தமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) தலைவரும், சமுக செயற்பாட்டாளருமான தோழர் சுகு சிறிதரன் திருநாவுக்கரசு அவர்களின் ஆக்கத்தில் உருவான “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” எனும் நூல் வெளியீடு பேர்லீன் நகரில் 08.05.2018 அன்று Kopf str-25,12053 Berlin எனுமிடத்தில் அமைந்த மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வானது இலங்கையில் இதுவரை காலமும் பல்வேறு அனர்த்தங்களினால் மரணித்த மக்களுக்கான ஒரு நிமிட அஞ்சலி, வரவேற்புரை ஆகிய ஆரம்ப நிகழ்வுகளுடன் இந்நிகழ்வினை திருமதி .ஞானகௌரி கண்ணன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இந்நூலுக்கான ஆய்வுகளை திரு .சுசீந்திரன் நடராஜா அவர்களும், திருமதி.உமா அவர்களும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் மேற்கொண:டிருந்தார்கள்.
இந்நூலினை எழுத்தாளர் திரு.பொன்னையா கருணாகரமூர்த்தி அவர்கள் வெளியிட்டு வைக்க முதற்பிரதிகளை திரு.இயேசு பெர்ணான்டோ,திரு.குமாரசாமி இராசலிங்கம் திருமதி.சாந்தாதேவி,திருமதி.வசந்தமலர் சோதிலிங்கம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவருமே இந்நூலைப் பெற்றுக்கொண்டனர்.
நூலாசிரியரின் கருத்துரையும், நிகழ்வில் பங்குபற்றியோரின் கருத்துப்பகிர்வுகளும் இடம்பெற்றது .கருத்துப்பகிர்வுகளைத் தொடர்ந்து தேநீர் விருந்தும் நூலாசிரியர் கௌரவிப்பும் இடம்பெற்றது. இறுதியாக திரு.பத்மநாதன் நடராஜா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது.