எல்லாப் போராட்ட அமைப்புக்களின் ஆரம்ப புள்ளியாக இருப்பது யாழ் மாவட்டம் என்பது நிதர்சனமான உண்மை இதில் விதி விலக்காக பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் உம் இருந்தது என்பது உண்மையே. ஆனால் இதன் தொடர்சியாக யாழ் மையவாத மேலாதிக்கம் ஈழவிடுதலை அமைப்புக்களுக்குள்ளேயும் மிதவாத தமிழ் அரசியலில் தலமைகளுக்குள் இன்றுவரை நிலவி வருகின்றது. இதிலிருந்து வேறுபடுவது பத்மநாபா தலமையில் உருவான விடுதலை அமைப்பு இதன் தொடர்சியான பயணப் போக்கில் இன்று தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர். யாழ்மையவாத மேலாதிகமற்ற சகல பிரதேசங்களின் சமத்துவத்தையும் பிரதி பலிக்கும் செயற்பாடுகளை தன்னத்தே கொண்டிருப்பது இதன் அடிப்படையில் செயற்படுவதும் இக்கட்சியின் சிறப்பு. 26 வது தியாகிகள் தினம் கடந்த வருடம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கூடவே இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையின் தல நகரத்தை பல்வேறு எதிர்ப்பு, எதிர்பார்ப்புக்களின் மத்தியிலும் திருகோணமலையில் நிறுவியது தனிச்சிறப்பு.
யாழ்பாணத்தில் தோழர் நாபாவிற்கு பின்னரான ஆளுமை மிக்க சிறந்த தோழராக உருவெடுத்து றொபேட்டின் அர்பணிப்பை விபரித்துக் கூறவேண்டிய தேவை இல்லை. ஈழவிடுதலைப் போராட்டத்தில் போராட்டக்களத்தில் தன்னை அர்பணித்து முதல் பெண்போராளி தோழர் ஷோபா. இதன் பின்னாலேயே ஏனைய விடுதலை அமைப்புக்கள் தமது படையில் பெண்களை அதிகம் இணைத்துக் கொண்டனர். அரசியல் அமைப்பு வரைதல் வரை தனது காத்திரமான பங்களிப்பு செய்த தோழர் கேதீஸ் இழப்பு இலங்கை அரசியல் வானில் ஏற்பட்ட வெற்றிடம். இராணுவத்தயாரிப்பு என்றார் முகுந்தன் தோழர் கபூரைஇ குமார் ஐ யாரும் மறக்க முடியாது. இதற்கான செயற்பாடுகளை தோழர்கள் அமீன் தாசன் போனறவர்கள் சிறப்புப் பட செய்தனர் வெகுஜனவேலை என்றால் அதுவும் மக்களுடன் நல்லிணக்கத்துடன் என்றால் தோழர் ராஜன், இளங்கோவின் நினைவுகள் எம்மைவிட்டு அகலா. சமத்துவ சமூகத்தைக் கட்டியமைக்கும் பணியில் தோழர் கந்தசாமியின் பங்களிப்பு சர்வதேச புகழ் பெற்றது. எந்த சூழலிலும் எவ்விடத்திலும் எந்த மாதிரியான விடுதலைக்கான வேலைகளை முன்னெடுத்ததில் தோழர் சாமி 1970 களில் இருந்து அறியப்பட்டவராக இருக்கின்றார். பாராளுமன்ற அரசியலில் சகல அரசியல் கட்சிகளுடனும் இராஜதந்திர உறவுகளை வளர்த்தவர் தோழர் யோகசங்கரி. ஒவ்வொரு தோழர்களும் ஒவ்வொரு தலைவர்களாக தெரியும் அளவிற்கு மக்கள் மத்தியில் வேலை செய்தவர்கள்.