நான் ஒரு அவுஸ்ரேலிய குடிமகன், ஆனால் தற்போது இலங்கையின் உண்மையான நிலையை அறிந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளேன். இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர்களுடனும் யாழ் பல்கலைக்கழக அரசியல் அறிவியல்துறை விரிவுரையாளர்களுடனும் கலந்துரையாடியள்ளேன். முப்பது வருட ஆயுத போராட்ட தோல்வியின் பின்னரும் இவர்களின் சிந்தனைகள் செயல்களில் மாற்றம் இல்லை. சிங்கள மக்களின் சனத்தொகையில் ஒப்பிடும் போது உலக தமிழர் ஐந்து மடங்கு, ஆனாலும் இன்று அவலநிலை. தமிழ்த் தலைவர்கள் உண்மையை உணராதவர்கள் அல்லது தங்களின் சுயநலத்திற்காக உண்மையை மறைப்பவர்கள் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. யாழ்ப்பாண பல்கலைகழக கலைப்பீட பீடாதிபதியின் வார்த்தைகள் “இன்று தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு காரனம் புலிகள், இறந்த புலிகள்தங்களது ஆவியினால் மக்களை பாதுகாக்கின்றார்கள்.” தமழ் தேசிய கூட்டமைபின் தலைவரின் வார்த்தைகள் “ஆயுத போராட்டம் முறைமையானதும், காலத்தின் தேவையுமாய் இருந்தது.”
இந்த கலந்துரையாடலின் விளைவாக தமிழ் தலைவர்கள் அரசியல் சாணக்கியம் இல்லாதவர்களென வெளிப்படையாகின்றது. தமிழர்கள் இந்தியாவினால் திட்டமிட்டு உடைக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவினால் ஆயுத இயக்கங்கள் தமிழரை பிரித்தாளுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. ஆயுத போராட்டம் எமது ஆற்றல் உள்ள தலைவர்களை அழித்தும், கல்விமான்களையும் ஒற்றுமையையும் கணிசமான அளவு குறைத்துள்ளது. மேற்குலகநாடுகளில் உள்ள பல புலம்பெயர்ந்த இயக்கங்கள், அவற்றின் அரசியல் சாணக்கியம் இல்லாத தலைவர்கல் தமிழரின் பிரிவினையையும், தமிழர்களின் தலமைத்துவ வீழ்ச்சியையும் சான்று பகிர்கின்றன. இந்தியாவும், மேற்குலகநாடுகளும் தங்களின் தேவைகளுக்காக தமிழர்களை பயன்படுத்துகின்றன. ஆனால் தமிழ் தலைவர்களின் நடவடிக்கைகள் இந்திய, மேற்குலகநாடுகளின் தலைவர்களைப் போன்று புத்திசாலிதனமானதாக அமையவில்லை. தமிழ் தலைவர்கள் இந்திய அல்லது மேற்குலக நாடுகளின் தலைவர்களை பயன்படுத்தி தங்கள் மக்களின் தேவைகளையும், அபிலாசைகளையும் பூர்த்தி செய்ய இயலாத, வலுவற்ற, அறிவற்ற தலைவர்களாகவும், ஆனால் தழிழ் மக்களை தங்களது சுயநலத்திற்காக பயன்படுத்துவதில் மாத்திரம் வல்லவரகளாக விளங்குகின்றனர்.
இலங்கைத் தமிழ் தலைவர்களுக்கு தங்கள் கோரிக்கைகளை பெற்றுக்கொள்வதற்கு பல சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன.
