முரளி (கிங்கோ) ஆவரங்காலைச் சேர்ந்தவர். ஐரோப்பாவில் இருந்துவிட்டு புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டர்.. 84ம் ஆண்டு தை மாதம் இவருடைய வீட்டில்தான் பண்டிதர் என்ற புலிகளின் முக்கிய உறுப்பினர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டார். புலிகள் அப்போது தலைமறைவாக இருந்து தாக்குதல்கள் நடத்திய காலம். முரளி ,திலீபனும் கூட்டங்கள் வைப்பது வழக்கம். உரும்பிராய் மேற்குப்பகுதியில் ஒருநாள் இரவில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தப்பகுதி புளொட் இயக்கத்தினரின் ஆதிக்கத்தில் இருந்த பகுதி. திலீபனை புளொட் இயக்கத்தினர் கேள்விகள் கேட்டனர்.
புளொட் இயக்கத்தில் அரசியல் தெரிந்தவர்கள் இருந்தார்கள். புளொட் இயக்கத்தினர் திலீபனிடம் கேட்ட கேள்விகளுக்கு திலீபன் பதில் சொல்ல முடியாமல் திணறினார். பு:ளொட் உறுப்பினரான “முத்து” என்பவர் கேட்ட கேள்விக்கு திலீபனால் பதில் சொல்லமுடியாமல் போக அண்ணை ஏதோ அலட்டுகிறார் என்று திலீபன் கூறினார். உம்மை ஒரு அரசியல் தெரிந்தவர் என்றுதான் கேள்வி கேட்டேன், ஆனால் நீ இப்படிப் பதிலளிக்கக்கூடாது என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்..
மறுநாள் திலீபனும், முரளியும் முத்துவைத் தேடி அவரின் வீட்டிற்குச் சென்றனர். .. திலீபன் முத்துவை வெளியே அழைத்து மிரட்டிவிட்டுச் சென்றனர்.
இன்னொரு தடவை முரளியும் சின்னக் காந்தியும் உரும்பிராயில் ஒரு பாடசாலை ஒன்றில் கூட்டம் வைத்தனர். அனக்கு வந்த ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தவரான நக்கீரன் முரளியிடம் கேட்ட கேள்விக்கு முரளியால் பதில் சொல்ல முடியாமல் போய்விட்டது.
கூட்டம் முடிந்து சென்ற முரளி மறுநாள் திலீபனை கூட்டம் நடந்த இடத்திற்கு அழைத்து வந்தார். ஆத்திரத்தோடு நின்ற திலீபன் நேற்றுக் கேள்வி கேட்டவனைச் சந்திக்க வேண்டும் அவனை அழைத்து வாருங்கள் என்றார். அவன் எப்படி அப்படியொரு கேள்வி கேட்கலாம் என்று திலீபன் கத்திக்கொண்டிருந்தார்.
அங்கு நின்றவர்கள் நக்கீரனிடம் ஆள் அனுப்பினார்கள். ஆனால் நான் கேள்வி கேட்டது நேற்று. இன்று அவர்கள் கேட்டால் வரமுடியாது என்று மறுத்துவிட்டார்.
84ம் ஆண்டு தைமாதம் ஆவரங்காலில் முரளியின் வீட்டில் தங்கியிருந்த பண்டிதரை இராணுவம் பிடித்துக் கொன்றது. இரவு அங்கு சென்ற இராணுவம் மறுநாள்வரை அங்கு நின்றது. அங்கு போவோர் வருவோரை எல்லாம் இராணுவம் சுட்டுக் கொன்றது. முரளியின் சகோதரர் பாலசிங்கத்திற்குச் சொந்தமான அந்த வீடு இரணுவத்தினரால் தரைமட்டமாக்கப்பட்டது.
அந்த இடத்திற்கு அண்மையில் ரெலோ இயக்கத்தவரின் முகாம் இருந்தது. தாங்கள் புலிகளுக்கு உதவியாக இராணுவத்தை தாக்கி விரட்டுவோம் என்று வந்த ரேலோ இயக்கத்தினரை புலிகள் அனுமதிக்கவில்லை.
ஓரிரு நாட்களில் குடாநாட்டில் கோப்பாய், கைதடி, வல்லை, இன்னும் இரு இடங்களில் பாலங்கள் தகர்க்கப்பட்டன. அப்போது என் வீட்டிற்கு வந்த முரளி பாலம் உடைத்தது டெலோ இயக்கம் எனவும் அவர்கள் தங்கள் முகாமுக்கு அருகால் சென்றபோது தான் குண்டு வீச நினைத்தாக கூறினார்.
எல்லா இயக்கங்களின் நோக்கமும் ஒன்றுதான் .நீ ஏன் அவர்களை விரோதியாகப் பார்க்கிறாய். சாவகச்சேரி பொலிஸ் நிலையம், முறுகண்டியில் ரெயில் என்று அவர்களும் வெற்றிகரமாகத் தாக்குதல்கள் நடத்தியிருக்கிறார்கள். மக்களை இராணுவம் தாக்காமல் ரெலோ பாதுகாத்திருக்கிறது என்றேன். இல்லை உவங்களை விட்டு வைக்கூடாது என்றார் முரளி.
அப்போதே ரெலோ இயக்கம் தலையெடுப்பதை புலிகள் விரும்பவில்லை என்பதற்கு முரளி உதாரணமாகப் பட்டது. நான் அதிகம் பேசவில்லை. இவர்களிடம் நாங்களும் சேர்ந்து இருந்தால் ஆபத்து . முரளிக்கு சொல்லாமல் நான் வெளிநாடு வந்துவிட்டேன்.
ரெலோ இயக்கததை அழிப்பதற்கு முழுமூச்சாய் நின்றவர்களில் , முரளி ,திலீபன் ஆகியோர் முக்கியமானவர்கள்.. வேறு இயக்கங்கள் வளரக் கூடாது என்பதற்காக இருவரும் முழுமூச்சாய் இயங்கினார்கள். ஈபிஆர்எல்எஃப் இயக்க உறுப்பினர் நக்கீரனைக் கொல்ல எடுத்த முயற்சியில் புலிகள் தோற்றுப்போனார்கள். விமலேஸ்வரன் கொலைக்கும் முரளியய முக்கியமான பொறுப்பானவர்.. முரளியை ரெலோ இயக்கத்தினர் கடத்தக் காரணம் இருந்திருக்கிறது. பின்னாளில் முரளியை இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றது.
(Rahu Rahu Kathiravelu)