கியூபாவின் முன்னாள் பிரதமர் பிடல் காஸ்ட்ரோவின் மரணத்துக்கு, கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அளித்த அஞ்சலி மூலமாக, சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ட்ரூடோவுக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமரின் அறிக்கையில், “கியூபாவில் நீண்டகாலம் ஜனாதிபதியாக இருந்தவரின் மரணம் குறித்து அறிந்து, ஆழ்ந்த கவலையடைந்தேன். பிடல் காஸ்ட்ரோ, தனது மக்களுக்காக அரை நூற்றாண்டு காலமாகச் சேவையாற்றிய, அற்புதமான தலைவர் ஆவார். அற்புதமான புரட்சியாளரும் பேச்சாளருமான பிடல் காஸ்ட்ரோ, அவரது நாட்டின் கல்வியிலும் சுகாதாரத் துறையிலும் கணிசமான முன்னேற்றங்களை வழங்கினார்.
“எனது தந்தை, அவரை நண்பர் என அழைப்பதில் பெருமையடைந்தார் என்பதை நான் அறிவேன். எனது தந்தை காலமானபோது, பிடலைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது” என்று அவரது அறிக்கையில் குறிப்பிடத்தப்பட்டிருந்தது.
அவரது இந்த அறிக்கை, ஏனைய மேற்கத்தேயத் தலைவர்களை விட, காஸ்ட்ரோவைப் புகழ்வதாக அமைந்திருந்தது. அவரது தந்தைக்கும் அவருக்கும் இடையில் காணப்பட்ட நட்பு, அதில் தாக்கல் செலுத்தியிருந்தது. இந்நிலையில், பிரதமர் ட்ரூடோவின் கருத்துக்கு, கனடாவுக்கு உள்ளேயும் வெளிநாடுகளிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்க குடியரசுக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதிப் போட்டியாளரும் செனட்டருமான மார்க்கோ றூபியோ, கியூபா மரபுரிமையைக் கொண்டவர் என்ற நிலையில், பிரதமர் ட்ரூடோவின் கருத்தைக் கடுமையாகக் கண்டித்தார். “இந்த அறிக்கை உண்மையானதா அல்லது பகடிக்குரியதா? கனேடியப் பிரதமரின் உண்மையான அறிக்கை இதுவென்றால், அது வெட்கத்துக்குரியதும் சங்கடத்துக்குரியதும் ஆகும்” என்றார்.
சமூக ஊடக வலைத்தளங்களிலும், பிரதமர் ட்ரூடோவின் அறிக்கைக்குப் பரவலான அளவில் கண்டனம் வெளியிடப்பட்டமையைக் காணக்கூடியதாக இருந்தது.
புதிதாக தெரிவு செய்யப்படடிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்றம் இற்கும் கனடியப் பிரதமருக்கும் இடையில் நல்ல உறவுகள் உருவாகுமா என்பது கேள்விகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இவரின் பிடல் காஸ்ரோ பற்றிய கருத்து அதிகம் கனத்திற்குள்ளாகின்றது. கடும் போக்காளரான ட்றம் கியூவுடனான உறவை மீள்ஆய்வுக்கு உள்படுத்துவார் என்று நம்பப்படும் நிலையில் கனடாவின் பிரதமருக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்குமான உறவில் விரிசல்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்f;கப்படுகின்றது ,இதனைச் சரிகட்ட கனடியப பிரதமர் பிடல் காஸ்ரோவின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதை தவிர்த்திருகின்றாரோ? என்றும் அரசியல் அவதானிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
(செய்திகளின் அடிப்படையில் சாகரன்)