இலங்கையை பிரித்தானியர்கள் ஆண்ட காலத்தில் இலங்கை தமிழ்தலைவர்கள் சுய ஆட்சியிலோ அல்லது தனி நாட்டு கோரிக்கைகலோ முன்வைக்கவில்லை; காரணம், பிரித்தானியர்கள் சிறுபான்மை தமிழர்களுக்கு அதிகமான சலுகைககளை வழங்கினார்கள். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் சிங்கள பெரும்பான்மையோருக்கு பிரதிநிதிகளாகவும் விளங்கியுள்ளனர். இதை நாம் ஜனநாயகம் அல்லது நேர்மையான பிரதிநிதித்துவம் என்று கருத முடியாது. இது பிரித்தானியரின் பிரித்தாழுமையின் சூழ்ச்சி என்றால் மிகையாகாது. தமிழர்கள் பிரித்தானியரின் வழிநடத்தல்களினால் எந்த ஒரு தீர்வையும் ஏற்க வலுவும் அறிவும் அற்றவர்களாக காணப்படுகின்றனர். இலங்கைக்கு சுகந்திரம் கிடைபதற்கு முன்னரே தமிழர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க சிங்கள ஆட்சித்தலைவர்களால் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டது. 1926ம் ஆண்டு எஸ், டபில்யூ. ஆர்.டி பண்டாரநாயக்காவினால் சமஷ்டி ஆட்சி முறை முன்வைக்கப்பட்டது. இந்த தீர்வை 1927ம் ஆண்டு கண்டி சிங்களத்தலைவர்கள் ஆமோதித்து, மூன்று பாகங்கள் கொண்ட சமஷ்டி தீர்வை முன்வைத்தனர். வடக்கும், கிழக்கும் இணைந்த பாகத்தை தமிழர்களுக்கும், ஏனைய இரண்டு பாகங்களை சிங்கள பெருன்மையினருக்கும் என்ற தீர்வை முன்வைத்தனர். ஆனால் தமிழ் தலைவர்கள் இந்த தீர்வை ஏற்றுக் கொள்ளவில்லை.
இரண்டாவது சந்தர்ப்பம் ஜி ஜி பொன்னம்பலம் தலைவராக இருந்த போது இலங்கை அரசாங்கம் 40:60 என்ற தீர்வை முன்வைத்தது. அன்று தமிழரின் சனத்தொகை 40 சத வீதம் கூட இருக்கவில்லை ஆனால் இலங்கை அரசு 40:60 தீர்வை பெரும்தன்மையுடன் முன் வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்வையும் தமிழ் தலைவர்கள் ஏற்கவில்லை மாறாக 50:50 என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த அரிய சந்தர்ப்பத்தையும் நழுவிட்டனர். 1970ம், 1980ம் ஆண்டு காலப்பகுதிகளில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மேற்குலகநாடுகளின் உதவியுடன் இலங்கையை சிங்கப்பூர் போன்று முன்னேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டார். ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் செயற்பாடுகளை இந்தியா அச்சுறுத்தலாக கண்நோக்கியது. இந்நிலையில் இந்தியா இலங்கையின் உள் நாட்டுப்பிரச்சினையை தனக்கு சார்பாக கொண்டு தமிழ் ஆயுதகுழுக்களை உருவாக்கியது. இதன்மூலம் இந்தியா இலங்கையை பிரித்தாண்டு தன்னுடைய தன்னாதிக்கத்தை நிலைநிறுத்தியது.
தமிழ்த்தலைவர்கள் இலங்கை அரசுடன் இணைந்து இலங்கையை முன்னேற்ற எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை, மாறாக அன்னிய நாடுககளின் சதிக்குள் அகப்பட்டு எமது இளைய சமுதாயத்தை தீவிரவாதிகளாக உருவாக்கினார்கள். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப் போரை ஊக்கிவித்து, அன்னிய நாடுகளுக்கு சார்பான நடவடிக்கைகளில் தங்கள் சுய நலத்தை முன்னெடுத்து இன்பம் கண்டுள்ளனர். தமிழ், சிங்கள தலைவர்களின் தவறான நடவடிக்கைகளால் இலங்கையில் கலவரங்கள் தலைதூக்கின. இதன் விளைவாக தமிழ் மக்கள் அகதிகள் ஆக்கப்பட்டனர். தமிழ் மக்கள் மேற்குலக நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். இதனை தன்வசமாக்கிக்கொண்ட மேற்குலகநாடுகள் இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்காகவும், தமது நாடுகளை இலங்கைத் தமிழர்களின் மனித வளத்தைக் கொண்டு முன்னேற்றுவதற்காகவும் தமிழரின் ஆயதப்போரட்டத்தை மறைமுகமாக புலம்பெயர்ந்த தமிழர்களுடாக ஆதரித்து வலுவாக்கினர். இது இந்தியாவை கதிகலங்க செய்தது. இதன் விளைவாக இந்தியா இந்திய-இலங்கை உடன்படிக்கையை இலங்கை அரசின் மீதும் தமிழ் ஆயுதக்குழுக்கள் மீதும் திணித்தது.
