கனடா ஒன்ராறியோ பாராளுமன்றத்திற்குத் தெரிவாகிய இரண்டு தமிழர்களிற்கும் வாழ்த்துகள்! தமிழர்கள் புலம்பெயர் தேசத்தில் அரசியலில் பலம் பெறுவது வரவேற்கத்தக்க விடயம். இதில் மாறுபாடு கிடையாது !
கனடாவில் நடந்து முடிந்தது கனடாவின் மாநிலங்களில் ஒன்றான ஒன்ராறியோ மாகாணத்திற்கான முதல்வரை தெரிவு செய்யும் ஒரு தேர்தல் என்பதையும் இந்த மாகாணத்தேர்தலில் அந்த மாகாணத்தின் அபிவிருத்தி,வேலைவாய்ப்பு,சம்பள உயர்வு,பொருளாதார வளரச்சி போன்ற விடயங்களே கருத்தில்கொள்ளப்படுமே தவிர எமது இனத்தின் தேசியப்பிரச்சனை சம்மந்தமாக ஒருபோதும் பேசப்படமாட்டாது, என்பதை கனடாவிற்கு வெளியில் வசிக்கும் தமிழர்கள் நினைவில்கொள்க,
சரி தற்போது நான் விடயத்திற்கு வருகிறேன்
நடந்து முடிந்த இந்த தேர்தல் சம்மந்தமாகவும் வழமைபோல் அந்த தேர்தலில் தமிழர்களிற்குள் ஏற்பட்ட குழறுபடிகள்,குழிபறிப்புக்கள் சம்மந்தமாகவும் கனடாவில் தன்னைத்தானே அரசியல் ஆய்வாளராகவும் அறிவுசீவியாகவும் காட்டிக்கொள்ளும் நேரு குணரெட்ணம் தனது முகநூல் பக்கத்தில் இட்ட பதிவில் ஒன்ராறியோ மாகாண கட்சியான கன்சர்வேட்டி கட்சிசார்பில் போட்டியிட்ட தமிழர் ஒருவர் வெறும் 81 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்ததிற்கு சில தமிழர்களின் விசமப்பிரச்சாரமே காரணம் என குறிப்பிட்டிருக்கிறார்,
இந்த அசிங்கமான “விசமப்பிரச்சார” கலாச்சாரத்தை (தமிழர்களிற்கு தமிழர்களே குழிபறிக்கும் காட்டிக் கொடுப்பை) கனடாவில் ஆரம்பித்து வைத்து தமிழர்களைச் சிதைத்து சின்னாபின்னமாக்கியவரே சாட்சாத் நேரு குணரட்ணம்தான்!
தற்போது பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்பாக இருக்கும் இவர் கடந்த காலங்களில் தான் உருவாக்கிய அந்தக் கலாச்சாரத்தை மிகச்சிறிய அளவில் இவர்களுக்கு எதிராக மற்றவர்கள் செய்யும்போது முகநூலில் தோன்றி நல்ல பிள்ளை வேடம் போடுகிறார்!
அதாவது சாத்தான் வேதம் ஓதுகிறது என்பதை தமிழ் சமூகத்திற்கு தெரியப்படுத்துவதே இந்த பதிவின் நோக்கமாகும்,
இவர் உருவாக்கிய கடந்தகால அசிங்க வரலாறால் இன்று ஒரு தமிழர் வெறும் 81 வாக்குகளால் தனது வெற்றி வாய்ப்பை இழந்து நிற்கிறார். இதற்கு நேரு மற்றவர்களை குற்றம் சாட்டுகிறார். ஆனால் இந்த விடயத்தை மிக நுணுக்கமாக பார்த்தால் இந்தத் தோல்விக்கு கடந்தகாலங்களில் குழிபறிக்கும் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையில் நேரு குணரெட்ணம்தான் பொறுப்புக்கூறவேண்டும்!
உண்மைகளை நேரெதிராக முகம்கொடுக்கும் துணிவும்,நேர்மையும் நேரு குணரட்ணத்திற்கு அறவே கிடையாது !அவ்வாறு அவருக்கு தனது கடந்தகாலங்களை எதிர்கெள்ளும் துணிவும் நேர்மையும் இருந்திருந்தால் அவரது பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டங்களை ஒருபோது அழித்திருக்கமாட்டார்,நானும் இவருக்காக ஒரு சிறப்பு பதிவை இங்கு போடவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது,
இவர் கடந்தகாலங்களில் விளைவித்த குழப்பங்களினூடாக உருவான தற்போதைய தேர்தலோடு சம்மந்தமான பண்புகளை கொண்ட முக்கியமானவை சிலவற்றை பார்போம்….!
