பொருளாதார அடிப்படையில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா 62-ஆம் இடமும் இலங்கை 40வது இடமும் பெற்றுள்ளது! உலக பொருளாதார கூட்டமைப்பு சார்பில் வாழ்க்கைத்தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருங்கால தலைமுறை திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில் இந்தியாவுக்கு 62-வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் 22-வது இடத்திலும், சீனா 26-வது இடத்திலும், வங்காள தேசம் 34-வது இடத்திலும், இலங்கை 40-வது இடத்திலும், பாகிஸ்தான் 47-வது இடத்தில் உள்ளன. இந்தப்பட்டியலில் லித்துவேனியா முதல் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா இந்த பட்டியலில் 60-வது இடத்தில் இருந்தது.
வளர்ந்த நாடுகளின் பட்டியலில் நார்வே முதல் இடத்தில் உள்ளது. அயர்லாந்து, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதில் அமெரிக்காவுக்கு 23-வது இடமும், ஜப்பானுக்கு 24-வது இடமும் கிடைத்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் லித்துவேனியாவை தொடர்ந்து ஹங்கேரி, அசெர்பைஜான், லடிவியா, போலாந்து ஆகிய நாடுகள் முறையே முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளன.
இதில் 23வது இடத்திலிருக்கும் அமெரிக்காவின் வீடும்( 1வது படம் ) 40வது இடத்திலிருக்கும் இலங்கையின் வீடும்( 2வது படம்) 62வது இடத்திலிருக்கும் இந்தியாவின் வீடும் ( 3வது படம்) இருக்கிறது. மக்களின் வாழ்வாதாரங்கள் பற்றி மட்டுமல்ல சுற்றுப்புற சூழல் எல்லாமே கணக்கிலெடுக்கப்பட்டு தான் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
நன்றி இன்று ஓரு தகவல் பக்கம்
படங்கள் கூகுள் முகநூல்
ஒரு நாட்டின் நிகர வருமானத்தை மட்டும் வைத்துக் கொண்டு வளர்ச்சியடைந்த நாடு என்பதை தீர்மானிக்கும் முறமை உள்ளது அங்குள்ள வாழ்கைச் செலவு புள்ளிகளையும் வைத்து தீர்மானிப்பது இல்ரைல. மேலும் இருக்கும் வளங்கள் எவ்வாறு பகிரப்பட்டிருக்கின்றது என்பது பங்ஙியும் பார்பதில்லை. கூடவே நாடுகளுக்கு கிடைக்கும் வருமானங்கள் அந்நாட்டின் உற்பத்தி உழைப்பின் அடிப்படையிலா அல்லது வேறு நாடுகளில் இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ எடுகப்பட்டதா என்றும் பார்பது இல்லை. தனி நபர் வருமானத்தை அமெரிக்க டாலர்களில் மாற்றிவிட்டு அந்த நாட்டில் தனிநபர் வருமானம் மிகக்குறைவு கூட என்பதுபோன்ற வார்த்களும் முன் வைகப்பட்டு கொச்சைப்படுத்தல்களும் பெருமை அடித்தலும் நடைபெறுகின்றன. அந்நாட்டு மக்களின் வாழ்கைச் செலவுகளை இதே டாலரி முன்வைத்து பெருமைப்படுத்துவதும் கொச்சைப் படுத்தல்களும் நடைபெறுவதில் இதனை விளக்க கியூபாவை உதாரணத்திற்கு எடுக்கலாம் அங்கு தனி நபர் ஒருவரின மாத வருமானம் 20 டாலர்கள் ஆனால் நிறைவான வாழ்வை வாழுகின்றனர் காரணம் வாழ்கைச் செலவு குறைவு அவரகளின் வருமானம் வாழ்கைச் செலவுகளுக்கு போதுமானதாக இருக்கின்றது