இந்த ஒப்பந்தமானது தமிழருக்கு கிடைத்த மூன்றாவது சந்தர்ப்பம் தமிழரின் சுதந்திரத்தையும் இலங்கையின் சமாதானத்தையும் பேணிப்பாதுகாப்பதற்கு. துரதிஸ்ரவசமாக புலம்பெயர்ந்த தழிழ்தலைவர்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை அறியாதவர்களாகவும் மேற்குலக நாடுகளின் கைப்பொம்மைகளாகவும் விளங்கினர். புலம்பெயர்ந்த மக்களின் தலைவர்கள் மேற்குலக நாடுகளின் வலைக்குள் சிக்குண்டு தமிழ் ஆயுதக்குழக்களை இந்தியாவுக்கு எதிராக தூண்டி விட்டனர். இந்த நடவடிக்கையானது இலங்கையின் வரலாற்றில் பாரிய அழிவுகளையும் சர்ச்சையையும் உருவாக்கியது. விஷேடமாக பிரதமமந்திரி ராஜிவ்காந்தியின் இழப்பு. தமிழ் தலைவர்களின் தவறான நடவடிக்கைகளினாலும் வழிகாட்டலினாலும் இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை இழந்துள்ளோம். இவ்வாறான நடவடிக்கைகளிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்வது என்னவென்றால் எமது தழிழ்தலைவர்கள் அன்நிய நாட்டின் தேவையின் அடிப்படையிலும் தமது சுய நலன் கருதியும் அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். இவர்கள் தமிழ் மக்களுக்காகவோ அல்லது இலங்கை நாட்டிற்காகவோ அரசியல் புரிபவர்கள் அல்ல. இந்தியா ஆயுதக்குழுக்களை உருவாக்கியது ஆனால் இலங்கையில் உள் நாட்டுப்பிரச்சினையை முப்பது வருடங்களுக்கு மேம்படுத்தியதற்குரிய எண்ணமோ வளங்களோ இந்தியாவிடம் இருக்கவில்லை. இந்திய-இலங்கை ஒப்பந்தம் இதனை சான்று பகிர்கிறது.
இலங்கைத் தமிழர் அறிவுள்ளவர்களை மதிப்பதில்லை. இவர்கள் தங்களை தாங்களே எமாற்றுகின்றார்கள், சிங்கள மக்களையோ அல்லது உலகத்தையோ அல்ல.
நான் கடந்த 25 ஆண்டுகள் மேற்குலக நாடுகளில் வாழ்ந்து வருகின்றேன். ஆனால் மேற்குலக நாடுகளில் உள்ள தமழ் தலைவர்கள் என்னை திட்டமிட்டு ஒதுக்கி மேற்குலக நாடுகளின் நலனை பூர்த்திசெய்கின்றார்கள். புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் தலைவர்கள் போர் நடைபெறும்காலங்களில் மும்முரமாக பணங்களை யுத்தத்திற்காக சேகரித்தனர். ஆனால் இன்று இந்த இந்த மும்முரம் மக்களின் அவலநிலையை மாற்றுவதற்காகவோ அல்லது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவோ காணப்படவில்லை. இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் புலம்பெயர்ந்த தழிழ் தலைவர்கள் தமது மக்களின் நலன் கருதி எந்த வித முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தங்கள் பதவியையும் சுகபோகங்களையும் காப்பாற்றுவதற்காக மேற்குலக நாடுகளின் கைப்பொம்மைகளாக தமிழ் மக்களிற்கு துரோகமிழைத்து வருகின்றனர். தமிழ் தலைவர்கள் தங்களின் நடவடிக்கைகளினால் இலங்கை இந்தியத்தமிழ் மக்களையும், முஸ்ஸீம் மக்களையும், சிங்கள மக்களையும் அவலநிலைக்கு உள்ளாக்கியுள்ளனர். உதாரணமாக சிங்கப்பூர் தலைவர்கள், அமெரிக்க ஆபிரிக்க தலைவர்கள் தங்கள் அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது பெரும்பான்மை மக்களிற்கு எதிராகவோ ஆயுதப்போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. காரணம் அவர்கள் மனித வாழ்க்கையையும் தமது தாய்நாட்டு மக்களையும் நேசித்தார்கள்.
