(சுகன், விஜய பாஸ்கரன், சாகரன்)
சுந்தரத்தின் கொலையில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு .அமிர்தலிங்கத்திற்கு “நோக்கம் இருக்குமா ?” என ஒரு பலமான அல்லது லேசான அபிப்பிராயம் எப்போதும் இருந்துவந்திருக்கிறது .
அவரது புதியபாதை அரசியல் நிலைப்பாடுகள், அமிர்தலிங்கம் மீதான கடும் வெளிப்படையான விமர்சனம் என்பவை இவற்றிற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது ,இதனுடன் துரையப்பா கொலை பின்னணியும் சேர்த்து நோக்கப்படுகிறது அமிர்தலிங்கம் சுந்தரத்தின் மரணச்சடங்கில் கலந்துகொண்டிருக்கிறார் ,ஆனால் சுந்தரத்தை தனக்குத் தெரியாது நேரில் பார்த்ததில்லை என அவைக்கு தெரிவித்திருக்கிறார் .
பின்னொரு தகவலின்படி திருமதி மங்கையற்கரசி அவர்கள் பிரபாகரன் காலில் விழுந்து அழுததாகவும் இன்னொரு கதை உண்டு ,ஆனால் ஆனைக்கோட்டை போலீஸ் நிலையத்தின்மீதான வெற்றிகரமான முதலாவது தாக்குதல் பிரபாகரனை பெரிதும் வேதனைக்கு உள்ளாக்கியதாகவும் அப்படி ஒரு தாக்குதலை பிரபாகரனும் செய்வதற்கு முயன்று பார்த்திருக்கலாம் எனவும் அதில் மிகவும் தேர்ச்சி பெற்ற இராணுவ வல்லமை சுந்தரத்திற்கே உண்டு எனவும் ,புலிகளில் இத்தகைய தகுதிநிலை சுந்தரத்திற்கு மட்டுமே உண்டு எனவும் பிரபாகரன் சுந்தரத்தைச் சுடுவதற்கு இதுவே காரணமாக இருந்தது எனவும் இன்னொரு காரணம் சொல்லப்படுகிறது .
சாகரன் …மிகவும் தேர்ச்சி பெற்ற இராணுவ வல்லமை சுந்தரத்திற்கே உண்டு….- பிரபாகரன் நேரிடையாக ஆரம்பகாலங்களில் ஒருவரை சுடுவதற்கும் அந்த ஒரு காரணம் போதும். பின்நாட்களில் அவரின் கட்டளையின் பேரிலும் இது போன்ற கொலைகள் நடந்தன அது றேகன், அமீன், கபூர், முகுந்தன் (வட்டுக்கோட்டை)(இவர்கள் யாவரும் சர்வதேசப் பாசறை போராளிகள்) ஏன் கருணாவிற்கான குறி கூட இந்த வகையைச் சார்ந்ததே. பிரபாகரன் தாழ்வுச் சிக்கல் உள்ள ஒரு மனநோயாளியாகவே வாழ்ந்தான் பாவம் அவர் ஒரு நோயாளி ‘பரிதாபம்’ காட்டுங்கள்.
Vijaya Baskaran….. அன்றைய காலகட்டத்தில் கூட்டணி அரசியலுக்கு எதிராக இரண்டு பகிரங்க எதிரிகள் இருந்தார்கள்.ஒருவர் ஈழ மாணவர் பொது மன்ற தலைவர் டேவிட்சன்.இவர் மேடைகளில் கூட்டணியை விமர்சனம் பண்ணினார்.பல்கலைக் கழக மாணவர்களிடையே கூட்டணி மாயையை உடைத்தவர் டேவிட்சன்.மற்றவர் சுந்தரம்.கூட்டணி அரசியலுக்கு எதிராக பத்திரிகை தொடங்கியவர்.அதைவிட அன்று மதவாச்சியை வவுனியாவுடன் இணைக்க ஜே.ஆர் விரும்பினார்.இதை எதிர்த்து மக்கள் போராடினர்.கூட்டணியும் தன் பங்குக்கு உண்ணாவிரதம் இருந்தது.இதில் மறைமுகமாக அமிர் ஜே.ஆருடன் பேசி அந்த இணைப்பை தற்காலிமாக நிறுத்தி வைத்தார்.அதை தமது வெற்றியாக கூட்டணி கொண்டாடியது.இதன் சூழ்ச்சியை சுந்தரம்,அறிந்து அநிரையும் கூட்டணியையும் கடுமையாக விமர்ச்சித்தார்.இதுவே அவரை கொலை செய்ய தூண்ட காரணம்(மதவாச்சி சி இணைப்பு விவகாரம்)
சாகரன்…… தமிழர் விடுதலைக் கூட்டணியை அம்பலப்படுத்துவதில் ஈபிஆர்எல்எவ் இன் மாணவவர் அமைப்பு மிக முனைப்பாக செயற்பட்டது கிராமங்கள் தோறும் சிறு சிறு அரசியல் கூட்டங்கள் நடாத்தியது இதில் பல்வேறு அதன் உறுப்பினர்கள் செற்பட்டனர் இவர்களே பின்னாளில் இந்த அமைப்பின் முக்கிய போராளிகளாக உருவெடுத்தனர் இன்று வரை போராட்டதிலும் இருக்கின்றனர். யாழ் திறந்த வெளி அரங்கில் நடைபெற்ற மேதினக் கூட்டம் ஈபிஆர்எல்எவ் இன் வெகுஜன அமைபபுக்களால் நடாத்தப்பட்டது பாதுகாப்பு காரணங்களுக்கான ஈழமாணவர் பொது மன்றம் மட்டும் முன்னிலைப்படுதப்பட்டது.
இதே வேளை வசதியான மே தினக் கூட்டததை வீரசிங்கம் மண்டபத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி நடாத்தியது இதில் அமிர் பேசும் போது திறந்த வெளியரங்கு கூட்டத்தைச்சாடி’ …சில தம்பிமார் வெளிநாடுகளிலிருந்து சிவப்பு தத்துவங்களை இறக்குமதி செய்திருக்கின்றார்கள்…’ என்று தொனிப்பட எள்ளி நகையாடிப் பேசினார்…” இது 1979 -80 களில் நடைபெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியை மக்களிடம் அம்பல்படுத்தியவர்கள் ஈபிஆர்எல்எவ் இனர் இதன் தலைவராக பத்மநாபா இருந்தார். கருத்து முரண்பாடுகளை கருத்துக்களால் மட்டும் சந்தித்தபடியால்தான் அமிரை புலிகள் கொன்ற பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணி கூட செத்தவீடு நிகழ்வை நடத்த பயந்திருந்த வேளையில், அமிரின் உடலை தமிழ் பிரதேசம் எங்கும் மக்களின் மரியாதைக்காக எடுத்துச் சென்று இறுதியில் அடக்கம் செய்தது பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் ஆகும்.