எல்லைகளற்ற உலகம் ??

(சுகு-ஸ்ரீதரன்)

உலகின் பெருமளவு யுத்தங்கள் அகதிகள் நெருக்கடிகளுக்கு வடஅமெரிக்கா ஐரோப்பாவின் பலம் பொருந்திய நாடுகள் பிரதானமாக பொறுப்பேற்க வேண்டும். எல்லைகள மூடிவிட்டு தனிக்கிரகமாக ஐரோப்பா வட அமெரிக்கா இருந்த விட முடியாது. மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவில் ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் ேற்கொண்ட விபரீத விளையாட்டின் பிரசவம் தான் ஐரோப்பாவில் வழிநெடுக அகதிகள் குவிந்திருப்பது. இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கும் இதனைப் பொருத்தி பார்க்கலாம். தேசிய இனப்பிரச்சனையினதும் சர்வதேச ஆயுத வியாபாரத்தின் ஒரு ஒரு பகுதியாகவும் இலங்கையின் வடக்கு கிழக்கை வமையமாக கொண்ட யுத்தம் கொழுப்பு மொரட்டுவ தொடக்கம் வத்தளை யாஎல நீர் கொழும்பு ஈறாக தமிழர்களை நெரிசலாக கொண்ட பிரதேசங்களாக மாற்றின.

2 லட்சம் பேர் தமிழக அகதிகள் முகாம்களிலும் வெளியிலுமாக வாழ்கிறார்கள்.

ஒரு மில்லியன் பேர் கடந்த 30 ஆண்டுகளில் ஐரோப்பாவிற்கு புலம் பெயர்ந்து சென்று விட்டார்கள்.

மக்கள் தமது சொந்த நிலங்களில் வாழ முடியாத நிலை ஏற்படும் போது இவ்வாறு நிகழ்கின்றன.

இந்தியாவிற்கு அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயரும் போது பலர் கடலில் சமுத்திரங்களில் மரணமடைந்திருக்கிறார்கள்.

இஸ்லாமிய அரசு அல்ஹைடா புலிப்பயங்கரவாதம் எனப் பேசும் போது இந்த விபரீதங்களுக்கு தாமும் தான் பாத்திரவாழிகள் என்பதை தெரிந்தும் nதிரயாதது போல பாசாங்கு செய்கிறார்கள்.ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்னர் இரத்தம் தோயந்த குரோசியா செர்பியா ஊடாகத்தான் முன்னாள் யூகோசலாவியா ஊடாகவும் தான் இவர்கள் ஐரோப்பாவினுள் நுழைய முயல்கிறார்கள்.

மத்திய தரைக்கடலில் பலநூற்றுக்கணக்கானவர்கள் மரணத்தை தழுவுகிறார்கள். 1970களில் வியட்னாமிய படகுமக்களின் அவலங்கள் ஊடகங்களை நிறைத்திருந்தன.

ஈவிரக்கமற்ற யுத்தம் உயிரைக் கையில் பிடித்த இந்த ஓட்டத்திற்கு வழி வகுத்திருக்கிறது. ஜேர்மனி சுவீடன் போன்ற நாடுகள் கணிசமான அகதி மக்களை ஏற்றுக் கொளவதாக ஒப்புக் கொண்டாலும் ஏனைய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பாரிய தயக்கத்தை காட்டுகின்றன.

பிரிட்டன் அமெரிக்காவைபற்றி பேசவே வேண்டாம்.

சூரியன் மறையாத முன்னாள் சாம்ராச்சியம் இதில் சம்பந்தம் இல்லாதது போல் நடந்து கொள்ள முடியாது.

இரண்டாம் உலகமகாயுத்தகாலப்பகுதியல் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். ஏனைய லட்சோபலட்சம் மக்கள் உயிரைக்கையில் பிடித்தபடி உலகின் பல பகுதிகளுக்கு புலம் பெயர்ந்தார்கள்.

“அயல் வீட்டுக்காரனின் கூரையை எரித்தால் அவர்களுக்கு உங்கள் வேலிகளைப் பிரிப்பதை தவிர வேறு வழிகிடையாது.”

அண்மைய வரலாற்றில் பெருவாரியான 3 ஆம் உலக நாடுகளில் மரணங்களும் அகதி வாழ்வும் என்பது அன்றாட நிகழச்சிகள் ஆகிவிட்டன.

உலகின் பெருமளவு யுத்தங்கள் அகதிகள் நெருக்கடிகளுக்கு வடஅமெரிக்கா ஐரோப்பாவின் பலம் பொருந்திய நாடுகள் பிரதானமாக பொறுப்பேற்க வேண்டும். எல்லைகள மூடிவிட்டு தனிக்கிரகமாக ஐரோப்பா வட அமெரிக்கா இருந்த விட முடியாது.

இந்த நாடுகளின் எல்லைகள் திறந்து விடப்பட வேண்டும்.

மனிதர்கள் உலகின் எந்த மூலையிலும் வாழ்வதற்கேதுவுவாக உலகளாவிய சட்டங்கள சீர் திருத்தப்படவேண்டும்.

யுத்தம் இயற்கைப் பேரனர்த்தங்கள் இதனைக் கோரி நிற்கின்றன.

இன நிற பேதங்களுக்கு இங்கு இடமில்லை.

விடயம் மனித குலத்தின் எதிர்காலம் பற்றியது .வன்முறையற்ற வழிகளில் பாரிய அளவிலான வெகுஜன மற்றும் சர்வதேச சகோதரத்துவ செயற்பாடுகள் ஊடாக மாற்றங்கள் நிகழ்த்தப்படவேண்டும்.

பல்தேசிய கம்பனிகளின் வளச் சூறையாடல் மற்றும் ஆக்கிரமிப்பு காலனி ஆதிக்கம் அடிப்படைவாத பயங்கரவாத குழுக்களின் நலன்களுக்காக உலகம் இயங்க முடியாது

700 கோடி மக்களின் வாழ்வு இருத்தல் எதிர்காலம் பற்றியதே உலகம்.

மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் அழித்து விட்டு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி விட்டு அகதிகளான மக்களை குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை.

இதனை ஐநா. மனித உரிமை ஆணையாளரும் கண்டித்திருக்கிறார்.

தற்போத ரஸ்சியாவுடன் ஆரம்பித்திருக்கும் கெடுபிடிகளும் பெரும் அகதிகள் நெருக்கடியை உருவாக்கும் சாத்தியத்தை கொண்டது.

நாட்டின் எல்லைகளுக்குள் மாத்திரமல்ல. உலகளாவிய அளவில் மனிதர்களின் நடமாடும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

பசுமையான உலகம் பணக்காரர்களுக்கும் கனவான்களுக்கும் தான் கதவு திறக்கும் என்ற நிலை மாறவேண்டும். சனத் தொகை அதிகரிப்பிற்கேற்ப வளங்கள் போதியதன்று.

உணவு தானியம் மற்றும் வளங்கள் பகிரப்படவேண்டும்.

ஏழ்மையும் மிடிமையும் உலகின் கோடான கோடி மக்களுக்கும் வாழ்வும் வளமும் சில லட்சம் பேருக்கும் என்றவாறான உலக ஒழுங்கு அபத்தமானது.

அது மாற்றப்பட்டேயாக வேண்டும்.

மனித குலம் தோன்றியகாலத்திலிருந்து ஓரிடத்தில் இருந்ததில்லை. ஆனால் நவீன யுத்தங்களும் இயற்கைப்பேரழிவுகளும் பாரிய அளவில் மனிதர்களை தமது பாரம்பரிய வாழிடங்களை விட்டு வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன.

உலகம் ழுமுவதும் வளங்ளைச் சூறையாடுவோம். யுத்தம் புரிவோம் அழிவுகளைப் பொருட்படுத்த மாட்டோம் . எமக்கு பிரத்தியேகமான வாழ்க்கை பாதுகாப்பான பசுமையான வாழ்க்கை என்ற நீதியற்ற உலகு தகர வேண்டும்.

எல்லைகள் திறந்து விடப்படவேண்டும்.

எதிர்கால உலகம் அவ்வாறு தான் அமைய வேண்டும்.