மேற்குலக நாடுகள் தழிழர்களை எவ்வளவு திறமையாக பிரித்தாண்டு தம் இலட்சியங்களை அடைந்து வருகின்றார்களோ அதே போன்று சிங்கள மக்களையும் பிரித்து ஆளுவது உறுதி. தற்போது மேற்குலக நாடுகள் இலங்கையை தங்கள் பிடிக்குள் வைத்திருக்கும் நோக்குடன் தங்கள் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர். இன்நிலையில் இலங்கை தனது அபிவிருத்தித்திட்டத்திற்காக சீனாவை நாடினால் மேற்குலக நாடுகள் தமிழர்களையும், ஜ. நா. சபையையும், இந்தியாவையும் பயன்படுத்தி இலங்கைக்கு போர்குற்றச் சாட்டின் அடிப்படையில் அழுத்தங்களை கொடுப்பார்கள். தற்போதைய இலங்கை அரசாங்கம் புலம்பெயர்ந்த மக்களின் அறிவு, ஆற்றல், வளங்களை இலங்கைக்கு பயன்படுத்த நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. எவ்வாறாயினும் மேற்குலக நாடுகள் இலங்கை மக்களுக்கு கல்வியையும், ஆற்றலையும், வளங்களையும் இலங்கையையோ அல்லது ஆசியாவையோ முன்னேற்றுவதற்காக வழங்கவில்லை. வழமையில் மேற்குலக நாடுகள் உலகை ஆழ்வதற்காக மற்றைய நாடுகளின் ஆற்றலையும், வளங்களையும் தமதாக்கிக்கொள்கின்றன. ஆகவே தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பலன் அழிக்காது என்பது எனது கருத்து.
உறங்காத உண்மைகளை உறங்கவைக்கும் ஆசியாவின் கீழ்தரமான இலங்கைத் தமிழ் தலைவர்கள்.
தமிழ் தலைவர்கள் தங்களின் சுயநலத்திற்காக அன்னிய நாடுகளின் உதவியுடன் தங்களின் புத்தியீவிகளை திட்டமிட்டு ஒதுக்கியும், அழித்தும் வருகின்றார்கள். ஆசியாவில் தன்னுடைய புத்திஜீவிகளை அழித்த பெருமை இலங்கை தமிழனுக்குரியது என்றால் மிகையாகாது ஆசியாவில் வேறு எந்த இனமும் தமிழரைப்போன்று தன் புத்திஜீவிகளை அழித்தொழிக்கவில்லை. நான் யாழ்ப்பாணத்தில் ஆவனி 2015ம் ஆண்டு முதல் வகித்து வருகின்றேன் அரசியல்துறை, கல்வித்துறை, வியாபாரத்தை மருத்துவத்துறை, பாதுகாப்புதுறை, சுகாதாரத்துறை என்பவற்றை உண்ணிப்பாக அவதானித்தும், ஆராய்ந்தும் வருகின்றேன். என்னுடைய அவதானிப்பின் படி இந்திய தூதரகமும், மேற்குலகநாட்டு நிறுவனங்களின் முகாமையாளர்களும் பொதுக்கூட்டங்களுக்கு பிரதம விருந்தினராக அழைக்கப்படுகின்றனர். தமிழ், சிங்கள, முஸ்ஸீம் புத்திஜீவிகள் தொடர்ந்தும் தமிழ் தலைவர்களால் புறக்கணிக்கப்படுகின்றனர். இதில் இருந்து நாம் அறிவது என்னவெனில் இப்பொழுதும், முப்பது வருட ஆயுதப்போராட்ட தோல்வியின் பின்னரும் தமிழ் தலைவர்கள் அன்னியரை பின்பற்றுகின்றனர். இந்நிலையில் சுய ஆட்சியை தமிழர்களுக்கு வழங்கினால் அது அன்னியருக்கு வழங்குவதற்குச் சமன் என்பது எனது தீர்மானம், இது இந்த நாட்டையும், இந்துசமுத்திரத்தையும் பேராபத்துக்குள்ளாக்கும்.
