ரஞ்சித் தோழர் அல்லது பெரிய ரஞ்சித் தோழர் என்று தோழர்களால் பாசத்தோடு அழைக்கப்பட்டவர்.1978ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி அனர்த்தத்தை தொடர்ந்து நிவாரண வேலைகளுக்காக தோழர் நாபாவின் தலைமையில் சென்ற குழுவினருடன் இனைந்து பணியாற்ற முன்வந்த கிழக்குமாகான இளைஞ்ஞர்களில் தோழர் ரஞ்சித்தும் ஒருவர். களுவாஞ்சிக்குடியை பிறப்பிடமாக கொண்ட வர். கல்வியிலும் பொருளாதார வளங்களிலும் செழிப்பான குடும்பப்பின்னணியிலிருந்து வந்தவர்.பார்ப்பதிற்கு மிகவும் துடிப்புமிக்க, அழகானகட்டமைப்புடைய உடலமைப்பைக்கொண்ட இளைஞனாகவும் , மிடுக்கான பேச்சும் சில சிலசமயங்களில் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துபவராகவும் காணப்படுவார்
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி அனர்த்தை தொடர்ந்து மக்களின் குடியிருப்புக்கான புணரமைப்பு வேலைகள் , மாணவர்களுடைய கல்வியை மேம்படுத்துதல் போன்ற விடயங்களுடன் இரவு நேரங்களில் EROS இயக்கத்தினுடைய புரட்சிகர இரகசிய அரசியல் வேலைத்திட்டங்களை இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் முன்னெடுத்த காலகட்டம். ஈழ மாணவர் பொதுமன்றம்(GUES) கிழக்கு மண்ணில் வேறூன்றிய காலம். தோழர் குன்சி அவர்களே கிழக்கு மாகாணத்தில் அரசியல் தளத்தை உருவாக்குவதில் தலைமையேற்று செயற்பட்டவர். தோழர் ரஞ்சித் அவர்களின் சித்தாந்தத்தின்மீதான தௌிவும் ,கொள்கைப்பிடிப்பும், வேகமான செயற்பாடுகளும் அவரை இனம் காட்டியது. EROS இயக்கத்தினுடைய அன்றைய தளச்செயற்பாட்டாளர்களால் சர்வதேச போர்ப்பயிற்சி முகாமுக்கு பயிற்சிக்காக இலங்கையிலிருந்து தெரிவுசெய்து அனுப்பப்பட்ட முதலாவது அணியில் தோழர் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் .தோழர் ரஞ்சித்தும் அனுப்பப்பட்டார். 70களின் இறுதிப்பபுதியில் முழுமையாக சிறப்புப் பயிற்சியை முடித்து தாயகம் திரும்பினார். 70களின் இறுதிப்பகுதியல் EROS இயக்கத்துக்குள் எழுந்த தத்துவார்த்த மற்றும் நமைமுறை சார்ந்த விடயங்களின் முரண்பாடுகளினால் 1981 ம் ஆண்டு தோழர் நாபா தலைமையில் EPRLF என தம்மை அடையாளப்படுத்தி வேலைசெய்ய ஆரம்பித்தபோது தோழர் ரஞ்சித்தும் தன்னை EPRLF உடன் இனைத்துக்கொண்டார். .அக்காலகட்டத்தில் தோழர் தேவா அவர்கள் கொழும்பை மையப்படுத்தி தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருந்த காலம் .தோழர் தேவா அவர்களை சந்திப்பதிற்காக அவருடைய வசிப்பிடத்திற்கு சென்றவேளை அரசபடைகளினால் கைது செய்யப்பட்டு சிறைவாசத்தை அனுபவித்தார்.