தலைவர் சிறீ சபாரத்தினத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தி நிற்போம்

31 வருடங்களின் முன்பு மே மாதம் ஈழவிடுதலை போராட்டத்திற்கான இறங்கு முகத்திற்கு ஆரம்ப சுழி போட்ட நாள் புலிகள் தனது ஆயுத மேலாதிக்கத்தை.. செயற்பாட்டை… தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு எதிராக ஆரம்பித்த நாள். அந்த விடுதலை அமைப்பின் செயற்பாடுகளை முடக்குகின்றோம் என்று பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து புறப்பட்டு அதன் போராளிகள் பலரைக் கொன்று இறுதியாக அதன் தலைவர் சிறீசபாரத்தினத்தை கொன்று ஈழவிடுதலைப் போராட்டத்திற்கான சாவுமணியை அடித்துக் கொண்டனர். ஈழவிடுதலை அமைப்புக்களுக்கிடையேயான ஐக்கிய முன்னணி ஈழத் தேசிய விடுதலை முன்னணியை முன்நோக்கி நகர்த்துவதில் சிறீசபாரத்தினத்னதிதும் அவர் தலமைதாங்கிய ரெலோ அமைப்பினதும் செயற்பாடுகள் வரலாற்றில் குறித்துக் கொள்ளப்படவேண்டியவை.

பல சிறப்பான எதிரிக்கு எதிரான தாக்குதல்களை செயற்படுத்திய இராணுவக் கட்டமைப்பை தன்னகத்தே கொண்டிருந்த ஒரு விடுதலை அமைப்பு. இதன் தலமைப் பொறுப்பை அர்பணிப்புடன் செயற்படுத்திய அனைத்து போராளிகளுக்கும் மரியாதை செலுத்தும் நாள் இன்று. 1986 ஆரம்பித்த புலிகளின் சகோதரப்படுகொலை புலிகளின் பாசிச செயற்பாடாக பரிணமித்து இறுதியில் 2009 மே மாதம் தனது மக்களையும் பலிகொடுத்து தானும் அழிந்து கொண்டது இந்த விளைவைத் தவிர வேறு எதனையும் புலிகளின் ஏகபோகம் அடையமாட்டாது என்பதை பல அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறினார்கள். இதனால் இவர்கள் துரோகிகள் ஆக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

 
தமிழீழ விடுதலை; இயக்கத்திற்கு எதிரான சகோதரப்படுகொலை தடுக்கப்பட்டிருந்தால்இ தவிர்கப்பட்டிருந்தால் இன்று எமது மக்கள் ஓரளவு உரிமைகளைப் பெற்று வாழும் அரசியல் சூழலுக்குள் தள்ளப்பட்டிருப்பார்கள் என்பது உலக வரலாற்றுப் போக்கின் அடிப்படையில் நாம் ஆய்ந்து அறிந்துகொள்ள முடியும். எமது மக்களின் விடுதலைக்காக தம்மை அர்பணித்த ரெலோ போராளிகள் அதன் தலைவர் சிறீ தோழர் அவர்களுக்கும் மரியாதை செலுத்தி நிற்போம். வரலாற்றில் கறை படிந்த இந்த நிகழ்வுகளைப் பாடங்களாக கொண்டு இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் எற்படாத வண்ணம் சரியான திசைவழியில் பயணிப்போம்