இதுதான் பெட்ரோல் நிலையத்தை ஏன் தேர்வு செய்தார்? கோடிக்கணக்கான லிட்டர்கள் விற்றாதக சொல்லி 500.1000 நோட்டுகள் மாற்றப்படும். அம்பானி போன்ற முதலாளிகளுக்காதான் இந்த ஏற்பாடு. கருப்பு பணம்லாம் ஒன்றும் ஒழியாது, வெளியேயும் வராது. மாறாக கருப்பு பணம் வெள்ளை பணமாக மாறும். இதனால்தான் முதலாளிகள், பணமுதலைகள் வரவேற்கின்றன. 1000, 500ஐ மாற்ற முடியாமல் நம்மை போன்ற நடுத்தர வர்க்கமும், ஏழைகளும்தான்.
மத்திய அரசின் ரூ. 1000 – ரூ 500 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்த திட்டத்தால் கறுப்பு பணத்தையும் பிடிக்க முடியாது, கள்ளப் பணத்தயும் ஒழிக்க முடியாது. இந்த திடீர் அறிவிப்பு மக்களை பெரும் துயரிலும், பீதியிலும் ஆழ்த்தியுள்ளது. கையில் காசு இருந்தும் மக்கள் உணவுக்கும், பொருளுக்கும் அல்லாடும் அவல நிலைக்கு தள்ளியுள்ளது. கடந்த நான்காண்டுகளில் பொதுத்துறை வங்கிகளால் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவர்களின் விவரத்தை வெளியிட மத்திய அரசு தயாரில்லை.
ரூ. 500 கோடியும் அதற்கு மேலும் வங்கிக் கடன் வாங்கி வசதியிருந்தும் திருப்பி கட்டாதவர்களின் பெயரை வெளியிட உச்ச நீதிமன்றம் பணிக்கிறது. மறுக்கின்றன மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும். அது பரம ரகசியமாம். அதை வெளியிட்டால் அந்த பெரிய மனிதர்கள் பாதிக்கப் படுவார்களாம். இவர்களா கறுப்பு பண்த்தையும் கள்ளப்பணத்தயும் ஒழிக்கப் போகிறார்கள்? இன்னுமா இந்த ஊர் பிரதமர் மோடியை நம்புகிறது?
-இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன்