாணவர்களை உள்ளடக்கிய மூர்க்கத்தனமான பெரிய கூட்டம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு உள்ளும் மற்றும் அதைச் சுற்றியும் வந்து குவியத் தொடங்கிற்று. நிலமைகள் ஒரு மோசமான கெட்ட திருப்பத்தை நோக்கிச் சென்றிருக்கும் ஆனால் அதற்குள் ஜனாதிபதி மைத்திரிபால அதில் தலையீடு செய்துவிட்டார்.

சுற்றுச்சூழல் அமைச்சுக்கும் பொறுப்பாக உள்ள ஜனாதிபதி அந்த நேரத்தில் திருகோணமலை மாவட்ட சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும் அத்துடன் அந்த பல்லின மக்கள் வாழும் மாவட்டத்தில் மர நடுகை நிகழ்வினை அங்குரார்ப்பணம் செய்வதற்காகவும் திருகோணமலையில் இருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் மற்றும் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களும் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். மதிய உணவு அருந்தும் வேளையில் ஜனாதிபதி யாழ்ப்பாணச் சம்பவம் பற்றி சம்பந்தனிடம் சுருக்கமாகத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவரிடம் இன்னும் அதிகமானவற்றை கண்டுபிடிக்கும்படி கேட்டுக் கொண்டார். வெளிப்படையாக பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்ப்பாண மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதையிட்டு ஜனாதிபதி எச்சரிக்கப்பட்டிருந்தார்.

மறுபக்கத்தில் சம்பந்தன், அந்த நேரத்தில் கொழும்பில் இருந்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மற்றும் ரி.என்.ஏ யின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனைத் தொடர்பு கொண்டார். சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் இருந்த யாழ்ப்பாண மாவட்ட மூத்த ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினரும் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவருமான சோமசுந்தரம் மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டார். அத்துடன் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிவதற்காக சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் இருந்த உத்தியோகபூர்வ வட்டாரங்கள் பலவற்றையும் தொடர்பு கொண்டார். இதற்கிடையில் சேனாதிராஜாவும்கூட யாழ்ப்பாண மருத்துவமனைக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை அமைதிப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

விசாரணைகள் மேற்கொண்டதின் பின் ஒரு சட்டத்தரணியான சுமந்திரன், மாணவர்கள் விபத்தில் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் வெளியிட்ட தகவல் தவறானது என்பதை கண்டு கொண்டார். அவர் மேலும் குறைந்தது மாணவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டு காயத்தால் இறந்துள்ளார் என்கிற தகவலையும் பெற்றுக்கொண்டார். இது சுமந்திரனால் சம்பந்தனுக்குத் தெரிவிக்கப்பட்டது, அவர் அந்த தகவலை 21 ந்திகதி பி.ப 3 மணியளவில் திருகோணமலை மக்கெய்சர் அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குத் தெரிவித்தார்.

நிலமையை முற்றாக மதிப்பீடு செய்த ஜனாதிபதி சிறிசேனா உடனடி நடவடிக்கையை மேற்கொண்டார். அவர் பாதுகாப்பு செயலாளர் கருணசேன ஹெட்டியாராச்சி, காவல்துறை ஆய்வாளர் நாயகம்(ஐ.ஜி.பி) பூஜித ஜயசுந்தர மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோரை தொடர்பு கொண்டு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கினார். சம்பந்தனும் கூட ஐ.ஜி.பி பூஜித ஜயசுந்தரவுடன் பேசி நடந்த சம்பவம் பற்றி தனது கவலைகளை தெரிவித்தார்.

ரி.என்.ஏ பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் ஒரு சுருக்கமான ஊடக அறிக்கையை தயாரித்து அதை கட்சியின் ஊடக அலுவலகத்தின் ஊடாக வெளியிட்டார். ரி.என்.ஏ யின் பத்திரிகை செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப் பட்டிருந்தது:

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ), இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டு பல்கலைக்கழக மாணவர்களின் கொலை பற்றிய சம்பவத்தை ஐயத்துக்கு இடமின்றி வன்மையாகக் கண்டிக்கிறது. ரி.என்.ஏ யின் தலைவரும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான கௌரவ ஆர்.சம்பந்தன் பா.உ அவர்கள் அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் திருகோணமலையில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் வைத்து அவரைச் சந்தித்து இந்தச் சம்பவம் தொடர்பான கவலைகளை எழுப்பினார்.

