இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்று அமெரிக்க புலானாய்வுத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்காவின் சிஐஏ உட்பட ஒட்டுமொத்த புலானாய்வுத் துறையின் இயக்குனராக நியமிக்கப்படவுள்ள டான் கோட்ஸ் செவ்வாய்க்கிழமை கூறும்போது, “இந்தியா ஒரு ராக்கெட்டின் மூலம் 100 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய செய்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தேன்” என்றார்.
அமெரிக்கா இதில் பின் தங்கியுள்ளதாக பார்க்க முடியாது. சிறிய அளவில் உள்ளதாகவும் மாறுபட்ட செயல்பாடுகளைக் கொண்ட சிறிய அளவிலான செயற்கைக் கோள்களை ஒரு ராக்கெட்டில் அனுப்ப முடியும்” என்றார். இந்தியா பிப்ரவரி மாதம் பிஎஸ்எல்வி – சி37 ராக்கெட் மூலம் 104 செயற்கைக் கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக செலுத்தியது. இதன்மூலம் 104 செயற்கைக் கோள்களை ஒரே சமயத்தில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உலக சாதனை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.