இப்பொழுதும் இந்தியாவினதும், மேற்குலக நாடுகளினதும் உதவியுடன் கல்வி அறிவற்றவர்களும் காடையர்களும் பொய்யான தகமைத்துவத்தை தமிழ் மக்களிடையே பேணிபாதுகாத்து வருகின்றனர். போரின் போது ஆயுதங்கள் இவர்களுக்கு ஒரு பொய்யான தகமையை வழங்கின. தற்பொழுது மேற்குலக நாடுகளின் கடவுச்சீட்டுகளும், பணமும் இவர்களுக்கு ஒரு பொய்யான தகமைத்துவத்தை வழங்கி வருகின்றன. இப்படியான பொய்யான தகமைத்துவம் தமிழரை தொடர்ந்து பின்னடைவிற்கு அழைத்துச்செல்லும். அரசியலில் அனுபவம் இல்லாத தமிழர்கள் தொடர்ந்தும் மேற்குலக நாடுகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து தமிழர்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்கலாம் என்ற கருத்தைமுன்வைத்து வருகின்றனர். இது முற்றிலும் முட்டாள் தனமானதும் ‘காந்தியை’ அவமதிப்பதாகவம் அமையும், இவர்கள் தொடர்ந்து காந்தியை அவமதிப்பார்களாயின் இவர்கள் அடிப்படை வாழ்க்கை நெறியை உணராதவர்கள் என்பது எனது கருத்து. இறுதியில் இவர்கள் இருப்பதையும் இழந்தவர்களாக தாங்கள் வாழ்க்கையை ஏமாற்றத்துடன் சந்திக்க நேரிடும். ஆசியாவில் எந்தவொரு இனமும் இலங்கைத் தமிழர்களைப் போன்று தமது புத்தியீவிகளை அழிக்கவில்லை. இதன் காரணமாக இவர்களை ஆசியாவின் பயங்கரமான இனம் என்று விபரித்து உலக தலைவர்களுக்கு ஒரு கட்டுரையை ஆங்கில மொழயில் எழுதி விளிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன். ஆகையால் ஜ. நா. சபையின் மார்ச் 2017 அமர்வில் இலங்கைக்கு எதிராக எந்தவெரு முடிவும் எடுக்கப்படமாட்டாது.
தற்போதைய அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாடு தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கோ அல்லது புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் தலைவர்களுக்கோ ஏற்றதானதல்ல. இதிலிருந்து நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் தமிழ் தலைவர்கள் மீண்டும் அன்னிய நாடுகளால் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆகையால் மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் தமிழ்தலைவர்கள் மேற்குலக, இந்திய, சிங்கள தலைவர்களைப் போன்று புத்திசாலிகள் அல்ல. இவர்களின் தராதரத்திற்கு சுயஆட்சியை நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள் இலங்கையில் உள்ள அரசியல் நிபுணர்கள். இவ்வாறான சுழல் தமிழருக்கு எந்தவொரு பலனையோ முன்னேற்றத்தையோ தரமாட்டாது. ஆகையால் எமது ஒருமைப்பாட்டை கட்டி எழுப்புவதும் புத்திசாதுர்யமான அரசியல் தலைவர்களை உருவாக்கவதும் மிகவும் முக்கியமானது. இலங்கை கேந்திரமுக்கியத்தவம் வாய்ந்த இந்து சழுத்திரத்தில் இருந்தும் கூட எமது தலைவர்களால் இதை பயன்படுத்த முடியவில்லை. ஏனெனில் தமிழ் தலைவர்கள் அரசியல் தந்திரமற்ற ஆனால் சுயநலம், சமயம், மொழி, சாதி வேறுபாடுகளை கொண்ட ஒரு குறுகிய நோக்கம் கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள். இதனை மக்கள் பொதுவாக இளைய சமுதாயம் இத்தகைய தலைவர்களை இணங்காண வேண்டும். குறிப்பாக கூறப்போனால் யாழ்பாண பல்கலைகழக அரசியல் அறிவியல் தலைமைப்பீட தலைவர்கள் உடனடியாக நீக்கப்பட்டு புதிய தலைவர்கள் நியமிக்கப்படவேண்டும். அத்தோடு இளைய சமுதாயம் அரசியல் அறிவியல்துறையில் கல்வி பயில நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அத்தோடு மட்டும் நின்றுவிடாது அவர்கள் அரசியலில் ஈடுபடுவதை ஊக்குவித்து இதனூடாக ஆளுமைமிக்க சமுதாயத்தை கட்டி எழுப்பவேண்டும்.
அதிகாரப்பகிர்வில் எனது கண்ணோட்டம்….
