சிங்கள அரசுடன் கைகோர்த்த புலம்பெயர் புலிகளின் பிரதிநிதிகள். கனடா, நோர்வே போன்ற பல நாடுகளில் இருந்து அரசின் அழைப்பின் பேரில் சென்று, அமைச்சர் மனோகணேசனை சந்தித்த நேரம் எடுத்துக் கொண்ட படம். இதில் நோர்வேயில் இருந்து சென்றவர்கள் (அமைச்சருக்கு அருகில்) நெடியவன் தலைமையில், புலிகள் அமைப்பை மீளக் கட்டமைக்க உதவியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
வலதுசாரித் தமிழ்த் தேசியவாதிகளின் ஈழப்போராட்டம் கடைசியில் அரசுடன் சங்கமிக்கும் என்பது ஏற்கனவே அவர்களுக்கும் தெரியும். புலம்பெயர்ந்த புலிகளோ, அல்லது புலி ஆதரவாளர்களோ அரச ஒத்தோடிகளாக இருப்பது ஆச்சரியத்திற்குரிய விடயம் அல்ல. அது அவர்களது வர்க்கக் குணாம்சம்.
திரைமறைவில் சிங்கள அரசுடன் கைகோர்க்கும் புலி ஆதரவாளர்கள், இப்போதும் தமக்கும் அரசுக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதாக தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அரசும் எதிர்பார்க்கின்றது. இது மக்களை பிரித்தாளும் நோக்கில், இரண்டு தரப்பாலும் திட்டமிட்டு நடத்தப்படும் நாடகம்.
(Marl Marx)