(அஜந்தா ஞானமுத்து)
கடந்த பலவருடங்களாக போரின் பின்பும் முன்பும் கிழக்குமாகாணம் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கள் இனரீதியாகவும் காணிஅத்துமீறல்கள் கல்வி பின்னடைவு மற்றும் கலாசார சீரழிவுகளினால் மிகவும் பாதிக்கப்பட்டு எமது இனம் சின்னா பின்னப் பட்டுப்போயுள்ளதை நாம் அறிவோம். போரில் வென்று அரசாங்கம் ஒட்டுமொத்த பிரசைகளும் சமமாகவும் சமதர்மநீதியின் கீழ் நல்லாட்சி அரசில் சகலஉரிமைகளும் இலங்கை மக்களுக்கு வாழ வழிகிடைக்கும் என்னும் உத்தரவாதத்துடன் பத்தாண்டுகள் கடந்து விட்டன.
மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் தமிழ் அரசியல்வாதிகள் தெரிவு செய்யப்பட்டு அரசில் எதிர்க்கட்சியில் அதன் தலைவராக தமிழர் ஒருவர் இலங்கை அரசியலில் இரண்டாவது தடவையாக சரித்திரம் படைத்துள்ளார் எனபதுவும் உண்மையே. மாகாண ஆட்சியும் அவ்வாறே கிழக்கில் இணைந்து அரசுடன் சேர்ந்து செயல்படுகின்றது. ஆனால் இந்த தமிழ் அரசியல்வாதிகளும் அதன் தலைமையும் மீண்டும் முப்பதாண்டுகளின் முன்னிருந்த அரசியல் தலைமைகள் போல் முருங்கை மரத்தில் ஏறி மிக இறுக்கமாக அதனைக் கட்டிப்பிடித்துக் கொண்டுள்ளமை தமிழர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
மேலும், இப்பிரதேசங்களில் உயர்பதவிகளில் இருக்கும் ஒருசில அரச அதிகாரிகள் இன்னமும் தங்கள் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவும் தங்கள் குடும்பம் பிள்ளைகள் வெளிநாட்டு வைத்திய படிப்பு உறவினரின் சுயநலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு வருமானமும் பாதுகாப்பும் கிடைக்கககூடிய அரசியலவாதிகளுடன் இறுக்கமாக இணைந்து கொண்டு தமிழினத்துரோகங்களை மேற் கொண்டுவருகின்றனர்.
வாகரைப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தை மையமாக வைத்து தங்கள் அரசியல் அதிகாரத்தை துணைகொண்டு பல காணிகளில் அத்துமீறிய குடியேற்றங்களை செய்கின்றனர். வாகரை கதிரவெளி காயான்கேணி மாங்கேணி கிருமிச்சை மேவாண்டகுளம் வாகனேரி புனாணை போன்ற பகுதிகள் இதில் அடங்குகின்றன. இதற்கு பல அரசியல் காரணங்கள் உள்ளன. தங்கள் குடியேற்றத்தை விரிவுபடுத்தல் அடுத்து சனத்தொகைபரம்பலை வைத்து அதன் அடிப்படையிலான அரச அலுவலகங்கள் மற்றும் அரசியல் பிரிவுகளை ஏற்படுத்துதல். இதன் மூலம் தமிழர் அதிகம் வாழும் கற்குடா தொகுதியினை முஸ்லீம்களின் தொகுதியாக மாற்றுவதே ஆகும்.
பிற இனத்தவர்கள் தாமாக நம்மை நசுக்குகின்றார்களா? என்றால் அதற்கு பதில் இல்லை! என்றே நான் சொல்வேன். காரணம் அதற்கான ஆலோசனைகளை மட்டுமன்றி அவர்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்ற அறிவுரையையும் வழங்கி அதற்கான உத்தியோகபூர்வமான நடவடிக்கைகளையும் இந்த ஒருசில அரசாங்க தமிழ் உயர் அதிகாரிகளே அந்த இனத்துரோகச் செயல்களை தொடர்ச்சியாக செய்கிறார்கள் என்பதே மிகவும் வேதனை தரக்கூடிய உண்மையாகும். துரோகிகள் காட்டிக்கொடுப்பவர்கள் என்றெல்லாம் தமிழர் வரலாற்றுக்காலத்திலிருந்து பேசப்பட்டு வந்தாலும் இப்படியான மிகவும் கீழத்தரமான செயலை செய்பவர்களை குறிக்கும் ஒரு புதிய சொல் தமிழில் உருவாக வேண்டும்.