பரிநாம வளர்ச்சி அதிகாரபகிர்வுக்கு வழிவகுக்கும்; ஆனால் நான் பரிநாம வளர்ச்சியை தமிழ் தலைவர்களிடம் காணவில்லை. தமிழ் ஆயுதக் குழுக்கள் தங்கள் சக உறுப்பினரையும், தமிழ், சிங்கள, இந்திய தலைவர்கலை திட்டமிட்டு கொலைசெய்தனர். ஆனால் மேற்குலக தமிழ் தலைவர்களும், ஜ. நா. சபையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பொழுதும் பெரும்பான்மையான தமிழர்கள் ஆயுத போராட்டம் முறையானதும் சரியானதும் என்ற கருத்தை முன்வைப்பவர்களாக காணப்படுகின்றனர். ஆசியாவின் நீண்ட உள்நாட்டு யுத்தத்தை கைக்கொண்டவர்களிடம் எந்தவொரு பரிநாம வளர்ச்சியை நான் காணமுடியவில்லை. தங்கள் புத்தியீவிகளையும், சிங்கள, இந்திய தலைவர்களையும் திட்டமிட்டு படுகொலை செய்தவர்களிடம் நான் எந்தபொரு பரிநாம வளர்ச்சியையும் காணமுடியவில்லை. இப்பொழுதும் தமிழ் தலைவர்கள் அன்னியரின் நம்பிக்கைக்கு பாத்திரமான தலைவர்களாக உள்ளனர். இந்நிலையில் தமிழ் தலைவர்களுக்கு சுய ஆட்சி வழங்கப்பட்டால் அன்னியரின் ஆதிக்கம் மேலோங்கும், இது இந்த நாட்டிற்கும், இந்து சமுத்திரத்திற்கும், ஆசியாவிற்கும் பேராபத்தை விளைவிக்கும்.
ஆசிரியரைப் பற்றி சில தகவல்கள்: அன்ரனி ஞானவளன் பீற்றர் ஆஸ்திரேலியாவில் வணிக பட்டம் பெற்று கணக்காளராக வேலை புரிந்து வருகின்றார். இவர் சிறு வயதில் இருந்து வாசிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார். உலக பொருளாதாரம், வரலாறு, கலாச்சாரங்கள், மொழிகள், மதங்கள், முதலாளித்துவம், கம்யூனிசம், மற்றும் சர்வதேச அரசியல் என்பவற்றை விளங்கிக் கொள்வதற்காக முந்நூறுக்கும் மேற்பட்ட நூல்களை வாசித்து ஆராந்துள்ளார். இதற்கு மேலாக இரு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். முதல் ஆய்வுக் கட்டுரையில் ‘ஏன் உலகின் பெரும்பாலான ஆசியர்கள் ஆசியாவில் வலு அற்றவர்களாகவும் ஆதிக்கம் செலுத்த முடியாதவர்களாகவும் உள்ளனர்’ என்பதை ஆராந்துள்ளார். இவ் ஆய்வறிக்கையில் அவர் தெரிந்துகொண்டது என்னவெனில் ஆசியர்கள் சனத்தொகையில் மட்டும் மேலோங்கி உள்ளார்கள் அறிவிலும் ஆற்றலிலும் அல்ல. ஒற்றுமையின்மையும் ஒரு காரணமாக உள்ளது. ஆசியர்களை முன்னோக்கி நகர்த்துவதற்கும், ஆசியாவை ஐக்கியப்படுத்துவதற்கும் ஒரு நெறிமுறை ஆசியர்களிடம் இல்லை. சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகள் தங்கள் சுயநலம் கருதி மட்டும் செயற்படுகின்றன. இது ஆசியாவின் பின்னடைவுக்கும் பிரிவினைக்கும் வழிவகுக்கும். இரண்டாம் ஆய்வுக் கட்டுரையில் அவர் ‘மேற்கத்திய நாடுகள் கடந்த ஏழு நூறு வருடங்களாக தங்களை எவ்வாறு மிகவும் பலம், செல்வம், மற்றும் அதிகாரம் வாய்ந்த நாடுகளாக தங்களை மாற்றிக்கொண்டன என்றும், அத்தோடு இத்தகைய முன்னேற்றத்தை எவ்வாறு பேணி பாதுகாத்துக்கொள்ளப்போகின்றன’ என்பதையும் ஆராந்துள்ளார். இவற்றிக்கு மேலாக அவர் நான்கு கண்டங்களில் வாழ்தும், இருபத்தைந்து நாடுகளுக்கு பயணித்தும் அரசியல், கலாச்சாரம், மொழி, மதம் என்பவற்றை ஆராந்துள்ளார் என்பதும், இவர் தந்தை செல்வாவின் செயலாளரின் மகன் என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்கது.