திகன, தெல்தெனிய, மெதமஹநுவர சம்பவத்தில அடித்துக் கொல்லப்பட்ட சிங்கள இளைஞனின்,
தந்தை சீனி நோயால் காலை இழந்தவர்.
தாய் பாரிசவாதத்தால் முடக்கப்பட்டவர்.
தங்கை குடும்ப சூழலால் மனநோயாளியானவர்.
பொதுப் போக்குவரத்து குறைந்த பிரதேசமாகையால் சில நேரங்களில் பள்ளி ஜமாத்தாரை தனது லொறியில் பிரதான பாதைக்கு இலவசமாக ஏற்றிச் செல்வான்.
வறுமையான குடும்பம்.
குடும்ப சூழல் அவனை 24 மணிநேர உழைப்பாளியாக்கி இருந்தது.
உழைப்பின் நிமித்தம் நள்ளிரவு நேரம் அவனுடைய லொறியை பின்நோக்கி நகர்த்தும் போது நிறுத்தியிருந்த முச்சக்கர வண்டியின் 160/= ரூபாய் பெறுமதியான பக்கவாட்டு கண்ணாடி உடைந்து விடுகிறது.
அருகிலே சாராயம் குடித்துக் கொண்டு இன்பமாக இருந்த முச்சக்கரவண்டியின் முஸ்லிம் உரிமையாளரும் அவரின் நண்பர்களும் இதனைக் கண்டு விடுகிறார்கள். கண்ணாடி இருந்த மாதிரி அப்படியே இருக்க வேண்டும் என்று சண்டைக்கு வருகிறார்கள். .இந்த நடு இரவில் கண்ணாடி எடுக்க நான் எங்கே போவது?
விடிந்தவுடன் திருத்தித் தருகிறேன். அல்லது இதோ 1000 ரூபா தருகிறேன் கண்ணாடியைப் போட்டுவிட்டு மீதியைத் தாருங்கள் அல்லது எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறான். ஆனாலும் துரத்திப் பிடித்து அடித்துக் கொல்லப்பட்டான்.
இளைஞனின் ஆத்ம சாந்திக்காக இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
(Shan Naranderan)