கருணாகரன் சிவராசா – வருசத்துக்கு முந்தி நிராகரிக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட சைக்கிள் சின்னமும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும்
35 வருசத்துக்கு முந்தி நிராகரிக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட வீட்டுச் சின்னமும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும்
30 வருசத்துக்கு முந்தி முந்தி நிராகரிக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட உதய சூரியன் சின்னமும் தமிழர் விடுதலைக் கூட்டணியும்தான்
மீண்டும் தமிழரின் தலை விதியைத் தீர்மானிக்கப்போகின்றன என்றால்…?
இடையில் நடந்தது என்ன?
அதற்கான விலை என்ன?
அவற்றுக்கான மதிப்பு என்ன?
Amirthanayagam Nixon – உதயசூரியன் சின்னம் 2004ஆம் ஆண்டுதான் கைவிடப்பட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி புலிகளுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் கூட்டமைப்புக்குள் குழப்பங்களை ஏற்படுத்தினார்.
கொழும்பு கொள்பிட்டி அல்விஸ் பிளேஸில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, அமரர் ரவிராஜ் ஆகியோருடன் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அடிதடியில் முடிவடைந்த கூட்டத்துடன் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து ஆனந்த சங்கரி, முகுந்தன் ஆகிய ஒரு சிலரைத் தவிர அனைவரும் விலகினர்.
இதனால் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்று தெரியாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆலோசணை நடத்தியது. ரவிராஜ் வழங்கிய ஆலோசணையின் படி 19978ஆம் ஆண்டு கைவிடப்பட்ட தமிழரசுக் கட்சி மீளவும் புதுப்பிக்கப்பட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து விலகிய அனைவரும் அதில் அங்கத்துவம் பெற்றனர்.
அன்றில் இருந்துதான் (2004இல்) தமிழரசுக் கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்தது. கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவது எனவும் இணக்கம் ஏற்பட்டது.
அப்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் புளொட் அங்கம் வகிக்கவில்லை. வீட்டுச் சின்னம் என்ற யோசனையை ரவிராஜ் முன்வைத்திருக்கவில்லையானால், பொதுச் சின்னம் ஒன்றில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 2004இல் போட்டியிட்டிருக்கும்.
அவ்வாறு இடம்பெற்றிருந்தால், இன்று தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் வந்திருக்காது. கூட்டமைப்பும் உடைந்திருந்திருக்காது என்று கூறலாம். (சிலவேளை வேறு காரணங்களினால் அது உடைந்திருக்கும்)
19978இல் தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை கைவிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கியிருந்தார். ஆனால் இன்று நிலைமை தலைகீழாகவுள்ளது.
(ஞாயிறு தினக்குரல் வெளிவரும் என்னுடைய அரசியல் பத்தி எழுத்துக்களில், இவ்வாறான வரலாறுகள், திருகுதாளங்கள் பலவற்றை எழுதியுள்ளேன்)
Amirthanayagam Nixon – 2004ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் ஏற்பட்ட குத்துவெட்டு, அடிதடி போன்ற செய்திகளை நான் வீரகேசரியில் பணியாற்றியபோது எழுதியிருந்தேன்– நோர்வேயுடனான புலிகளின் சமாதானப் பேச்சுக்கு எதிராக முதன் முதலில் ஆனந்த சங்கரி என்னிடமே கருத்துக் கூறியிருந்தார். அதனை நான் ஞாயிறு வீரகேசரியின் முன் பக்கத்தில் செய்தியாக எழுதியிருந்தேன்-
செய்தி வெளியான அன்று இரவு கொழும்பு இந்தியத் துாதரகத்தில் இந்தியக் குடியரசு தின வைிருந்துபசாரம் இடம்பெற்றது.
அந்த விருந்துபசாரத்துக்கு நான் வீரகேசரியின் சார்பில் சென்றிருந்தேன்- அங்கு என்னைச் சந்தித்த ஆனந்த சங்கரி “நீ எழுதிய செய்தி நான்றாகத்தான் உள்ளது. ஆனாலும் புலிகளிடம் நீ என்னை மாட்டிவிட்டாய்” என்று சிரித்துக் கொண்டு கூறினார்.