அப்போது முதல் ஜனாதிபதியின் கட்டளையின்படி ஒரு விசேட காவல்துறைப் பிரிவு இந்தச் சம்பவம் பற்றி விசாரணை செய்வதற்காக பணிக்கப்பட்டுள்ளது, மற்றும் இந்தச் சம்பவத்துடன் தொடர்பு பட்டதாகச் சொல்லப்படும் காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கௌரவ.சம்பந்தன் அவர்கள் காவல்துறை ஆய்வாளர் நாயகத்துடன்(ஐ.ஜி.பி) தொடர்பு கொண்டு இந்தச் சம்பவம் தொடர்பாக தனது அதிருப்தியையும் தெரிவித்துள்ளார், அத்துடன் ஒரு பாரபட்சமற்ற ஒரு விசாரணையை நடத்தி உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஐ.ஜி.பி யிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவத்துக்காக ரி.என்.ஏ தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதுடன் மற்றும் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரியப்பட்டவர்கள் அனைவருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது”.

இதற்கிடையில் யாழ்ப்பாண நீதவான் சின்னத்துரை சதீஸ்வரன் குளப்பிட்டியில் “விபத்து” நடந்ததாகச் சொல்லப்படும் இடத்துக்குச் சென்று நீதவான் விசாரணையின் ஒரு பகுதியாக அந்த இடத்தை முழமையாகப் பரிசோதித்தார். அவர் உந்துருளியையும் வீதியிலும் மற்றும் ஒரு சுவரிலும் இருந்த இரத்தக்கறைகளையும் பார்வையிட்டார். நீதவான் பின்னர் யாழ்ப்பாண மருத்துவமனைக்குச் சென்று இறந்த மாணவர்களின் உடலையும் பார்வையிட்டார். மேலும் சட்ட வைத்திய அதிகாரியின் பூர்வாங்க பிரேத பரிசோதனை அறிக்கையையும் அவர் வாசித்தார்.

பின்னர் நீதவான் சதீஸ்வரன் ஒரு பகிரங்க தீர்ப்பை பதிவு செய்ததின் பின் இறந்தவர்களின் உடலை அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தினார். எனினும் நீதவான் அந்த உடல்கள் புதைக்கப்பட வேண்டும், தகனம் செய்யப்படக்கூடாது ஏனென்றால் எதிர்காலத்தில் அது மேலதிக விசாரணைகளுக்கு தேவைப்படலாம் என்கிற விசேடமான அறிவுறுத்தலையும் வழங்கினார். நீதவான் மேலும் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்களிடம் அமைதியாக கலைந்து செல்லுமாறும் மற்றும் நீதி தனது பணியை தொடர அனுமதிக்கும்படியும் கேட்டுக் கொண்டார். அநேக மாணவர்கள் நீதவானின் வேண்டுகோளுக்கு இணங்கி அங்கிருந்து சென்றார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபாலவின் செயல்திறன்மிக்க முனைப்பு காரணமாக விஷயங்கள் விரைவாக நடைபெறலாயிற்று. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரியிடம் குளப்பிட்டியில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் விசாரிக்கும் பணி ஒதுக்கப்பட்டது. மருத்துவமனை அதிகாரிகள்கூட தொடர்பு கொள்ளப்பட்டார்கள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையும் பெறப்பட்டது. விசேட சி.ஐ.டி அதிகாரிகள் குழு ஒன்று மேலும் விடயங்களை ஆராய்வதற்காக அவசரமாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டது.

அத்தகைய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் கடமையில் இருந்த ஐந்து காவலர்களும் கைது செய்யப்பட்டார்கள் மற்றும் மேலும் விசாரணைகள் நிலுவையில் உள்ளவரை அவர்களின் சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டது. காவலர்கள் ஐவரும் யாழ்ப்பாண நீதவான் முன்பாக ஆஜர் செய்யப்பட்டபோது, நீதவான் அவர்களை நவம்பர் 4 வரை காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். காவல்துறையினரின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக நீதவான் அந்த ஐந்து பேரையும் அனுராதபுரத்தில் தடுத்து வைக்கும்படியும் தேவையேற்படும்போது யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரும்படியும் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்பின்னர் ஒரு புதிய பத்திரிகை அறிக்கை தகவல் துறையினரால் வெளியிடப்பட்டது. அந்த பத்திரிகை அறிக்கையில் பிரேதப் பரிசோதனை நடத்தப் பட்டதையும் அந்த ஐந்து காவல்துறை காவலர்களும் கைது செய்யப்பட்டதுடன் உடனடியாக சேவை இடைநீக்கம் செய்யப்பட்டதும் தெளிவு படுத்தப்பட்டிருந்தன. “இது தொடர்பாக சட்டம் ஒழுங்காக நடைமுறைப் படுத்தப்படுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக” அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கா மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்கா ஆகியோர் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெற்றபோது நாட்டில் இருக்கவில்லை. அவர்கள் ஐந்து நாட்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு புரூஸல்ஸ் சென்றிருந்தார்கள். இருவரும் ஒக்ரோபர் 21 ந்திகதி இரவு நாடு திரும்பியபோது நிலமை பற்றி முழுதாக அறிவிக்கப்பட்டது. இருவரும் இந்தச் சம்பவம் பற்றி மிகவும் கவலை அடைந்ததுடன் தொடர்ச்சியாக ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தன் மற்றும் சுமந்திரனுடன் தொடர்பு கொண்டார்கள். நீதியை நிலைநாட்டுவதற்கான கட்டாயம் மற்றும் தேவையற்ற இன ஆத்திரமூட்டல்களை தவிர்ப்பதற்கான தேவை ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு நுட்பமான சமநிலையை அரசாங்கம் பேணவேண்டியிருந்தது.

