மார்கழி ஞாயிறு 2ம் நாள் கனடாவின் ரொரன்ரோ மாநகரின் மண்டபம் ஒன்றில் பிப. 2:30 இல் இருந்து பி.ப 6 மணிவரை நடைபெற்றது. கிழக்கு மாகாண மைந்தரகளினால் ஒழுங்கு செய்யப்பட்டது. சக்கரவர்த்தி கர்ணன் போன்றவர்கள் இந்நிகழ்விற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிகழ்வு தோழர் ஜேம்ஸ் இன் தலமையில் நடைபெற்றது. புத்தக விமர்சகர்களாக வளவன் யோகராசா, ஜீவா, முரளிதரன் நடராசா. பரதன் ஆகியோர் தமது கருத்துக்களைப் பதிவு செய்தனர.; கூட்டத்திற்கு பல்வேறு முன்னாள் விடுதலை அமைப்பு உறுப்பினர்கள் கட்சிப் பிரமுகர்கள், இடதுசாரி செயற்பாடாளர்கள் பொது மக்கள் என சற்று வித்தியாசமான பிரிவினர் கலந்து கொண்டனர். தோழர் ஜேம்ஸ் இன் தலைமையுரையுடன் ஆரம்பித்த இந்த நிகழ்வு பல்வேறு கருத்து பரிமாற்ற மோதல்களை கொண்டதாக அமைந்திருந்தது. இதில் போராட்ட காலத்தில் இருந்து சம கால அரசியல் என்று சகல விடயங்களையும் புத்தக விமர்சனத்துடன் இணைத்து பேசப்பட்டது நிகழ்வின் சிறப்பு அம்சம். பேச்சாளர்களும் பல்வேறு அரசியல் நிலைபாடுகளைக் கொண்டவர்கள் என்பதுவும் இங்கு கவனத்தில் பார்வையாளர்களால் அறியப்பட்டது. நிகழ்வை குழப்ப முற்பட்டவர்கள் கருத்துகளை சந்திக்க முடியாமல் வெளியேறி சம்பவம் இந்த நிகழ்வின் முக்கிய அம்சம் ஆகும். நிகழ்வின் முழுமையான ஒலிப்பதிவை கீழுள்ள இணைப்பில் காண முடியும்.
கனடா ஸ்கார்புரோவில் பிள்ளையானின் “வேட்கை” நூல் வெளியீடும் கருத்தாடலும்.
Posted by Rahu Rahu Kathiravelu on Sunday, December 3, 2017