இலங்கையில் மீண்டும் விடுதலைப் போராட்டமொன்றை மேற்கொள்வது தொடர்பில் தமிழ்நாட்டின் மே-17 இயக்கம் ஆலோசனையொன்றை நடத்தியுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் வருடாந்த அமர்வில் இலங்கை தொடர்பில் மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அத்துடன் குறித்த அமர்வில் கலந்து கொண்டிருந்த இலங்கையின் தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்து உரையாடிய அவர், மீண்டும் போராட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பில் ஆலோசனைகளும் வழங்கியுள்ளார். தமிழ் மக்கள் சுயநிர்ணயம், தங்களைத் தாங்களே நிர்வகிக்கும் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதாயின் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் தேர்தல் முறை தொடர்பில் எந்தவொரு நம்பிக்கையும் வைக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளதாகவும் குறித்த செய்தியில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.