1987மார்ச் 30 ந்திகதி யாழ் நீராவியடியில் புலிகளால் வீடொன்றில் சிறை வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஈபிஆர்எல்எப் தோழர்கள் மற்றும் ரெலோ புளொட் இதர போராளிகள் பொதுமக்கள் சிலரென 60 இற்கு மேற்பட்டோர் அருணா என்ற புலிகளின் தளபதியால் படுகொலை செய்யப்பட்டார்கள். இது தான் ‘கந்தன் கருணை படுகொலை’ என அழைக்கப்படுவது பின் புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில் பிரதான வாயிலினுடாகவும் ஜன்னல்களினூடாகவும் அப்போராளிகளின் இறுதி மூச்சும் அடக்கப்பட்டது.
இதில் தப்பித்த ஒருசிலர் இன்றும் உயிரோடிருக்கிறார்கள். மனம் பேதலிக்கச்செய்யும் கதையிது.
இரத்தவெள்ளமும் மரணஓலமும் ‘கைய அவிட்டுவிட்டிடுச் சுடுங்கடா’ என்ற அவேசமும் பெருங்குரலாக….
18 கிறிமினல்கள் தப்பிபோகமுயற்சிக்கையில் கொல்லப்பட்டதாக அன்றைய யாழ்மைய ஊடகங்கள் எழுதின. கனடாவில் இருக்கும் திருச்செல்வம் யாழ்ப்பாணத்தில் முரசொலி யில் எழுதியது.
இந்த ஊடக தர்மத்தை மனித உரிமைக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது அறிக்கையில் அம்பலப்படுத்தியிருந்தது.
இங்கு படுகொலை செய்யப்பட்டவர்களின் பெற்றார் உற்றார் உறவினர்களைப் பொறுத்தவரை இவர்கள் காணாமல் போகச்செய்யப்பட்டவர்களே.
இவ்வாறு பல நூற்றுக்கணக்கானோர்.
மனித உரிமை என்று வரும்போது இவை பற்றியும் பொதுவெளியில் பேசப்படாதவரை
இவற்றின் பாரதூரத்தன்மை எமது சமூதாயத்தில் உணரப்படாதவரை இவற்றை சத்தமில்லமால் கடந்து செல்லும் வரை
ஆயிரம் ஜெனிவாக் கூட்டங்கள் நிகழ்ந்தாலும் இங்கு நீதி நிலை நாட்டப்படுவதென்பது கானல் நீரே.