அதன்பின்னர் காவல்துறை செய்தித் தொடர்பாளர்களும் இந்த சம்பவம் பற்றி ஊடகங்களுக்கு அறிவிக்க ஆரம்பித்தார்கள். பழைய உத்தியோகபூர்வ பதிப்பான இரண்டு மாணவர்களும் விபத்தில் இறந்தார்கள் என்பதைப் போலன்றி புதிய பதிப்பாக உந்துருளியின்மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லப்பட்டது. உந்துருளியில் வந்தவர்களை நிறுத்தும்படி காவல்துறையினர் உத்தரவிட்டதை அனுசரிக்காமல் உந்துருளியை ஓட்டியவர் தப்பிச்செல்ல முயன்றுள்ளார். அதனால் காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். ஓட்டியவர் சுடப்பட்டதால் உந்துருளி சறுக்கி விழுந்தது. உந்துருளியை ஓட்டியவர் துப்பாக்கிச் சூட்டு காயங்களால் இறந்தார் மற்றும் பின்னால் இருந்தவர் விபத்தில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. முந்தைய பதிப்பு ஒரு விபத்து என்று இருந்தால் புதிய பதிப்பு தவறுதலாக நிகழ்ந்த ஒரு சூட்டுச் சம்பவம் என்பதாக இருந்தது.

ஒக்ரோபர் 20 – 21 ந்திகதி இரவில் யாழ்ப்பாணத்தில் என்ன நடந்தது என்பதைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்வதற்காக ஸ்ரீலங்காவிலுள்ள தகவலறிந்த வட்டாரங்களுடன் இந்த பத்தி எழுத்தாளர் பரவலாக தொடர்பு கொண்டார். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வட்டாரங்களின் தகவலின்படி, உந்துருளியை ஓட்டிய சுலக்ஷன் மார்பு அடிவயிறு மற்றும் தலை என்பனவற்றில் சூடு பட்டுள்ளார். அவர் துப்பாக்கிச் சூட்டு காயங்களால் இறந்துள்ளார். பின் இருக்கையில் பயணித்த கஜன், அவர் உந்துருளியில் இருந்து தூக்கி எறியப்பட்டபோது தலையில் ஏற்பட்ட காயங்களால் இறந்துள்ளார். எனினும் கஜனின் உடம்பிலும் ஒரு துப்பாக்கி ரவை பாய்ந்துள்ளது, ஆனால் அவர் அதன் காரணமாக இறக்கவில்லை. துப்பாக்கி ரவை சுலக்ஷனின் உடலைத் துளைத்துக்கொண்டு சென்று கஜனின் உடம்புள் பாய்ந்ததாக கண்டறியப் பட்டுள்ளது.

இந்த வெளிப்பாடு சரி என்றால் நிறுத்தும்படி கூறப்பட்ட உத்தரவை அவமதித்து சென்ற உந்துருளியின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக திருத்திக் கூறப்பட்ட காவல்துறையினரின் கதையின்மீது பலத்த சந்தேகம் எழுகிறது. உண்மையில் காவல்துறையினர் தப்பி ஓடிய பட்டதாரி மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தால் துப்பாக்கி ரவைகள் பின்னால் அமர்ந்திருந்த கஜன்மீது படாமல் முன்னால் அமர்ந்திருந்த உந்துருளி ஓட்டியான சுலக்ஷன்மீது எப்படிப் பட்டது? அதற்கு மேலும் பின்னால் இருந்து சுடப்பட்ட ரவை முன்னால் இருந்த சுலக்ஷன் மீது பட்டு அவரது உடம்பை துளைத்துக் கொண்ட பின்னாலிருந்த கஜனின் உடம்புக்குள் நுழைந்தது?

(தொடரும்)