என்மனவலையிலிருந்து………..

(சாகரன்)

1987 மாகாண அரசும் இன்றைய மாகாண அரசும்

பலரும் இன்று தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக பேசியும் வரிந்து ஏற்றுக் கொண்டிருக்கும் மகாணசபையும் இதற்கான பதவிகளும் 1987 புலிகள் உட்பட சகல அமைப்புக்களும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று போர் நிறுத்தம் செய்து ஆயுத ஒப்படைப்பும் செய்தனர். இதில் புலிகளே இந்திய இராணுவத்தை நிறைகுடம் வைத்து வரவேற்று அவர்களின் இராணுவ வாகனத்தில் புலிக் கொடியையும் இந்தியக் கொடியையும் கட்டிக்கொண்டு ஊர்வலமும் நடத்தினர். இந்திய அரசும் மற்றய விடுதலை அமைப்புக்களை அதிகம் கண்டு கொள்ளவில்லை. மாற்று அமைப்புக்களின் ஜனநாயக அரசியல் செயற்பாடுகளை ஈழத்தில் அனுமதித்ததில் உடன்பாடற்று இருந்த புலிகளின் இந்திய இராணுவத்தின் மீதான தாக்குதல்களை வேறு காரணங்களை முன்னிறுத்தி ஆரம்பித்தனர்.

இதனைத்தொடந்து இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையை ஈபிஆர்எல்எவ் ஏனைய விடுதலை அமைப்புக்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணையும் அரவணைத்து ஒரு ஐக்கிய முன்னணியாக அமைத்தனர். மகாணசபையை செயற்படவிடாது சிவில் நிர்வாகத் தடை என்று பறப்பட் புலிகள் மாகாணசபை அரசு கட்சிகளின் ஊறப்பினர்களையும் இதில் ஈடபட்ட சிவில் உத்தியோகத்தர்களையும் இதில் பயன்பாடு அடைந்த மக்களையும் கொலை அச்சுறுத்தலுக்கு ஊள்ளாக்கி கொலைகளும் செய்தனர். இதில் மகாண அரசியல் பங்களிப்பு செய்த முன்னாள் விடுதலை அமைப்புக்கள் தம்மை புலிகளிடம் இருந்து தற்காத்து கொள்ள ஆயுதத்தை ஆயுதத்தால் எதிர்கொண்டனர். இந்த நடைமுறையில் மகாண ஆடசியாளர்களினால் சில நடைமுறைத்தவறுகளும் எற்பட்டன.

இலங்கை அரசு, (பிரேமதாச) ஜேவிபி, தமிழ்நாடு அரசு(கருணாநிதி), ஒரு நிலையிற்கு பின்பு இந்திய மத்திய அரசு(விபிசிங்) ஆகியோருடன் புலிகள் மச்சான் மாமன் உறவு வைத்து இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையை இல்லாமல் செய்தனர். காலங்கள் ஓடின. புலிகள் தமது பாராளுமன்ற அரசியல் அமைப்பா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமைத்தனர். யுத்தம் முடிவுற்று புலிகள் அழிந்து போக அவர்களின் பிரதிநிதிகள் 1987 அழித்தொழித்த மகாணசபையை தற்போது துண்டாக்கிய நிலையில் தமிழரசு உருவாகியது என்று தேர்தல் வெற்றி மூலம் பிரகடனப்படுத்தினர் புலிகளின் ‘துப்பாக்கி மௌனம்’ இன் பின்பு தமது மீட்போராக தமிழ் தேசியக் கூட்டமைப்பை நம்பியவர்கள் 1987 களை மறந்து தமிரசை கொண்டாடினர்.

செயற்திறன் அற்ற வடமாகாண அரசும் மத்திய அரசுடன் எதிரகட்சித் தலைவராக இணக்க அரசியல் என்று போன நிலமையும் தமிழசுக்கட்சி, தமிழ் மக்கள் பேரவை என்று இரு முகாங்களை உருவாக்கினாலும் இதற்கான ஆதரவுத்தளம் முன்னாள் புலிகளின் ஆதரவாளர்கள்தான். எனக்கு புரியவில்லை? எப்படி இவர்களால் 1987 நிராகரித்து தொடர்ந்து பல கொலைகளையும் அரங்கேற்றி விட்டு இன்று சுத்தமானவர்களாக 1987 இல் இருந்ததை பிச்சு புடுங்கி அதிகாரங்கள் குறைத்த மகாண அரசுப் பதவிகளின் குற்ற உணர்வற்று அரியாசனம் ஏறி அனுபவித்துக்கொண்டிருக்க முடிகின்றது.இதன் ஆதரவாளர்களாக புலிகளின் ஆதரவாளர்கள் செயற்படவும் முடிகின்றது.