இலகுப்பிள்ளை இவர் ஒரு விஞ்ஞானி, கனடாவின் அணுமையத்தில் உயர் பதவியில் வேலை செய்தவர இவர் கனடா அரசியலில் பலஉயர்மட்ட அரசியல் தலைவர்களுடன் கடந்தகாலங்களில் மிகவும்நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தவர்,தமிழர் விடுதலைக்கு எதிரானவர் இல்லை,
இவர் சமாதான காலத்தில் அல்லது அதற்கு சற்று முன்னாக இருக்கவேண்டும் வன்னி சென்று பிரபாகரனை சந்தித்து தான் கனேடிய அரசியலில் ஈடுபடபோவதை தெரிவித்து
அவரிடம் சம்மதம் வாங்கிவிட்டு வந்து ஒன்ராறியோ மாகாண மார்க்கம் தொகுதியில்
மாக்கம் கவுன்சிலர் தேர்தலில் நின்றார். இலகுப்பிள்ளைக்குரிய முழு ஒத்துழைப்பையும் கொடுக்கும்படி பிரபாகரனால் கனடாவிலிருந்த புலிகளின் கிளைக்கு அறிவுறுத்தப்பட்டது,(இந்த தகவல் ஒன்றும் இரகசியமானதில்லை வெளியில் பேசப்பட்ட விடயமாகும்)
இலகுப்பிள்ளைக்கு ஆதரவு கொடுக்கும்படி பிரபாகரன் கூறியும் அந்த நேரம் இலகுப்பிள்ளைக்கு ஆதரவுகொடுக்காது,குழப்பி கனடாவில் பெரும்பிரச்சனை செய்து,இலகுப்பிள்ளளையின் தோல்விக்கு வித்திட்டவர்களுக்கு தலைமை தாங்கியவர் இந்த நேருகுணரெட்ணம்தான்! இவருக்கு ஒத்துழைத்தவர்கள்
தமிழர் தகவல் திருச்செல்வமும்,தற்போதைய ரொரோன்ரோ கவுன்சிலராக இருக்கும் நீதன் சானும்!
இதனால் இலகுப்பிள்ளையும் அவரது சகாக்கள் சிலரும் குழப்பகரமான மனநிலையிலிருந்தனர்,காரணம் அவர்கள்
நினைத்தனர் தம்மை ஒருபக்கம் தேர்தலில் நிற்குமாறு அனுமதித்துவிட்டு மறுபுறத்தில் கனடா உலகத்தமிழர் இயக்கத்தை வைத்து பிரபாகரன் குழப்புவதாக அவர்கள் சந்தேகப்பட்டனர்,
இலகுப்பிள்ளைக்கு புலிகளின் கனடா கிளையான உலகத்தமிழர் தேர்தலில் ஒத்துழைப்புக்கொடுக்காததைப்பற்றியும் அதையொட்டி கனடாவில் நடக்கும் குழப்பங்களையும் அறிந்த பிரபாகரன்,அந்த நேரம் கனடா உலகத்தமிழர் இயக்கத்திற்கு பொறுப்பாக இருந்த ரெஜியை உடனடியாக வன்னிக்கு அழைத்து பொறுப்பிலிருந்து நீக்கியிருந்தார். இலகுப்பிள்ளைக்கெதிராக செயற்பட்டதற்கு ரெஜிக்கு உண்மையில் வேறுவிதமான தண்டனை கொடுப்பதற்கே பிரபாகரன் தீர்மானித்திருந்தார்.
காரணம் தன்னை வந்து சந்தித்து தனது அனுமதி பெற்று தேர்தலில் நின்ற ஒருவருக்கு எதிராக தனது உத்தரவையும் மீறி செயற்பட்டதை மன்னிக்கும் மனநிலையில் அப்போது பிரபாகரன் இருக்கவில்லை,ஆனால் நடந்த விடயத்தைப்பற்றி முழுமையாக அறிந்திருந்த பொட்டம்மான் இதைப்பற்றி பிரபாகரனுக்கு விளங்கப்படுத்தியதால் ரெஜி தண்டனையிலிருந்து தப்பினார் பொறுப்பிலிருந்து மட்டும் விடுவிக்கப்பட்டார்.
உண்மையில் இந்த விடயத்தில் ரெஜி ஒரு அப்பாவி! அவரது அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தி அவரை பலிக்கடாவாக்கி இந்தக் குழப்பங்களை விளைவித்தவர் நேரு குணரெட்ணம்தான்….தலைவர் இருக்கும்போதே தலைவரது உத்தரவுக்கு எதிராக செயற்பட்டு கனடாவிலிருந்த அறிவுசீவிகள் சமூகத்தை புலிகளிடமிருந்து
தூரவிலக்கி வைத்தவர் இந்த நேரு குணரட்ணம்…!
இலகுப்பிள்ளை கனடாவின் முன்னாள் பிரதமர்களான கிறைச்சியான்,போல் மாட்டின் போன்றவர்களுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தவர்.
