யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவில் ஒரு பேரவை உறுப்பினராக சிவசேகரம் தன் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக நலன்களை ஒதுக்கி செயற்பட்டுவருவது யாழிலிருந்துவரும் நம்பகரமான செய்திகளாக இருக்கிறது. 2015 சனவரியில் மைத்திரி சனாதிபதியானபின் டக்களசின் கைப்பாவைகளாக இருந்த பேரவை உறுப்பினர்கள் கலைக்கப்பட்டு தமிழரசுக்கட்சி சிபார்சு செய்த பெரும்பாலான படித்த நேர்மையானவர்கள் பேரவை உறுப்பினர்களாக்கப்பட்டார்கள்.
சிவசேகரம் தமிழரசுக்கட்சியின் பரம விரோதி ஆயினும் திருகோணமலையைசேர்ந்த படித்தவர் என்ற நல்லெண்ணத்தில் சம்பந்தனால் பரிந்துரை செய்யப்பட்டு பேரவை உறுப்பினராக்கப்பட்டார். சிவசேகரம் நேர்மையானவராக இருந்திருந்தால் சம்பந்தரின் இந்த கொடையை ஏற்றிருக்கவேண்டியதில்லை.
பதவிக்கு வந்தபின் சிவசேகரம் தன் உண்மையான நிறத்தை காட்டினார்.
கட்டுப்பெட்டி வேச( வேடம்= costume; வேசை என்று பொருள் கொள்வேணா) மார்க்சியவாதியான சேகரத்துக்கு சீ.வை. தாமோதரம்பிள்ளை வழிவந்த( அமெரிக்கன் மிசன் கிறிஸ்தவ யாழ் இளைஞர் பேரவை) சுயாதீன அறிவுப்பாரம்பரியத்தில் கடுப்பு. இந்த மரபில் வந்த கிறிஸ்தவ புத்திசீவிகளான ராஜினி திராணகம, ராஜன் ஹுல், ஜீவன் கூல்( இவர் முன்னவர்கள் போல் perfect ஆள் இல்லையெனினும் மோசமானவரில்லை) முதலிய அக்கடமிக் களிலும் செல்வநாயகம், சுமந்திரன் முதலிய அரசியல் வாதிகளிலும் சேகரம் கொண்டுள்ள காழ்ப்புணர்வு மனவியாதி(பொறாமை) அடிப்படையிலானது. தன்மோக தலைக்கனம்மிக்க(ego) சேகரத்துக்கு தான் தன் குரு கைலாசபதிபோல துணைவேந்தராக வரமுடியவில்லை என்ற காய்ச்சல் வேறு.
வயது, தன் படிப்பு அடிப்படையில் விரைவிலேயே ஒரு தீர்மானவராக பேரவையில் வந்த சேகரம் தன் தனிப்பட்ட agendaக்களின் அடிப்படையில் செயற்பட்டார்.
பேரா. ஜீவன் ஹீல் யாழ் பல்கலைக்கழகத்தில் எந்த பதவியும் எடுப்பதை தடுத்தார். டக்ளசின் கால ஊழல் சாமனியங்களான வசந்தி போன்றோருடன் கூட்டணி அமைத்து தன் தனிப்பட்ட பரம விரோதிகளை ஒரங்கட்டினார். இதன் உச்சமாக சாம் தியாகலிங்கம் என்ற பழைய யாழ் பல்கலை மாணவரும் சர்வதேச கீர்த்திமிக்க அக்கடமிக்கானவரின் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பத்தை பகீரதப்பிரயத்தனம் செய்து
தடுத்தார். இதைசெய்ய சேகரம் செய்த ஊத்தைவேலை சுவாரசியமானது.
பேராதனைப்பல்கலைக்கழகத்தில் திறமையான ஒரு சிறுபான்மைத்தமிழர் சாதி அடிப்படையில் அவருக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய விரிவுரையாளர் பதவி கிடைக்காது கம்பன் கழக ஜெயராஜ் இன் செல்வாக்கால் தடுக்கப்பட்டபோது சிவசேகரம் அப்பாதிக்கப்பட்ட மாணவன் நீதிமன்றம் போய் வெல்ல தார்மீக ஆதரவு வழங்கினார். இன்று அதே சிவசேகரம் அவ்விரிவுரையாளர் தங்கவடிவேல் மாஸ்டரின் நினைவுமலரில் சாதி ஆதிக்கம் பற்றிய விஞ்ஞானரிதியான கட்டுரையை எழுதினார் என்ற காரணத்துக்காக அம்மலர் வெளியீட்டையே நிறுத்திவைத்தவரான சிறி சற்குணராசா என்ற இன மத சாதி வெறியரானவரை தன் தனிப்பட்ட பரம விரோதிகள் துணைவேந்தராக வரக்கூடாது என்ற காரணத்துக்காக ஆதரித்து தனிப்பட்ட சட்டரீதியற்ற லாபியிங் மூலமும் முயல்கிறார்.
சிவசேகரத்தின் தனிப்பட்ட லாபியிங் இன்றி
சிறிசற்குணராஜா அதிக வாக்குகள் பெற்றிருக்கமுடியாது என்பது யாழிலிருந்து வரும் நம்பகரமான தகவல்கள். இதன் அடுத்தகட்டமாக சேகரம் திருமலையில் இரகசியமாக சம்பந்தர் வீடுபோய் தனது ஆளான சக்கரை துணைவேந்தராக்கும்படி கேட்டு வழிவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
உறுதிப்படுத்தப்படாத இன்னொரு செய்தி கொழும்பில் ஏற்கெனவே சம்பந்தர் தரிசனம் சிவசேகரத்தால் செய்யப்பட்டுவிட்டதாக சொல்கிறது. ( கற்பனை செய்துபாருங்கள். 80 இலும் குழந்தைமுகம் கொண்ட சம்பந்தரின் மைண்ட் வொய்ஸ் எப்படி இருந்திருக்கும். ” உன்ரை கொம்மா நீ தப்பாமல் தவறாமல் பேராதனையிலிருந்து கோணேசர் ஆலயத்திற்கு வருசந்தோறும் அனுப்பும் பணத்தை பெருமையோடு சொல்லி ” தம்பி சம்பந்தன், மாக்சியம் என்ர பொடி போடுற வேசம். அவன் கொழும்பு றோயல் கொலிச் போய் நாலு இங்கிலிஸ் படிச்சிட்டான். இளங்கண்டு! உங்கட கட்சியை வயசுக்கோளாத்தில எழுதி திட்டுறான். எண்டக்கோ ஒருநாள் என்ர மோன் உன்ரை வீடு தேடிவருவான். அப்ப நான் இருக்கமாட்டன். நீயிருப்பாய். என்ர மோனைவிட செல்வாக்காயிருப்பாய்.
கோணேசர் மலையிலிருந்து இதையெல்லாம் பாத்து புன்னகைப்பார்”
(Arun Ambalavanar)