இலங்கை அரசியலில் மட்டுமன்றி அரசாங்க சேவையில் நன்மதிப்புடன் செயலாற்றி இன்றும் பல ஆண்டுகள் சென்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர்கள் பலர். அவர்களை நாம் பட்டியலிட்டு கூறமுடியும். அவர்களது சேவையும் மக்களை மதித்து செயலாற்றிய அவர்களது அரசியல் அறிவும் என்றும் எம்மவர்களால் பேசப்படுகின்றது. ஆனால் தமிழினவிரோத செயல்பாடுகளைச் செய்த அரசியல்வாதிகள் அவர்களது குடும்பம் அவர்களது பிள்ளைகளை இன்றும் கிழக்குமக்கள் மிகவும் வெறுப்புடன் நோக்குவதையும் காணக் கூடியதாகவுள்ளது. காலம் கடந்தாலும் வரலாறு என்றும் மாறாது.
பலகால வரலாறுகளைத் தாண்டி கடந்த இரண்டு வருடங்களாக மட்டக்களப்பு அம்பாறை ஆகிய இருமாவட்டங்களிலும் தமிழ் மக்களை பிளவுபடுத்தி அவர்கள் காணி வயல்நிலங்கள் கல்வி வலையங்கள் பிரதேசசபை எல்லைகள் மற்றும் கலாசார சீரழிவுகளை யாவும் மிகவும் திட்டமிட்டு கபளீகரம் செய்து வருகின்றது ஒருஇனம். அதற்கு சில அரசியல்வாதிகள் உட்பட அரச அதிகாரிகள் சில பொதுமக்களும் உடந்தையாக இருப்பது நமது மக்களுக்கு தெளிவாக விளங்குகின்றது.
இவை யாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மில் பலர் அரசியல் பலமின்மையும் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்ளவும் தங்கள் பாட்டில் பேசாமல் இருக்கின்றார்கள். ஒருசிலர் சமூகவலைத்தளங்கள் ஊடாகவும் தொலைபேசி மூலமும் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். இன்னமும் சிலர் ஒருபடி மேலே சென்று சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மிக சாணாக்கியமாக எடுத்தும் உள்ளனர்.
போர்முடிவுற்று கடந்த 10 வருடங்களாக மக்கள் இயல்புவாழ்க்கையில் தம்மை இணைத்துக்கொள்ள படிப்படியாக முயன்று வருவதனை இன்றும் காணக் கூடியதாகவுள்ளது. 35 வருடங்கள் ஒட்டு மொத்த வாழ்வியலையே புரட்டிப்போட்ட இந்த புரையோடிப்போன நிகழ்விலிருந்து மீண்டுவர பலகாலம் செல்லலாம்.
நான் நாட்டைவிட்டு எதிர்பாராத காரணத்தினாலும் பலவந்தமாக புலம் பெயர நேர்ந்தாலும் கடந்த 32 ஆண்டுகளில் சுமார் 13 தடவைகள் மட்டக்களப்பிற்கு சென்று வந்துள்ளேன். எனது பயணத்தில் பெரும்பாலும் சமூகநலன் நோக்கிய விபரங்களை திரட்டுவதில் செலவழித்துள்ளேன். கடந்த வருடமும் அவ்வாறே சென்று ஏற்கனவே நான் தொடர்ச்சியாக சமூக அக்கறையுள்ள பலரையும் சந்தித்து திரும்பினேன்.
இவ்வருடம் மேமாத்தில் தாயகத்தில் எனக்கு ஏற்பட்ட சில தொடர்புகளின் மூலம் அங்கு ஒருமாற்றம் நிகழ்ந்துகொண்டிருப்பதை அறிந்து வியப்புற்றேன். அந்த மாற்றத்திற்கான காரணத்தையும் அதில் ஈடுபட்டுச் செயலாற்றுபவர்களையும் கண்டு மிகவும் மகிழந்தேன். அதனை மேலும் பலப்படுத்தி அதற்கான ஒத்தாசையை வழங்கவேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த செப்ரம்பர் 13ந்திகதி மீண்டும் மட்டக்களப்பு சென்றேன்.
