(அரவம்)
இலங்கையின் இன அரசியல்மோதலை (Sri Lanka’sEthno Political conflict) கருப்பொருளாகக் கொண்ட யூட் இரத்தினத்தால் எழுதி இயக்கப்பட்டஆவணப்படத்தைஅண்மையில் பார்க்கசந்தர்ப்பம் கிட்டியது. அருமையானபடம்.சிந்தனையைக்கிளறி எம்மை நாமே கேள்விகேட்டு சுயமீளாய்வைதூண்டச்செய்யும் படம். எம்மை அழவைத்து வெட்கித்தலைகுனியவைக்கும் ஆவணப்படம். எம் இனத்தின் மேல் உண்மையானபற்றுள்ள ஒவ்வொருதமிழனும் அவசியம் பாரக்கவேண்டியபடம். குறிப்பாக இளம் தலைமுறையினர் இப்படத்தைபார்த்து தங்கள் பெற்றோர்களிடம் “இவ்வளவு அட்டூளியங்களும் உங்கள் கண் முன் நடக்கும்போதுநீங்கள் என்னசெய்தீர்கள்”?என அவர்களது மனசாட்சியை உறுத்தசெய்யவேன்டும்.
‘எந்தஒருமுக்கியவிடயத்திலும் சிலஅம்சங்களை யாரும் கதைக்கவிரும்புவதில்லை.’ (within any important issue, there are always aspects no one wishes to discuss) என்ற பிரபல்யஎழுத்தாளர் ஜோர்ஜ் ஓர்வெலின் கூற்றை இவ்ஆவணப்படத்தின் மூலம் இளம் இயக்குனர்யூட் இரத்தினம் கேள்விக்குஉள்ளாக்கியுள்ளார். முக்கியமாக இனக்கலவரங்களின்போது தங்களின் உயிரையும் துச்சமாகமதித்து பலசிங்களமக்கள் தமிழ் மக்களை காப்பாற்றிய சம்பவங்களை இவ்வாவணப்படம் எடுத்துக்காட்டுகிறது.வௌ;வேறு இனமக்களிடையேஏற்ப்படும் உறவு காலாதிகாலமாக நீடித்து நிலைக்கக்கூடியது என்பதை 30 வருடங்களின் பின்னர் நாடு திரும்பிய ஒரு தமிழர் தான் வளர்ந்த சிங்களக்கிராமத்தில் இனக்கலவரத்தின் போது தனது குடும்பத்தைகாப்பாற்றிய சிங்களகுடும்பத்தை சந்திக்கும்போது ஏற்படும் உணர்ச்சிகள் உண்மையானஉறவின் வெளிப்பாடு. நாடுதிரும்பியவரை முதலில் அவர்களால் அடையாளம் காணமுடியாவிட்டாலும் கூட 30 வருடங்களுக்குமுன்னர் அவரை செல்லமாக அழைத்தபெயரை குறிப்பிடும் பொழுது அச்சிங்களகுடும்பத்தின் முகமலர்ச்சியும் உடல்மொழியும் அந்தஉறவின் நெருக்கத்தையும் இறுக்கத்தையும் சொல்லாமல்சொல்கிறது.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை அவர்களின் அனுமதியின்றி கடப்பது அந்நாட்களில் கனவிலும் நினைத்து பார்க்க முடியாததென்று. அப்படி முயற்சிப்பது ஆபத்தானதும் பயங்கரமானதும் கூட. ஒருவகையில் அது தற்கொலைக்கு ஒப்பானது. இருப்பினும் அவ்வாறான முயற்சிகளில் தாங்கள் எவ்வாறு ஈடுபட்டனர் என்பதை இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்கும் பிரபல ஊடகவியவாளர் மனோரஞ்சன் மிகவும் கச்சிதமாக விபரித்து அவ்வித நடவடிக்கைகளால் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட செல்வி மனோகரன் போன்றவர்களை தங்களால் காப்பாற்ற முடியவில்லையே என்று ஏங்கும் போதும் இவ்முயற்சிகளுக்கு உறுதுணையாகவிருந்து உதவியவர்களில் புலிகளால் கொலைசெய்யப்பட்டதை விபரிக்கும் போதும் அவர் நிலைகுலைந்து கண்ணீர்விடும்போது எமது கண்கள் குளமாவதை தடுக்கமுடியவில்லை. இதுவரை காலமும் நண்பன் மனோரஞ்சன் சிறந்த ஊடகவியவாளர் திறமையான பேச்சாளர் நல்ல பாடகர் எனமட்டும் எண்ணியிருந்த எனக்கு அவர் ஓர் சிறந்த நடிகரும் கூட என இப்படம் எனக்கு உணர்த்தியது.
30 வருடகாலபோராட்டத்தில் எம்மினத்தின் மேல்ஏற்ப்பட்ட மாறாவடுக்களில் ஒன்றான சகோதரப்படுகொலைகள் குறித்து அதில் ஈடுபட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் கூறும் தகவல்கள் எம்மையெல்லாம் நிலைகுலையவைக்கின்றன.அச்சகோதரப் படுகொலைகளில் பங்குகொண்டவரின் மனவேதனையில் எழும் கேள்வி“இப்படுபாதகசெயலில் பங்குபற்றிய பலர் தற்பொழுதுவெளிநாடுகளில் உல்லாசவாழ்க்கை வாழ்ந்துகொண்டு டிவியில் சீரியல்கள் பார்த்துக்கொண்டு எதுவுமே நடக்காதது போல் பாசாங்குபண்ணுகிறார்கள். அவர்களது மனச்சாட்சிஒருமுறையாகினும் குறுகுறுக்கவில்லையா?”இக்கொடுரத்தைபார்த்துக்கொண்டு‘சும்மாஇருந்த’
எமதுமனச்சாட்சியும் தற்கொலைசெய்துகொள்ளவேண்டும்.
இறுதியில் பாதிக்கப்பட்டவர்களையும் அதில் ஈடுபட்டவர்களையும் ஒருங்கேகொண்டுவந்து அவர்களது மனக்கிடக்கைகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் ஒருபுதியபாதைக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கைக்கு வழிவகுக்கிறது.
இறுதியாக இப்படத்தின் தலைப்பு ஏன் “நரகத்தில் தேவதூதர்கள்” (Angels in Hell) என இருக்கக் கூடாது என்ற கேள்வி என் மனதில் எழுந்தது.
ஸ்க்காபுறோசிவிக் சென்ரரில் இவ்வாணப்படம் காண்பிக்கபட்டபோது இதைக்குழப்ப முற்பட்டவர்களின் நடத்தைகளைபார்த்த பொழுது பின்வரும் கூற்று ஏனோதெரியவில்லை எனதுமனதில் அடிக்கடி வந்துபோயிற்று.YOU SHALL KNOW THE TRUTH, and TRUTH SHALL PISS YOU OFF .
It has certainly pissed off few people in the audience!