சுமந்திரன் மீது கொலை முயற்சி…? என்னதான் நடக்குது

“நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொல்வதற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் உறப்பினர்கள் சிலர் முயற்சி. கொலை முயற்சி முறியடிப்பு. சூத்திரதாரிகள் கைது. விசாரணைகள் தொடர்கின்றன. வெளிநாடுகளில் இருக்கும் புலிகள் தூண்டுதல்” என்றவாறு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதையொட்டிய கைதுகள், விசாரணைகள், நீதி மன்ற நடவடிக்கைகள், சிறைவைப்பு என தொடர் காரியங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.


கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதி மன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர், நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதைக்குறித்து பத்திரிகைகளில் விரிவான ஆய்வுகளும் விவரணங்களும் எழுதப்படுகின்றன. இந்தச் செய்திகளில் எவ்வளவு உண்மையுண்டு? இதனுடைய அரசியல் நோக்கங்கள் எதுவாக இருக்கும்? இவற்றோடு தொடர்புபட்ட சக்திகள் எவை? அவற்றின் இலக்கு எது? என்ற கேள்விகள் பல்வேறு தரப்பினரிடமும் எழுந்திருக்கின்றன.

இதேவேளை விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களும், அவர்களுடைய குடும்பங்களும் மற்றும் உறவினர்கள் மத்தியலும் பதற்ற நிலையும் உளப்பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதைப்போன்று தாங்களும் கண்ணுக்குத் தெரியாத வகையில் எதனோடாவது சம்மந்தப்படுத்தப்படலாம் என்று பலரும் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.

எது உண்மை, எது பொய் என்று தெரியாத குழப்ப நிலையில்ஊகங்களே செய்தியாகும். இந்த ஊகங்கள் பதற்றத்தை உண்டாக்கும். ஆகவே இந்தப் பதற்றம் கூடியுள்ளது. இந்த நிலைமை இவர்களிடையே ஆழமாக துக்கத்தையும் பீதியையும் கிளப்பியுள்ளது. பலரும் உளரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

(Sivarasa Karunagaran)