மத்திய – மாநில அரசுகள் தமிழக மாணவர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டது

நீட் தேர்வு எழுதுவதற்காக
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி
மாணவர் கஸ்தூரி மகாலிங்கம்
தனது தந்தை கிருஷ்ணசாமியுடன்
கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சென்றுள்ளார்.

வேறு மாநிலத்தில் நீட் தேர்வு மையத்தைப் போட்டதால்,
மன உளைச்சலினாலும்,அலைச்சலினாலும்
ஏற்பட்ட உடல் ரீதியான பாதிப்பாலும்
கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

மத்திய – மாநில அரசுகள் தமிழக மாணவர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டதும்,தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் வகையில் சி.பி.எஸ்.ஈ தமிழகத்தில் போதிய நீட் தேர்வு மையங்களை ஒதுக்காததுமே இம்மரணத்திற்குக் காரணம்.

இம்மரணத்திற்கு மத்திய – மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.

நீட் தேர்வை நடத்தும் பொறுப்பில் இருந்து
சி.பி.எஸ்.ஈ ஐ நீக்க வேண்டும்.

நீட் தேர்விலிருந்து தமிழக அரசின்
ஒதுக்கீட்டு இடங்களுக்கு
உடனடியாக விலக்கு வழங்க வேண்டும்.

மரணமடைந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை மத்திய – மாநில அரசுகள் வழங்கிட வேண்டும்.

________________________________________________

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கப்
பொதுச் செயலாளர் டாக்டர் ஜிஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தி.