உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்கு முன்னதாக, மாகாண சபைகளின் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் ஆலோசனை செய்துவருதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தலை நடத்தினால், அது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கே வாய்ப்பாக அமையும். அவ்வாறு அமைவதை தடுக்கும் நோக்கிலேயே, சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரேநாளில் நடத்துமாறு, அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலை முறைமை, தங்களுக்கு பாதகமானது என்று சிறுப்பான்மை கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள், எல்லைமீள் நிர்ணய அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆகையால், எல்லைநிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வெளியிடுவதும் பிற்போடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒத்திவைத்துவிட்டு, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது.