தோழர்களே நண்பர்களே உறவுகளே நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் நமது உரிமைக்காக பல்வேறு களங்களில் போராடிக் கொண்டுதான் இருக்கின்றோம். எமது தனிப்பட்ட உரிமைகளுக்கு அப்பால் நாம் சார்ந்த மக்களின் உரிமைகளுக்காக போராடுதல் முதலாவதை விட மேலானது. இதற்கு ஒரு படி மேலே போய் நாம் சார்ந்த மக்கள் என்பதைக் கடந்து உரிமை மறுக்கப்படும் அனைத்து மக்களின் உரிமைகளை நிலைநாட்ட போராடுதல் என்பது மிகவும் சிறந்தது. இந்த சர்வ தேசியப் பார்வை எமக்குள் ஏற்பட்டால் பிரிவினை வகுப்புவாதம் பிரதேசவாதம் மத மொழிப் பிரிவுகள் ஏற்பட வாய்புகள் இல்லை.
உழைப்பவனுக்கே உழைப்பு சொந்தம். வெறும் முதலை இடுபவனுக்கு அல்ல. உழைப்பவன் இல்லாவிட்டால் முதல் வெறும் காகிதம் தான். எனவே முதல் உள்ளவன் முதலாளி என்று அழைக்கப்படாலும் இவனுக்கு உழைப்பவன் தேவைப்படுகின்றான் இலாபங்களை சம்பாதித்து பாக்கெட்டை நிரப்ப. உழைப்பவர்கள் தமக்குள் ஒன்றுமையை வளர்த்தால் முதல் உள்ளவன் உழைப்பவனின் உழைப்பை சொந்தம் கொண்டாட முடியாது. உழைப்பவர்களின் பொது மொழி உறவு தோழமை. இந்த தோழமை தினத்தில் உரிமைகளை வென்றெடுக்க ஒருமித்து ஐக்கியப்பட்டு போராடுவோம். நாம் சகாக்களாக தோழமையுடன் வாழ்ந்து சக சம வாழ்வைக் உறுதி செய்வோம்.
(Saakaran) Nov 19, 2017