விடுதலைப் புலிகள் உச்சம் பெற்ற காலம்.இலங்கையில் எங்கே புலிகள் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்துவார் என தெரியாது.அவ்வளவு அச்சம் நிறைந்த ஒரு சூழ்நிலை.எப்படி எந்த வடிவில் வருவார்கள்.எங்கே குண்டுகள் வெடிக்கும் என்று தெரியாத சூழ்நிலை.இவர்கள் எப்படி குண்டுகளோடு ஊடுருவுகிறார்கள் என்று யாருக்குமே தெரியாது.
இந்நக் காலத்தில்தான் மகிந்தவும் பதவிக்கு வருகிறார்.கோத்தபாயா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகிறார்.இதே காலத்தில் ஏ.கே. வீரசுப்பிரமணியம் என்பவர் கொழும்பு கதிரேசன் கோவிலின் தர்மகர்தாவாக இருந்தார்.இவருக்கு மண்ணெண்ணை மகேஸ்வரன் தொழில்ரீதியாக நண்பர்.
இந்த ஏ.கே. வீரசுப்பிரமணியம் ஒரு வர்த்தகர்.வீரா என பலராலும் அழைக்கப்படுபவர்.இவருக்கும் புலிகளுக்கும் ஆகாது.எனினும் நாட்டில் புலிகளின் ஊடுவல் மற்றும் கொலைகள் காரணமாக மௌனமாக இருந்தார்இவர் ஒரு கடும் பக்தரும்கூட.பிராமணர்கள்மீது கண்மூடித்தனமான விசுவாசம் உள்ளவர்.
இவரது கோவிலின் அய்யர் ஒரு நாள் இவரது வீட்டுக்கு வந்து தகவல் கூறினார்.கோவிலில் அவரது அறையில் கரும்புலி உடைகளும் வெடிப் பொருள்களும் இருப்பதாகவும் இதை ஒரு தமது உறவுக்கார பெண்(அய்யர் அம்மா) கொண்டு வந்ததாகவும் நீண்ட நாட்கள் ஆனதால் அதை பிரித்துப் பார்க்க அவை இருந்ததாகவும் கூறினார்.
இதை இராணுவத்திடம் தெரிவித்தால் இராணுவத்தாலும் ஆபத்து புலிகளாலும் ஆபத்து வரலாம் என்பதால் அதை எப்படியாவது மறைக்க முயன்றார்.அதற்கு அவரது உதவியாளரான நிமால் ரஞ்சித் சில்வா என்பவரின் உதவியையும் நாடினார்.அவரும் அதை எடுத்துச் சென்று களனி கங்கையில் வீசிவிட்டார்.
ஒரு வருடம் கழிந்தது.ஒரு கரும்புலி இராணுவத்தின் பிடியில் சிக்கினார்.அவர் உண்மையை உளற இராணுவம் கதிரேசன் கோவில் அய்யரிடம் வந்தது.அய்யரோ தர்ம கர்த்தாவான வீரசுப்பிராணியாக எடுத்துச் சென்றதாக கூற வீரா கைது செய்யப்பட்டார்.அய்யர் தப்பிவிட்டார்.
விசாரணையுன்போது உதவி செய்த நிமாலை காட்டிக்கொடுக்காமல் களனி ஆற்றில் போட்டதாக கூறினார்.அந்த இடத்தை காட்ட கூறியபோது அவரால் காட்ட முடியவில்லை.இதனால் இராணுவம் சந்தேகப்பட்டது.மீண்டும் அவரை களனிகங்கைக்கு அழைத்துச் சென்றது.அப்போது நிமால் அங்கே வந்து தூர நின்று இடத்தை சைகை மூலமாக அடையாளம் காட்ட வீராவும் அந்த இடத்தைக் காட்ட மறைக்கப்பட்ட கரும்புலிகளின் ஆடைகள் வெடிப் பொருட்கள் மீட்கப்பட்டன.இவரும் மண்ணெண்ணை மகேஸ்வரன் தலையீட்டால் விடுதலையானார்.
இவருக்கு ஒரு வீர மைலன் திருமண மண்டபம் இருந்தது.இதில் அடிக்கடி மனோ கணேசன் மனித உரிமைகள் சம்பந்தமான கலந்துரையாடல்கள் நடத்தினார்.இது இவர்மீது வீணான சந்தேகத்தை உருவாக்கியது.இதன் காரணமாக சில காலங்களின்பின் இராணுவ உளவுப்பிரிவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பல அய்யர்களின் போக்குவரத்து வசதிகளை அன்றைய இந்து கலாச்சார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாதுகாப்பு கெடுபிடிகளில் இருந்து பாதுகாப்பை தளர்த்திக்கொடுத்தார்.இந்த வசதிகளை அய்யர் குடும்பமூலமாக புலிகள் பயன்படுத்தினார்கள்.
காரணமின்றி குற்றவாளியாகி ஏ.கே.வீரசுப்புரமணியம் பலியானார்.ஆனால் குற்றவாளியான அய்யர் அம்மாவை யாரும் தேடிப் பிடிக்கவில்லை.இப்படி பல அய்யர்கள் புலிகளுக்கு உதவினார்கள்
பிராமணர்களும் பயங்கரவாதத்துக்கு துணை நின்றார்கள்
(Vijaya Baskaran)