முன்னாள் EROS சாகா ஒருவர் கொடுத்த தகவலை அடுத்தே தோழர் ரஞ்சித் கைதுசெயப்பட்டதாக பின்பு கிடைத்த தகவல்கள் உறுதிசெய்தன. நீண்ட சிறைவாசத்திற்கு பிறகு 1983ம் ஆண்டு நடைபெற்ற மட்டக்கிளப்பு சிறையுடைப்புடன் மீண்டும் வெளியே வந்து தனது அரசியல் இரானுவ செயற்பாடுகளை முன்னெடுத்தார்.தமிழ் நாட்டிலிருந்த பயிற்சி முகாமில் தோழர்களுக்கு இரானுவ கல்வியை போதிப்பதிலும் ஆயுதங்களை கையாள்வதிற்கான சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்வதிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்தினார்.1984ம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் முதலாவது காங்கிரசிலும் பங்குபற்றி கட்சியின் மீதான தத்துவார்த்த மற்றும் நடைமுறை சர்ர்ந்த விடயங்களில் தனது அக்கறைகளை வெளிப்படுத்தினார். மட்டு -அம்பாறை பிராந்திய மக்கள் விடுதலைப்படை (PLA)தளபதியாக செயற்பட்ட தோழர் சிவா அவர்கள் 28.03.1985 அன்று விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் எதிர்த்து போரிட்டு வீரச்சாவடைந்தார்.அதைத்தொடர்ந்து தோழர் ரஞ்சித் அதவர்கள் மட்டு -அம்பாறை பிராந்திய விடுதலைப்படை (PLA)தளபதியாக நியமிக்பப்பட்டார். பல்வேறு இரானுவ நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு மக்கள் விடுதலைப்படையை கிழக்கு மண்ணில் பலப்படுத்தினார். இக்காலகட்டத்தில் காரைநகர் கடற்படை முகாம் மீதான தாக்குதலிலும் தோழர் தேவா மற்றும் தோழர் சின்னவன் போன்றவர்களுடன் இனைந்து பணியாற்றினார். களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாமை தாக்கும் தன் திட்டத்திற்கான. வரைபடங்கள் உட்பட பலவிதமான திட்டங்களையும் வகுத்ததுடன் அதற்கு தேவையான போர்க்கருவிகளை தமிழகத்திலிருந்து கொண்டுவருவதிற்கான
கடல்வழி பயணத்தின்போதே இலங்கை கடற்படையினரின் சுற்றிவளைப்பில் கடுமையான தாக்குதலுக்கு எதிராக போரிட்டு தோழர்கள் ரஞ்சித்தும் ஏனைய தோழர்களும் வீரகாவியமானார்கள். அவர்களால் கொண்டுசெல்லப்பட்ட ஆயுதங்களும் கடலில் மூழ்கியது.இத்தாக்குதலில் தோழர் ரஞ்சித்துடன் தோழர் கடாபி தோழர் சந்திரன் தோழர் கந்தசாமி தோழர் ஜெராட் தோழர் கடாபி தோழர் தாஸ் போன்றவர்கள் வீரகாவியமானார்கள் .இத்தாக்குதலில் தோழர் யோகா என்பவர் மட்டுமே உயிர்தப்பி இரண்டு நாட்களின் கரையொதிங்கினார்.இச்சம்பவத்தில் மரனித்த தோழர் கடாபி (திருமலை) அவர்கள் EPRLF இன் செந்தத்தயாரிப்பான செல் மோட்டர்களை தயாரிப்பதில் சிறந்த தொழில் நுட்ப அறிவை வளர்த்துக்கெண்டதுடன் ஆயுததொழிற்சாலையில் பணிபுரிந்தவர். கடற் பயணத்தின் போது கடற்படையினரை தாக்குவதிற்கு செல் மோட்டர்களை திறமையாக பயன்படுத்தக்கூடிய ஆற்றலைக் கொண்டிருந்தார்.இவ் முற்றுகையில் 03.04.1986ம் ஆண்டு வீரகாவியமான அனைத்து தோழர்களுக்கும்
எங்கள் புரட்சிகர அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.