(சாகரன்)
ஈழவிடுதலைப் போராட்டம் சாராம்சத்தில் இரு அம்சங்களின் அடிப்படையில் ஆரம்பமானது என்பதே உண்மைநிலை ஒன்று வெறும் தேசியவாதம்(வெறி என்று கூறுவது சிறப்பாக இருக்கும்) அடிப்படையில் உருவாக்கம் பெற்றது இது தமிழர் விடுதலைக் கூட்டணியால உசுப்பேத்தப்பட்டு மரம்பழுத்தால் வெளவால் வரும் என்பதை நம்பி ஆமாற்து துப்பாக்கி தூக்கிய நிலை .ந்த போக்கை புலிகள் ரெலோ புலிகளில் இரந்தபிரிந்த புளொட் என்பன பெரிதும் தமக்குள் கொண்டிருந்தன.(புளொட் என்ற அமைப்பின் தோற்றத்தின் பின்பு(இடதுசாரி சிந்தனையாளர் சிலர் இதற்குள் உள்வாங்கப்பட்டது உண்மைதான்).
மற்றைய அணி இடதுசாரி சிந்தனைகளால் உந்தப்பட்டு இலங்கையில் உள்ள தமிழ் பேசும் உழைக்கும் மக்களும் சிங்களம் பேசும் உழைக்கும் மக்களும் இணைந்து பாட்டாளிவர்க்கப் புரட்சிக்காக போராடுவதற்குரிய நிலமைகள் இல்லாத அளவிற்கு பேரினவாதத்தின் வளர்ச்சியடைந்து இருந்தததினால் ஒட்டு மொத்த புரட்சியின் முதல்வடிவமாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை நடாத்துவது (இதற்கு இவர்கள் வைத்த தீர்வு ஈழம் அமைத்தல்) என்று புறப்பட்டவர்கள் இதில் ஈரோஸ் இதிலிருந்து கொள்கை அடிப்படையில் பரிந்து உருவான பத்மநாபா தலமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். விசுவானந்த தேவன் தலமையிலான என்.எல்.எவ்.ரி இதனைத் தொடரந்த பி.எல்.எவ்.ரி போன்றவற்றைக் குறிப்படலாம்.
இதில் ஈரோசின் உயர் பீடத்தின் செயற்பாடளராக இடதுசாரியா செயற்பட்டவர் தோழர் ராஜி. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட ஈரோஸ் இன் பிரிவனராக புலிகளின் செயற்பாட்டை நிராகரித்தவர் தோழர் ராஜி. பாலகுமாரன் ஏனைய அமைப்புக்கள் புலிகளால் தடை செய்ததை மௌனத்தின் மூலம் ஆதரித்து பின்பு புலிகளுடன் சங்கமம் ஆனவர். ஆனால் ராஜி அவ்வாறு செயற்படவில்லை. விடுதலை அமைப்புக்கள் இணைந்து எற்படுத்திய ஐக்கிய முன்னணி(ENLF) கூட்டத்தில் பல தடவை சந்தித்த அனுபவங்கள் உண்டு. ஒரு மேற்கத்திய ‘சாயல்’ இவரிடம் இருந்ததும் ‘அப்பிள்’ பிரியரான இவருக்கு அருகில் தோழமையுடன் நெருங்க சற்று சங்கோஜமான மனநிலை எனக்கு இருந்தது. இந்திய புலனாய்வுபிரிவினருடன் நல்ல உறவில் இருந்தவர் என் பெயர் இவருக்கு உண்டு.