தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு தன்னெழுச்சி மாணவர், இளைஞர் இயக்கம் ஒரு சட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த இயக்கம் இளம் பெண்கள், தாய்மார்களின் ஆதரவை மட்டுமல்ல ; பொதுவெளியில் பங்களிப்பையும் பெற்றது. சீரியல் பார்த்து வீணாக போய்க்கொண்டிருந்த தாய்மார்களும் சீரியஸ் மேட்டருக்கு போராடுவார்கள் என்பதை நிரூபித்தது. போஸ்டர் ஒட்டி அடுத்தவன் வீட்டு சுவரை அழுக்காவில்லை. நன்கொடை எனும் பெயரில் கல்லா கட்டவில்லை. எழுச்சி, வீழ்ச்சி என தலைவர்களை அடையாளப்படுத்தவில்லை.
உனது உரிமைக்கு நீ போராடுகிறாய்; எனது்உரிமைக்கு நான் போராடுகிறேன், நமது்உரிமைக்கு நாம் போராடுகிறோம். என்கிற உணர்வை விதைத்த அறப்போர்.
உங்களுக்காக நாங்கள் போராடுகிறோம், நீங்கள் ஆயுதங்களை அனுப்புங்கள் என்று தனி நபர் ஹீரோவை உருவாக்கி அழியவில்லை.
காரியம் பெரிதா, வீரியம் பெரிதா என்ற பேதமின்றி வீரியத்துடன் காரியம் சாதித்த தன்மை.
சட்டத்தை மக்கள் தாங்களாக உருவாக்கினால் அதை அவர்களே மதிப்பார்கள் . யாரும் command செய்ய வேண்டியதில்லை.
எந்த ஒரு்அரசியல் கட்சியும் கற்பனை கூட செய்ய இயலாத mass movement.
பிரபலங்களை இந்த இயக்கம் பயன்படுத்தியதே தவிர அவர்கள் இவர்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கவில்லை.
மக்கள் குடியரசு இப்படித்தான் உருவாக வேண்டும்.
ஆட்சியாளர்கள் துப்பாக்கியை தூக்கி இருந்தாலும் வன்முறையை பையிலெடுக்காமல் தேசிய கீதம் பாடி தேசியக் கொடியை மார்பில் ஏந்த சொன்ன இயக்கம்.
இவ்வளவு பெரிய்இயக்கத்தை ஒரு கட்சி நடத்தி இருந்தால் ” செத்தாண்டா சேகரு” என்பது போல் கடைகள் மூடி, போக்குவரத்து பாதித்து, உழைப்பு கெட்டு என. நன்மையை விட தீமைகள் கூடியிருக்கும்.
அரசியல் கட்சிகளும், அரசு நிர்வாகமும் கற்க வேண்டியது ஏராளம்.
போராட்டம் நடத்திய மாணவர்கள் அமைதியாக அவர் அவர் பணிக்கு திரும்பினர்.
வெற்றி, வெற்றி என வெறிக்குரல் இல்லை. மாறாக போலீசும், போராட்டத்தை பாதியில் விட்டு விலகி, பழிபோட்ட பிரபலங்கள் , wanton ஆக வண்டியில் ஏறி, நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என சொல்ல வைத்த இயக்கம்.
No Sociologist, No political scientist is seen writing a research paper on the movement.
Please someone work on this. Let it be a lesson on mobilisation, organisation, goal setting and change.
(Kanniappan Elangovan)