பெருவெளி என்னும் கொட்டியாரத்து தமிழ் கிராமத்தில் 28.05.2017 ஞாயிற்று கிழமை இளம் சிறுமிகளுக்கு ஏற்பட்ட சம்பவம் மனதுக்கு பெரு வலியையும் துயரத்தையும் சுமந்து நிற்கிறது. இன நல்லுறவும் ஒருங்கிணைவும் ஒரு சிலரின் நடவடிக்கைகளினால் பாதிப்படைந்து விடக்கூடாது என்பதில் நாம் அக்கறையுடனும் அவதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் .நான் நேற்று சம்பவத்தின் உண்மை நிலை பற்றி திருச்செல்வத்துடனும் மற்றும் பலருடனும் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் மூலம் உண்மை நிலவரம் தெரிய வந்தது .
சிலர் வலைப் பக்கங்களில் நிலவரத்தின் தீவிரத்தை உணராது எழுந்த மானத்துக்கு கருத்துக்களை முன்வைத்தல் தவிர்க்கப் படுதல் நல்லது.
குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் பட்டு தண்டிக்கப் படுதலும் இனிமேல் இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புடன் இருத்தல் வேண்டும்
மாணவர்கள் மத்தியில் இது பற்றிய விழிப்புணர்வை பாடசாலைகளில் ஆசிரியர்கள் தங்கள் பாட வேளைகளில் இவற்றைத் தவிர்ப்பதற்கான அறிவூட்டலை செய்ய வேண்டும்.
மூதூர் கிழக்கு பாடசாலைகளும் மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த விடயத்தில் மிகுந்த ஒற்றுமையுடனும் கண்ணியத்துடனும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
திருகோணமலை நகரப் பாடசாலைகளும் இதில் பங்கெடுத்திருக்கலாம்.
(Bala Sugumar)