ஜேஆர் காலத்திற்கு பின்பு இலங்கையில் தனக்கு வேண்டி ஒரு ஆளை அமெரிக்கா, இதன் நேச நேட்டோ அமைப்பு நாடுகளினால் இலங்கையில் தலமைப் பொறுப்பில் ஏற்படுத்த முடியவில்லை. கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்தது. இதன் வெளிப்பாடுதான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஒருவரை முன்னிலைப்படுத்தி இதற்கு கீழ் ரணில் விக்கரமசிங்காவை உருவாக்க ரணிலின்(ஐ.தே. கட்சியின்) 19 வது தோல்விக்கு பின்னரான ஒரு வெற்றியை எற்படுத்திய சூட்சமத்தின் பின்புலம் ஆகும். இதற்கு கொழும்பில் பாவித்த அலுவலகம் சாந்தி சச்சிசானந்தத்தின் அலுவலகம். இயல்பில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி சீன சார்பு இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கிற்கும் இந்திய ஆதரவு நிலைப்பாட்டையும் உடைய வெளிநாட்டுக் கொள்கையை உடையது.
இதன் முக்கிய காரணி இவர்கள் யாவரும் இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கம், உரிமை வழங்கல் என்பனவற்றை சிங்கள் பௌத்த மாயக் கண்ணாடியினூடு பார்க்கு ஓரே பாரi;வையை மட்டும் கொண்டிருக்கின்றன. அதிகாரம் கூடிய சுயாட்சியிற்கு மற்றைய எந்த நாடுகளையும் விட இந்தியாவே தமிழ் தரப்பிற்காக குரல் கொடுக்கவல்லதும் அழுத்தம் கொடுக்கும் நிலையில் இருந்தது. இதற்கு முக்கிய காரணம் இலங்கையில் அமைவிடத்திற்கான பூகோளக் காரணியாகும்.
இதனை ஆயுதப் போராட்ட கால கட்டத்தில் இலங்கை அரசுகள் அதிகம் உணர்ந்திருந்ததினால் இந்திய அரசின் இந்த ஆதரவு நிலைக்கு கடிவாளம் கட்டவேண்டி தேவை இலங்கை அரசிற்கு இருந்தது. இதற்கு மகிந்த கண்டுபிடித்த தந்திரோபாயம்தான் யுத்தத்தின் பின்னராக சீனாவுடனான அதிக நட்பு முறை உறவுகள். இதற்கான மந்திர ஆலோசனைகள் டயான் ஜெயத்தில போன்ற புத்தி ஜீவிகளால் மட்டும் அல்ல சீன சார்பு இடதுசாரிகளினாலும் மகிந்தாவிற்கு வழங்கப்பட்டது வெள்ளிடை மலை.
இதன் தொடர்சியாக இலங்கையில் சீனாவின் செல்வாக்கு வலயம் எகிறப்பாய இதற்கு கடிவாளம் போட இந்தியாவும் அமெரிக்காவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயற்படும் நலமை இருவருக்கும் தவிர்க முடியாமல் ஏற்பட்டது. ஆமெரிக்காவைப் பாவித்து சீனாவைக் கட்டுப்படுத்தல் பின்பு தனது செல்வாக்கை மட்டும் நிலைநிறுத்தல் என்ற இந்திய இரசின் காங்கிரஸ் கட்சியின் அதிக செல்வாக்கு செயற்பாடு மோடியின் வலதுசாரி செயற்பாடும் அமெரிக்காவின் மோடி மீது போடப்பட்டிருந்து தடை நீக்கமும் அமெரிக்காவிற்கு சாதகமான நிலைமைகளை இலங்கையில் ஏற்படுத்தியிருக்கின்றது இலங்கையிலும் இந்தியாவிலும் தேசிய நலன்களை முன்னிறுத்தும் ஏகாதிபத்திய அரசுகளின் தோற்றத்திற்கு முன்பு அழிகப்படாத ஒப்பந்தங்களை ஏற்படுத்தி இலங்கை போன்ற நாடுகளை தொடரந்தும் தனது கிடுகுப்பிடியினுள் வைத்திருக்க உதவும் ஒப்பந்தங்களை அவசரமாக ஏற்படுத்துவதே தற்போதைய அமெரிக்க, அதன் நேசநாடுகள் இலங்கையுடன் எற்படுத்திக்கொள்ள முனையும் ஒப்பந்தங்கள் ஆகும்.
தமிழர் தரப்பும் இணக்கமான செயற்பாட்டை இலங்கை அரசுடன் கொண்டிருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன அவர்கள் அமெரிக்காவின் மீட்போன் பாத்திரத்தை நம்பும் வலதுசாரிகளாக எப்போதும் போல் செயற்படுபவர்கள். இதுவும் அமெரிக்காவிற்கு தெரியும் மேலும் தாம்பாளத்தில் ‘காணமல் போன’ பிரபாகரனை கொண்டுவந்து தருவார்கள் என்ற நம்பிக்கையூட்டல்களும் போர் குற்றிவிசாரணையும் இதற்கான கண்துடைப்புக்களே.
ஆகவேதான் கூறுகின்றோம் ரணில் விக்ரமசிங்க மீறப்பட முடியாத நீண்டகாலம் செல்லுபடியாகும் ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையை அமெரிக்காவிடம் விற்றுவிடுவார் போலத் தோன்றுகின்றது என்று(தனித்தனியாக ஒப்பந்தங்களின் பெயர்களை குறிப்பிடாமல் பொதுமையாக குறிப்பிட்டதன் காரணம் இது எல்லா வகை ஒப்பந்தங்களுக்கும் பொருந்தும் என்பதினால்)