முதலில் எனது பயணம் வடமாகாணத்தை நோக்கியதாக அமைந்தது. 34 வருடங்களின் பின் அந்தமண்ணை மீண்டும் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. அழிவுகள் மனவேதனைகள் சுமைகள் பாதிப்புகள் தடையங்கள் யாவும் எனது புகைப்படக்கருவியிலும் மனதிலும் ஆழமாகப் பதித்துக் கொண்டேன். குண்டுகள் துளைக்காத எந்த ஒருமரமும் அங்கு காணப்படவில்லை. மூன்று மாவட்டங்களுக்கும் மூன்று நாட்கள் பயணம் மனதில் மிகப்பெரிய பாரத்துடன் நீண்ட பெருமூச்சிற்கு பின் மீண்டும் கிழக்கு நோக்கிய எமது நடவடிக்கைளுக்காக தயாரானேன்.
கிராமங்களிலும் காடுகளிலும் வாழும்மக்கள் பொருளாதாரப் பிரச்சனைகளாலும் பிள்ளைகளின் அன்றாட கல்விக்கும் முகம் கொடுக்க முடியாமலும் வளர்ந்து வரும் சமூக பொருளாதார மாற்றத்தினை சமாளிக்க முடியாமலும் மிகவும் மன அழுத்தங்களுடன் பல இன்னல்களை தினம் தினம் அனுபவிக்கின்றனர்.
அதனால் இவர்கள் எதிர்பாராத பல அதிர்ச்சியான முடிவுகளையும் எடுக்கின்றனர். மதமாற்றம் வெளிநாடு செல்லல் விபச்சாரம் குடும்பக் கொலைகள் அல்லது தற்கொலை போன்ற முடிவுகள் நமது சமூகக் கலாசாரத்தினை மிகவும்சீரழிவிற்கு இட்டுச்செல்வது தினமும் நம்பகுதிகளில் காணக்கூடிய வேதனைதரும் சம்பவங்களாகும்.
மிகவும் வறியநிலையில் பின்தங்கிய பிரதேசங்கள் மட்டுமன்றி நகரப் புறங்களை அண்டிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் பணம் கொடுத்து மதமாற்றப்படுகின்றனர். அதைவிட விதவைகளை தாங்கள் மறுமணம் செய்வதாகக் கூறிக் கொண்டு இளம் விதவைகள் மட்டுமன்றி வயது வந்த 12 வயது முதல்கொண்டு இளம் சிறுமிகளையும் பணத்தைக் கொடுத்து மணம்முடித்து தங்கள்பகுதியில் வாழவைக்கும் நடவடிக்கைகளில் ஒருஇனம் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அப்படி மணம் முடித்து சென்ற மதம்மாறிய தமிழ்ப் பெண்கள் 2 அல்லது 3 குழந்தைகளைப் பெற்றவுடன் மணமுடித்த ஆண் அவர்களை கைவிட்டு வேறு தமிழ்பெண்களை தேடிச் செல்கின்றனர். அதனால் அவர்களது சனத்தொகையில் பாரியளவில் பெருக்கமும் நமது சனத்தொகையில் வீழ்ச்சியும் மிக இழிவான கலாசார சீர்கேடுகளும் தற்போது நம்மண்ணில் புரையோடிப் போயுள்ளன. காரணம் விதவைகளுக்கான தேவைகளையும் அவர்களுடைய அன்றாடப் பிரச்சனைகளிலும் நமதுசமூகம் அக்கறை கொள்ளாததே இதற்கான முக்கிய காரணமாகும்.
அண்மையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் இறந்த தனது கணவனை தனது வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாமல் தத்தளித்த ஒரு பெண் முஸ்லீம் நபரின் உதவியால் அவரது பிரேதத்தை எடுத்துச் சென்றுள்ளார். பிரேதத்தை இறக்கியதும் அதற்கான கூலியைத் தருமாறு வற்புறுத்த அந்தப் பெண் தன்னிடம் காசு இல்லை நீ இலவசமாகத்தானே கொண்டு வந்து தருவதாகக் கூறினாய் இப்போது பணம் கேட்கிறாயே? எனச் சொல்லிய போது அதை மறுத்த அந்த நபர் அவளது வீட்டிற்கான உறுதியை தருமாறு பெற்றுச் சென்ற கொடுமையும் நடைபெற்றது யாவரும் அறிந்ததே.
