தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை வென்றெடுப்பது_ இருப்பதை கொண்டு சமூக பொருளாத அபிவிருத்தி என்பதை விட தத்தமது புஜ பல பராக்கிரமத்தை காட்டுவது குடுமிபிடிச் சண்டை கழுத்தறுப்பு என்பனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னணி நிகழ்ச்சி நிரலாக இருந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் சம்பந்தர் அணிகளுக்கிடையிலான சச்சரவு தீவிரமடைந்திருக்கிறது
வடக்கு மாகாண சபையில் ஒரு பிரதி சபாநாயகரை நியமிப்பதற்கே குத்தி முறிகிறார்கள். கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றல் அன்றி நாட்டத்தில் கொள்ளாத சபையாக சீரழிகிறது. கிழக்கு மாகாண சபையைப் பற்றி பேசவே வேண்டாம். பெரும்பாலான தமிழ்மக்கள் பிரதி நிதிகள் அதிகாரபோதை பதவி சொகுசு ஊழலில் திளைக்கிறார்கள். போராடிய சமூகம் என்று சொல்லப்பட்டதில் கடைசியில் இவை தான் மிச்சம் வெட்டுவாழ்வீச்சு- வெடி துவக்குகளுடன்.
(Sritharan Thirunavukarasu)