தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா, தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பதவி விலக வேண்டுமென, அவரது கட்சியிடமிருந்து கிடைக்கப்பெற்ற அழுத்தத்துக்கு அடிபணிந்தே, அவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவரது கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், பதவி விலக வேண்டுமென்பதற்கான பணிப்புரையை, ஏற்கெனவே விடுத்திருந்தது. ஆரம்பத்தில் அதை ஏற்று நடக்க மறுத்த அவர், தற்போது பதவி விலகியுள்ளார். 9 ஆண்டுகளாக ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர், அடுத்தாண்டு நடுப்பகுதியிலேயே பதவியிலிருந்து விலக வேண்டியிருந்தது. எனினும், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, பொதுமக்களின் ஆதரவை இவர் இழந்திருந்தார்.