எனது மண்டை கறள்கட்டிவிட்டதென எவ்வாறு சுரேஸ்பிறேமச்சந்திரன் ஊடகவியலாளர்களிடம் பேசலாமென நீதி கேட்டுள்ளார் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா. அண்மைக்காலமாக உச்சம் பெற்றுவரும் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி- ஈ. பி.ஆர்.எல்.எவ். மோதல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்திலும் எதிரொலித்துள்ளது. அப்போதே யாழ்.ஊடக அமையத்தினில் மாவையின் மண்டை கறள்கட்டிவிட்டதோவென சுரேஸ்பிறேமச்சந்திரன் ஊடகவியலாளர்களிடம் எழுப்பிய கேள்விக்கு நீதி கேட்டுள்ளார் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா.
அண்மையினில் கிளிநொச்சியினில் காணாமல் போனோரது போராட்டத்திற்கு சென்றிருந்த இத்தகைய போராட்டங்கள் நல்லாட்சிக்கு தலையிடியினை தந்து மஹிந்த மீண்டும் ஆட்சிக்கதிரை ஏறுவதற்கு வழிசமைத்துவிடுமென தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் மாநாட்டினில் கருத்து தெரிவித்திருந்த சுரேஸ் மாவையின் மண்டை கறள்கட்டிவிட்டதோதென கேள்வியெழுப்பியிருந்தார்.
இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்றுள்ளது. மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மையச் செயற் குழுக் கூட்டத்தில், ஈ.பி.ஆர்.எல்.எவ்வினால், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்ட விவகாரம் இதன்போது எழுப்பப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்த கருத்துக்களை அறிக்கையாக்குவதற்கே மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி உறுப்பினர்கள், அவர் பேசிய பேச்சுக்கள் ஏற்கனவே பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
பின்னர் ஏன் அறிக்கைப்படுத்துவதற் குழு என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்குப் பதிலளித்த இரா.சம்பந்தன், இல்லை. சுரேஸையும் எப்படி இணைத்துச் செல்வது என்பதைப் பற்றி ஆராய்வதற்கே இந்த நடவடிக்கை என்று கூறியுள்ளார். இதன்போதே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா, சுரேஸ் காட்டமாக – கண்டபடி தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். அவரை இதன் பின்னர் எப்படி இணைத்துச் செல்வது தொடர்பில் ஆராயலாம் என்று சீற்றமாகக் கேட்டுள்ளார்.