1988 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விவாதிக்கத் தயார் என, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுர குமார திஸாநாயக்க, நேற்று(02) யோசனை தெரிவித்தார். 1988, 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில், மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டதாக தெரிவித்த அநுர குமார திஸாநாயக்க, அதே காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட வன்முறைகள் குறித்து விவாதிக்க தயார் என்றால், தாமும் விவாதம் மேற்கொள்ள தயார் என குறிப்பிட்டார். மேலும் ஐக்கிய தேசியக் கட்சி குறித்த காலப்பகுதியில் அரசியல் வன்முறைகளில் ஈடுபட்டதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், ஐ.ம.சு.கூ.விலுள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோப் டடட போன்ற தெரிவுக்குழுக்களில், தங்களுக்கனெ இடங்களைக் கோர கூடாதென தெரிவித்தார். இந்தக் காலகட்டத்திலேயே புலிகளும் ஜேவிபியும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஆதரித்த தமிழ் சிங்கள் முற்போக்கு அரசியல்வாதிகள் பொது மக்களை வகை தொகையில்லாமல் கொன்றனர். ஐதே கட்சியும் ஜேவிபியை வேட்டையாடியதும் இந்தக் காலகட்டத்திலதான்.