இலகுப்பிள்ளைக்கு எதிராக புலிகளின் கனடா கிளையான “உலகத்தமிழர் இயக்கம்“ செயற்பட்டதை அறிந்த போல்மாட்டின் உலகத்தமிழர் இயக்கத்தின்மீது மிகுந்த எரிச்சலடைந்ததாக அப்போது கேள்விப்பட்டேன்.(கிறைச்சியான் கனடாவின் முன்னாள் பிரதமர்,இந்த விடயம் நடந்தபோது கனடாவின் பிரதமாராக போல்மாட்டின் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,)
இவ்வாறு கனடாவிலும் சர்வதேச அளவிலும் பல சதிவேலைகளையும்,
குழிபறிப்புக்களையும் செய்து புலிகளைத் தனிமைபபடுத்தவதற்கு மறைமுக சதிவேலைகளைச் செய்தாரா? அல்லது பிரபாகரன் என்றாலும் கனடாவில் நடக்கும் விடயங்களிற்கு தன்னுடன் கலந்து பேசியே சகலதிற்கும் அனுமதிகொடுக்கவேணடும் என்று தன்னை ஒரு பெரிய புத்திசாலியாக நினைத்துகொண்டிருக்கும் மனநிலையுடன் செயற்பட்டாரா நேருகுணரெட்ணம்?
நான் ஏன் இவ்வாறு நினைக்கிறேன் எனில்
2009 ம் ஆண்டு கேபியை துரோகியாக பிரகடனம் செய்ததிலும்,தலைவரது வீரமரணத்தை மறைத்ததிலும் நேரு குணரெட்ணத்தின் பங்கு மிகப்பெரியது(நான் ஏற்கனவே இந்த விடயம் பற்றி முகநூலிலும் வேறுசில இடங்களிலும் குறிப்பிட்டுள்ளேன்)
இதுபற்றி அவரிடம் (நேரு குணரெட்ணத்திடம்)கேட்டபோது, தம்பி அவரிடம்(கேபி)கூறுங்கள்….வரவேண்டியவர்களூடாகவும், வரவேண்டிய வழிகளூடாகவும் அவரை வரச் சொல்லுங்கள்….அவ்வாறு வந்தால் சகலதும் சுமூகமாக இருக்கும் இல்லாதபோது பிரச்சனைதான் என தொலைபேசியில் சொன்னார். தலைவரது மரணத்தை சனங்கள் விரும்பவில்லை என்பதையும் சொன்னார்!
மேற்குறிப்பிட்ட இரண்டு முக்கிய விடயங்களிலிருந்தும் (இலகுப்பிள்ளை,கேபி விடயம்)நான் புரிந்துகொண்டது யாதெனில் பிரபாகரன் என்றாலும் கேபி என்றாலும் யாராகிலும் தன்னிடம் கலந்துரையாடி தனது அனுமதி பெற்றே சகலதையும் செய்யவேண்டும்,தன்னூடாகவே சகலதும் இயங்கவேண்டும் அவ்வாறு இல்லாதபோது
பிரபாகரனின் முடிவையும் மாற்றியமைக்கும் வல்லமை என்னிடம் உள்ளது என்பதை தமிழ் சமூகத்திற்கு கூறமுனைகிறாரா?அல்லது திட்டமிட்டு குழப்பங்களை ஏற்படுத்தி தமிழ் சமூகத்தினை சிதைக்கிறரா?இதில் எதை அவர் செய்திருந்தாலும் இரண்டுமே தமிழ் சமூகத்திற்கு ஏற்புடையதா?
இதில் எந்த மனநிலையுடன் அவர் செயற்பட்டிருந்தாலும் கடந்தகாலங்களில் அவர் தமிழ் சமூகத்திற்கு செய்தது மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது,
அத்தோடு கரி ஆனந்தசங்கரியை தோல்வியுறச் செய்வதற்காக சதி செய்தார்!கரி ஆனந்த சங்கரிக்கு வாக்களிக்க வேணடாம் என உலகத்தமிழர் இயக்கத்தை சேர்ந்தவர்களை முகத்தை துணியால் கட்டிக்கொண்டு இரவில் வீடுவீடாக அனுப்பி கேட்டுக்கொண்டார்,
உலகத்தமிழர் பத்திரிகையில் கரி ஆனந்தசங்கரிக்கு எதிரான ஆசிரியர் தலையங்கம்,கட்டுரைகள் எழுதப்பட்டது,
அதேவேளை கரி ஆனந் சங்கரிக்கு எதிர் வேட்பாளராக நின்றவர் ஒரு இந்திய கனேடியர்,அவரை வெல்லவைப்பதற்கே உலகத்தமிழர் பத்திரிகையும்,உலகத்தமிழர் இயக்கமும் நேரு குணரெட்ண்தின் வழிகாட்டலில் செயற்பட்டது,
கரி ஆனந்தசங்தரி இவரது சதிவேலைகளையும்மீறி எம்பியாகினர் என்பது வேறுவிடயம்,
நேரு குணரெட்ணம் அவர்களே இலகுப்பிள்ளையும்,கரி ஆனந்த சங்கரியும்
உங்களிற்கு தமிழர்களாக தெரியவில்லையா?இந்த இருவருக்கு எதிராகவும் தேர்தலில் வேலைசெய்யும்போது
நீங்கள் விசமப்பிரச்சார கலாச்சாரத்தை உருவாக்குகிறீர்கள் எனபது தங்களிற்கு புரியவில்லையா?
சாத்தான் வேதம் ஓதக்கூடாது.
(Thamil Mathy)