90ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லிம்களை விரட்டிய பின் இயக்கத்திலிருந்த முஸ்லீம் போராளிகளையும் இயக்கம் ஓரம் கட்டியது. ஓரமென்றால் சுட்டுக்கொன்று தலைகீழாக மண்ணில் புதைத்தது.
உமர் மாமாவையும் இப்படித்தான் வாகநேரிக் காட்டில் புதைத்துவிட்டதாக பார்த்தவர்கள் சொல்லக்கேட்டு அதிர்ந்திருக்கிறேன்.
சக தோழனை, இயக்கத்திற்காக ஆள் திரட்டியவனை இயக்கமே தஞ்சமென நம்பியவனை, தன் சொந்த உறவுகளை வெறுத்து தலைவனை நேசித்து சமயத்தையும் சமுதாயத்தையும் தூக்கி எறிந்துவிட்டு இயக்கமே மூச்சு என நம்பி வந்தவனை ஒரே காட்டில் உறங்கி,
ஒன்றாக வாழ்ந்தவனை உயிருடன் சுட்டுக்கொன்று புதைப்பதற்கு எப்படி மனசு வந்தது?
______
ஓட்டமாவடி அறபாத்தின்
“நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்”
பக்க எண் 49….
புலிகள் அமைப்பில் முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்ட உட்படுகொலைகள்
இன அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுத்திகரிப்பு தானே தவிர வேறொன்றில்லை.
இதனை தொடந்தும் மறுத்துவரும் அல்லது பூசி மெழுகி வரும் இல்லையென்றால் இவை குறித்து சரிவர அறியாத சிலருக்காகவே
முஸ்லீம் சமூகத்திலிருந்து ஒரு தோழமை பதிவு செய்யும் இந்தக் குறிப்பினை
முன் வைக்கிறேன்.
இப்போது அதிகாலை 3மணி பேரூந்தில் கொஞ்சம் நூல்கள் வந்து சேர்ந்தன.
வீட்டுக்குத் திரும்பியதும்
அவற்றிலிருந்து அறபாத்தை எடுத்து வாசிப்புச் செய்யும்போது இதனைப்
பதிவிடவேண்டுமென்று தோன்றியது.
தொடர்ந்தும்
வாசித்துக்கொண்டிருக்கிறேன்…
(Thilipkumaar Ganeshan)