Amirthanayagam Nixon 1920 இல் இலங்கைத் தேசியம் பிளவுபட்டு 1921இல் தமிழர் மகா சபை உருவாக்கப்பட்ட நாள் முதல் ஆரம்பித்த இன முரண்பாடு முள்ளிவாய்க்கால் அழிவுகளை தான்டி தற்போது இருப்பதையும் இழக்கும் வடிவத்தில் சென்று கொண்டிருக்கின்றது.
1950களின் பின்னர் ஏற்பட்ட தமிழ் சிங்கள வன்முறை. ஆயுதப் போராட்டமாக மாறாமல் 1970 வரை அஹிம்சை வழியில் சென்றது. 1972இல் துரையப்பா சுடப்பட்டாலும் 1983 வரை அஹிம்சை வழியிலான கோரிக்கைகள் மூலமே தமிழர் அரசியல் நகர்ந்தது.
ஆனால் அந்த அஹிம்சை வழியிலான போராட்டம் தோல்லி கண்ட நிலையில், 1983இல் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது. இயக்கங்களுக்கிடையே மோதல் ஏற்பட்டாலும் 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குறிப்பாக 1995ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை நியாயப்படுத்தும் கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்தன.
இந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் அவலத்துடன் யுத்தம் அழிக்கப்பட்டது. எனவே 1980களில் இருந்து 2009ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட 30 ஆண்டுகளில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் முக்கியமானது. புனிதமானது.
குறைந்த பட்சம் 13 ஆவது திருத்தச்சட்டம் இன்று இலங்கையின் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டமைக்கு அந்த ஆயுதப் போராட்டம் காரணமாக இருந்தது.
ஆனால் 209ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் அந்த ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அஹிம்சை வழியில், அதாவது நெல்சன் மண்டேலா பாணியி்ல் தொடர்ந்து போராட்டத்தை நகர்த்தியிரு்க்க வேண்டிய தமிழ் தலைவர்கள் ரணில் மைத்திரி நல்லாட்சியி்ல் தங்களை அடகு வைத்து விட்டனர்.
நாடாளுமன்ற கதிரைக்குச் செல்லும் அரசியலுக்கு புலிகள் 2000ஆம் ஆண்டு கொடுத்த அனுமதியின் எதிர் விளைவுதான் இந்த அடகு வைக்கும் அரசியலுக்கு வந்த துணிச்சல் என்று கூறலாம்.
ஆகவே அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்றால் இனியொரு ஆயுதப் போராட்டத்தை தமிழச் சமூகம் தாங்காது. அவ்வாறான போராட்டத்திற்கு சர்வதேச அரசியல் சூழலும் இடம்கொடுக்காது.
ஆகவே நெல்சன் மண்டேலா பாணியிலான போராட்டம் ஒன்றை தமிழர்கள் ஆரும்பிக்க வேண்டும். ஆனால் சம்பந்தன் சுமந்திரன், சுரேஸ் போன்றவர்களிடம் அவ்வாறான போராட்டம் ஒன்றை எதிர்பார்க்க முடியாது.
ஆகவே இளம் தலைமுறையினர்தான் அதற்கு தயாராக வேண்டும். புதிய தலைமை, புதிய அரசியல் அணி என்பது அந்த அடிப்படையில்தான் அமைதல் வேண்டும்.
நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைக் கதிரைகளுக்காக கூட்டச் சேர்வதும் பின்னர் உடைந்து போவதும் சாத்தியமான அரசியல் அல்ல. முள்ளிவாய்க்கால் அழிவுக்குப் பின்னரும் மக்கள் தென்பகுதி சிங்கள அரசியல் கட்சிகளின் சலுகை அரசியலுக்கும் நிவாரணத்திற்கும் அடிபணியாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குத்தான் வாக்களித்தனர்.
ஆனால் அந்த வாக்குகளை வைத்து இவர்கள் பிழைப்பு நடத்துகின்றனர். ஆகவே புதிய தலைமை, புதிய அரசியல் அணி என்பது முற்றும் துறந்த முணிவராக வர வேண்டும். அப்போதுதான் சர்வதேசம் நியாயப்படுத்தக் கூடிய போராட்டத்தை, வெற்றி காணும் வரை நடத்த முடியும்-
Siva Murugupillai – ‘சூரியன்’ உதிக்க ‘வீடு’ இற்குள் இருந்து வெளியே வந்து குண்டு வெடிப்பு சத்தம் கேட்டு ‘சைக்கிள்’ இல் ஓடி ஒழியத் துடிகின்றோம்.