இவை தவிர மிகவும் அதிர்ச்சி தரும் சம்பங்கள் சில நமது தமிழ் ஊருக்குள் நடைபெறுகின்றன. பொருளாதாரத்தால் பாதிக்கப்படும் தமிழ்யுவதிகளை வெளிநாடு அனுப்புவதாக கூறி அவர்களை பாலியலில் வல்லுறவிற்கு ஈடுபடுத்தி பின்னர் இரகசியமாக அந்த இளம்தாய், பிள்ளையை பெற்றபின்னர் வெளிநாடும் அனுப்பப்படாமல் தொடர்ச்சியான பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள். அவள் மட்டுமன்றி அவளது வயது வந்த பிள்ளைகள் மட்டுமன்றி சகோதரங்களைக் கூட சில நபர்கள் அவர்களை பயமுறுத்தி தமிழ்ஊருக்கள் அவர்களது வீட்டியிலேயே இந்த கொடுமையான சம்பங்கள் நடைபெற்று வருவது நீங்கள் அறியாத ஒன்று. பல கிராமங்களில் நன்நடத்தை அதிகாரிகளால் பலர் தற்போது அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டுள்ளார்கள். இருந்தும் பல ஊர்களில் இப்படியான அநாகரிகமான செயல்கள் இன்னமும் நடைபெற்றே வருகின்றன என்பது நமது அடிவயிற்றையே கலக்கும் விடையமாகவுள்ளன.
பின்தங்கிய கிராமங்கள் மற்றும் நகரங்களை அண்டிய பிரதேசங்களில் வாழும் மிகவும் வறுமையில் வாடும் குடும்பங்களையும் மற்றும் பணம் நாகரிக மோகத்தால் வெளிநாடு செல்ல முயலும் பெண்களையும் குறிவைத்து அந்த இனம் தங்கள் பணம் என்னும் அஸ்திரத்தைப் பிரயோகிக்கின்றனர். இதில் வசப்பட்டவர்கள் மாட்டிக்கொண்டவர்கள் அவர்களிடமிருந்து விடுபடாதபடி சில புகைப்படங்களையும் கையெழுத்து பத்திரங்களையும் பெற்றுக் கொள்கின்றனர். அதனை வைத்துக் கொண்டு அவர்களை மிரட்டியும் அவர்களது சொத்துக்களையும் பாலியல் சுகத்தையும் இலவசமாக அனுபவிக்கின்றனர். மிகக்கொடுமையான பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படும் இவ் அப்பாவித்;தமிழ்ப்பெண்கள் தொடர்ச்சியான அழுத்தங்களாலும் மேலும் பணத்தை பெற்றுக் கொள்வதாலும் அவர்களின் உறவுப்பெண்களையும் ஏன் தாய் மகள் பேரப்பிள்ளைகளையும் ஒரேவீட்டில் வைத்து இந்த திட்டமிட்டபாலியல் அடிமை வலைக்குள் அவர்களைக் கட்டிப்போட்டுள்ளனர். இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் சிலஊரின் உள்ளும் எல்லையிலும் இந்த அடிமைத்தனமான கொடுமை வெளியுலகத்திற்கு தெரியாமல் மிக ரகசியமாக நடைபெற்று வருகின்றது.
மேலும் பல இளம் பெண்கள் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் படிப்பினைக் கைவிட்டு வேலை தேடவேண்டிய நிலைக்குள்ளாகின்றனர். பெரும்பாலும் மட்டக்களப்பு கல்முனை காத்தான்குடி ஏறாவூர் ஓட்டமாவடி போன்ற பகுதிகளில் சுமார் 250 திருமணமாகாத இளம் பெண்கள் அவர்கள் கடைகளில் வேலை செய்கின்றனர். இதன்போது தங்கள் மானம் மரியாதை யாவற்றையும் துறந்து பணத்திற்காக.
(இந்தக் கட்டுரையில் உள்ள செய்தியிற்கு இதனை ஆக்கியவர் ஆதாரங்கள் இருப்பதாக கூறுகின்றார். இப் பதிவுகளுக்கு அவரே முழுப் பொறுப்பும் ஆகும்)