எனக்கு இவரைப்பற்றி அதிகம் தெரியாது.தகவல்கள் மூலமாகவே அதிகம் அறிந்திருக்கிறேன்.முன்னாள் பொருளாதார விரிவுரையாளரான இவர் வடகிழக்கு மாகாண முதல்வராக பதவி ஏற்றதன்மூலம் உலகறிந்த ஒரு மனிதராக பிரபலம் ஆனவர். இவரின் கீழே எனது சகோதரன் பணியாற்றிய காலங்களில் இவரைப் பற்றி கூறியிருக்கிறார்.நல்ல நிர்வாகி.நல்ல ஆக்கபூர்வமான செயற்பாட்டாளர்.இவரது செயலாளர் தாஜ் சமுத்திராவில் தங்குவார்.இவரோ செவன் ஐலன்ட விடுதியில் இருந்து கொண்டே வடகிழக்கு மாகாண சபையை எப்படி கட்டி எழுப்புவதென்றே யோசித்தவர்.இன்று வடகிழக்கு மாகாணங்களில் மகிந்தாவால் போடப்பட்ட பாலங்கள் அனைத்தையும் அன்றே போடுவதுபற்றி யோசித்தவர்.மகாவலி ஆற்றின் மேலால் பாலம் ஒன்றை நிறுவி திருகோணமலை மூதூர் தரை வழி தொடர்பை முதலில் உருவாக்கியவர்.ஆயுதம் ஏந்ததாத மனிதராக இருந்தபோதும் திருகோணமலை நகரத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் பெரும்பான்மை சமூகத்தின் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்.இது பலருக்கு தெரியாத தகவல்.
வடகிழக்கு மாகாண சபை அமைக்கு முன்பாக பெரும்பான்மை இனத்தவர்களின் வன்முறைக்கு பல தமிழர்கள் பலியானார்கள்.வடகிழக்கு மாகாண சபை வந்து அதை கட்டுப்படுத்தியது.அது கலைக்கப்பட்டு முப்பது ஆண்டுகளானபோதும் திருகோணமலை நகரத்தில் இன வன்முறைகள் இல்லை.அதற்கு வரதராஜபெருமாளே காரணம்.
நீண்ட நாட்களின் பின் அவர் தமிழரசுக்கட்சியோடு இணைந்து செய்றபட போவதாக தகவல்கள் வருகின்றன .இந்த வரதரால் தமிழரசுக்கட்சியில் தாக்குப்பிடிக்க முடியுமா?இவரை தமிழரசுக்கட்சி சரியாக பயன்படுத்துமா? என்பதே கேள்வி.
இன மத சாதி வாதங்கள் இன்றி தமிழர்களுடன் அரசியல் செய்ய முடியாது. தமிழர்கள் ஒரு சாதி,இன,மத வெறி கொண்ட சமூகம்.அதற்கு இன்றுள்ள சம்பந்தன்,விக்கினேஸ்வரன்,சிறீதரன் போன்றவர்களே பொருத்தமானவர்கள்.இவரகளோடு வரதர்,எப்படி பணியாற்றப்போகிறார்.
வரதர் ஒரு நல்ல பொருளாதார சிந்தனையாளர்.அவரை தேசிய அரசியலைவிட மாகாண அரசியலில், கால் பதிப்பதே நல்லது.வடகிழக்கு புவியியல் வளங்களை நன்கு அறிந்த மனிதர்.வடமாகாண முதலமைச்சராக்கி அவருக்கு நிர்வாக ஒத்துழைப்பு வழங்கினால் அவரால் நிறையவே சாதிக்கமுடியும்.ஆனால் இது தமிழரசுக்கட்சியோடு இணைந்தால் நடக்கக்கூடிய விசயமா?
வரதர் கூட்டமைப்போடு இணைவது அவருக்கு நல்லதல்ல.நதி நீர் கடலுடன் கலந்தால் உப்பு நீராகிவிடும்.அந்த நதியை மறித்து அணை எழுப்பி திசை திருப்பினால் பலருக்கும் பயன்படும்.அந்த திட்டங்கள் இல்லாவிட்டால் நதிநீர் கடலில் கலப்பது தவிர்க்க முடியாது.
மக்கள்மீது தமிழரசுக்கட்சிக்கு அக்கறை இருந்தால் வரதரை அவர்கள் சரியாகப் பயன்படுத்துவார்கள்.
(:- எனக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பிடிக்காத ஒன்று.அநாவசியமான ஒன்று.அவரகள் உள்ளவரை தமிழர்களுக்கு விமோசனம் இல்லை)
-Vijay Baskaran
உள்துறைமுக வீதியில் ஒரு பெரும்பான்மை சமூகத்தவரும் இன்று ஒரு குLம்பம் கூட (எல்லோரும் தமது நிலங்களை தமிழர்களுக்கு விற்றுவிட்டு வெளியேறிவிட்டனர்)இல்லாத நிலமையும் மணிக் கூட்டுக் கோபுரம் மீன்சந்தை போன்ற இடங்களில் இருந்து சிங்கள மொழி பேசும் காடையரை அடக்கிய சம்பவங்களும் கூடவே இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஆதரித்த சிங்கள் மக்களை பெரும்பாலும் தென் இலங்கை மக்களுக்கு பாதுகாப்பு வழங்க திருகோணமலை வாருங்கள் என்று பகிரங்க அறை கூவல் விடுத்து இதனைச் செய்து காட்டியவர். கூடவே திருகோண மலையில் தமிழர் சிறுபான்மையினராக மாறி சிங்களவரகள் திட்டமிட்ட குடீயேற்றத்தினால் பெரும்பான்மையாக மாறுவதை வெற்று கொள்வதற்காக வடக்கில் உள்ள மக்களை 3 ஏக்கர நிலம் தருகின்றது மகாண அரசு திருகோண மலையில் குடியேறுங்கள் இதன் மூலம் சிறு கோட்டை பெரிய கோட்டிற்கு அருகில் பெரிய கோடாக்கும் செயற்பாட்டை செய்ய முனைந்தவர். கூடவே N{ ஆர் எவ்வளவே சலுகைகளை காட்டி திருகொணமலையைத் தவிர்த்து வேறு எங்காவது சிறப்பாக யாழ்பாணத்தில் தலைநகரை அமையுங்கள் அல்லது மட்டக்களப்பலாவது என்று குள்ள நரி வேலை செய்ய முற்பட் போது இல்லை திருமலைதான் எமது தலை நகர் என்று இராஜதந்திரமாக காயை நகரத்தியவர் இதற்கெல்லாம் தோழர் நாபாவின் பவிநடத்தலும் வரதரின் ஏனை அவர் சார்ந்த கட்டி உறுப்பினர்களின் தீரகதரிசனமான செயற்பாடுகளும் காரணமாக அமைந்தன. கூடவே தனது அமைச்சர் அவையில் சகல சமூகத்தினரையும் சகல பிரதேசத்தினரையும் இணைத்து ஐக்கியத்தை கட்டி எழுப்பியவர் அன்றைய எதிரகட்சி முஸ்லீம் காங்கிரஸ் மகாணசபையில் எதிரpக் கட்சி என்றில்லாமல் ஆக்க பூர்வமான எதிர்கட்சியாக செயற்படும் உறவு முறையை வகுத்தவர். இவற்றிற்கு எல்லாம் மாகாணசபை நிர்வாகத்திற்கு அப்பால் கட்சியின் ஊடு உறவை பேணி செயற்பட்டவர் தலமையை கொடுத்தவர் தோழர் நாபா
- Saakaran