ஏறத்தாழ எல்லா வாக்குகளும் எண்ணப்பட்டிருக்கும் நிலையில் 68 வயதான ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி 22 .9 மில்லியன் வாக்குகள் பெற்று மீண்டும் ஈரானின் ஜனாதிபதியாக வாய்ப்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட 56 வயதான இப்ராஹீம் ரைசி இதுவரை 15 .5 மில்லியன் வாக்குகளையே பெற்றிருக்கிறார்.
இந்த முடிவை ஈரானின் தலைமைத் தேர்தல் அதிகாரி அலி அஸ்கர் அஹமதி அரச தொலைக்காட்சியில் அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட 40 மில்லியன் வாக்காளர்கள் நேற்று நடந்து முடிந்த இரானியத் தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். இது மொத்த வாக்காளர்கள் தொகையில் 70 வீதமாகும். 2013 ம் ஆண்டு தொடக்கம் ஹசன் ரூஹானி ஈரானின் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது