(19.06.2017 தியாகிகள் தின அஞ்சலிக்கவிதை)
…………………………
விடுதலைப் பறவை தோழர் பத்மநாபா
.
இந்த விடுதலைப் பறவையின்
இமைகள் மூடிவிட்டனவா -இல்லை
மூடப்பட்டன.
இதயமில்லா இராட்ஷதர்
பாசிச அசுரர்
இரத்த வெறியின்
குத்தகைக் காரர் -புலிகள்
புரிந்த கொடுமையில்
இமைத்தான் மூடின .
இந்த புரட்சிப் பறவையின்
இதயம்
என்றும் விழித்திருக்கும் -அதன்
சுதந்திரகீதம்
விடுதலை போரில்
கலந்தொலிக்கும் .
ஈழ மண் வாசனையிலும் -இனி
இப்பறவையின் நேசமும்
கலந்தேவீசும்
பறந்து விரிந்த இதன்
சிந்தனைச் சிறகு
பட்டாளி மக்களுக்கு
நிழலாகும்
இது நிஜமாகும் -நாம்
நிஜங்களை தூங்குபவர்கள்
நிதர்சனப் பார்வையில்
வளர்ந்தவர்கள்-எமை
வளர்த்த இப்பறவையின்
கீதத்தை மீண்டும் – மீண்டும்
மீட்டீயே தீருவோம் .
ஆம்.
இந்த பறவையின்
இமைகள் மூடவில்லை .
எம்
இதயங்களில்
விழித்திருக்கிறது -ஈழ
விடுதலையைக் காண
விழித்தே இருக்கிறது
.
தியாகிகளின் சமாதிளே எங்கள் ஆராதனைக்குரிய தேவாலயங்களாகும்
.
பத்மநாபா மக்கள் முன்னணி -சுவிஸ்