(சாகரன்)
தந்தை அல் அசாத்தின்(Hafez al-Assad) ஆட்சியில் சமாதான பூங்காகவும் தனது நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகள் பலதும் இலவசமாகவும் வழங்கி நல்லாட்சி நடந்து வந்ததே சிரிய வரலாறு. கூடவே உலகெங்கும் விடுதலை வேண்டி நிற்கும் ஒடுகப்பட்ட மக்களின் விடுதலைக்கான தார்மீக ஆதரவை வழங்கி வந்ததும் இதே சிரியா. குறிப்பாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கும் அகதி வாழ்விற்கும் பக்கபலமாக நின்று உலகில் இன்றுவரை பாலதீனம் என்ற நாட்டையும் பாலஸ்தீன மக்களின் இருப்பை உறுதி செய்வதில் சிரியாவின் பங்கு மகத்தானது. சோவியத் யூனியனின் உடைவிற்கு 6 மாத காலத்தின் பின்பு தந்தையின் பொறுப்பை தனையன் ஏற்றுக்கொண்டு தந்தை வழியில் தனது ஆட்சிப் பயணத்தை தொடர்ந்தார்.
வளைகுடா முழுவதையும் தனது கட்டுப்பாட்டு விளைநிலமாக மாற்றுவதற்கு; முக்கிய தடைக்கல்லாக இருப்பதில் முன்னிலை வகிப்பது சிரியா. இதற்கு தோள் கொடுப்பதில் ஈரானின் பங்கை குறைந்து மதிப்பிட முடியாது. சோவியத் யூனியனின் வலிந்த உடைவிற்கு பின்னரான ரஷ்யாவின் எழுந்திருத்தல் சிரியாவையும் ஈரானையும் தாங்கிப் பிடித்து வலிந்து உருவாகப்பட்ட வளைகுடா யுத்தங்களை முடிவுக்கு கொண்டு வருவதில் ரஷ்யாவின் பங்கு முற்போக்கானதுதான். இதில் ரஷ்யாவிற்காக பாதுகாப்பு விடயமும் இணைந்திருப்பது மறுப்பதற்கு இல்லை.
சிரியாவில் அல் பஷாரின்(Bashar al-Assad) ஆட்சியை அகற்ற உள்ளுரில் கலகக்காரரை உருவாக்கி இடைவிடாத துப்பாக்கிச் சூடுகளை நடத்தியும் பெரிதாக தாம் நினைத்ததை சாதிக்க முடியாதவர்கள் ஐஎஸ் என்ற உருவாக்கத்தை உருவாக்கி இதே சிரியாவிற்கு எதிரான துப்பாக்கி சூடுகளை யுத்தம் என்று பரிணாமம் அடைய செய்தவர்களும் இவர்களே. வழமைபோல் தம்மால் உருவாக்கியவர்களே தமது கையை மீறப் போக குண்டுகளை இருதரப்பிற்கும் எதிராக கூட்டுப்படை என்று தாக்குதலை ஆரம்பித்தவரகளும் இவர்களே. இதுவரை அமைதியாக பார்த்திருந்த ரஷ்யா தன் பங்கிற்கு ஐஎஸ் இற்கு எதிராக புறப்பட்டு ஐஎஸ் யும் கட்டிற்குள் கொண்டுவந்து சிரியாவில் அரசிற்கு எதிராக போராடுபவர்களின் பின்புலம் யார் என்பதையும் ஒருகல்லில் இருமாங்காயாக அடித்த போது ரஷ்யாவின் பிரசன்னத்தை எதிர்த்து நின்பவர்களும் இவர்களே.
இதனையும் மீறி போர்நிறுத்தம் சமாதானப் பேச்சுவார்த்தை என்று இவர்களைத் தவிர்த்து மீண்டும் இருமுகாம் செயற்பாட்டில் ரஷ்யா இறங்கிய போது 1990 களிற்கு பின்பு உருவான ஒரு முகாம் இரு முகாமாகி வருகின்றது என்ற ஏற்றுக்கொள்ளா நிலமையே நஞ்சுக் குண்டுவீச்சு என்ற நாடகமும் இதனைத் தொடர்ந்த சிரியா மீதான ஏவுகளைத் தாக்குதலும். ஈராக் இற்குள் இரசாயன ஆயுதம் என்று உட்புகுந்தவர்கள் இன்று வரை எந்த இரசாயன ஆயுதங்களையும் கண்டு பிடிக்காமல் இன்று கந்தக புகையினால் நிரம்பிய இரசாயனப பூமியாக ஈராக்கை மாற்றிய வரலாறே இன்னும் சில வருடங்களின் பின்பு சிரியாவின் தற்போதைய உண்மைநிலை வரலாறு கூறி நிற்கப் போகின்றது. இதற்கு இவர்களை அன்று சர்வதேச போர்க் குற்றவாளியாக சர்வதேச மக்கள் மன்றில் நிறுத்தப் போவது யார். கொலம்பஸ் அன்று பூர்விக் குடிகள் மீதான ஆக்கிரமிப்பிற்கு பதில் சொல்லாத இவர்களிடம் மனிதனுக்கு வேண்டிய அறத்தை வேண்டி நிற்பது மடைத்தனம். இனி என்ன Our President என்று CNN தனது பங்கிற்கு பிரச்சாரத்தை முடுங்கிவிட்டு தலைவருடனான முறிந்த உறவை புதுப்பித்துக் கொள்ளும். ஆட்டம் தொடங்கிவிட்டது. பாவம் மக்கள்.
(The U.S. military attacked a Syria-government airfield with 59 tomahawk missiles on Thursday evening.
The missiles targeted the Shayrat Airfield near Homs, and were in response to a Tuesday chemical weapons attack. Officially announcing the strike, President Donald Trump said that the targeted airfield had launched the chemical attack on a rebel-held area, and he called on other nations to oppose Syria’s embattled leader.
“On Tuesday, Syrian dictator Bashar al-Assad launched a horrible chemical weapons attack on innocent civilians. Using a deadly nerve agent, Assad choked out the lives of helpless men, women and children. It was a slow and brutal death for so many. Even beautiful babies were cruelly murdered in this very barbaric attack,” Trump said during a Thursday address.- என்ற செய்தி இந்த பதிவை மேற்கொள்ள என்னைத் தூண்டியது)