யாழ் மாவட்டத்தில் இருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் சலுகை தொடர்பான கூற்று கோமாளித்தனமானது என, சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
Author: ஆசிரியர்
”பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது” – அனுரகுமார
இலங்கையில் பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர் ஆற்றிய உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
“இலங்கையின் அரசியல் கலாச்சாரம் நீண்ட காலமாக வடக்கை தெற்கிற்கு எதிராகவும் அதற்கு நேர்மாறாகவும் நிறுத்தும் முயற்சிகளால் வரையறுக்கப்படுகிறது.
”அதிகார வரம்பறிந்து பொறுப்புணர்வுடன் செயற்படுங்கள்” – அனுரகுமார
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அதிக அதிகாரங்கள் இருப்பதாகக் கூறிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அனைத்து அமைச்சர்களும் தமது அதிகார வரம்புகளை அறிந்து பொறுப்புணர்வோடு செயற்படுவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். புதிய அமைச்சரவையில் உரையாற்றிய அவர், பெரும்பாலான அமைச்சர்கள் அமைச்சரவைக்கு மட்டுமல்ல, பாராளுமன்றத்திற்கும் புதியவர்கள். அவர்கள் அனைவரும் நேர்மையானவர்கள், ஊழல் செய்யாதவர்கள் என்பதை தாம் நன்கு அறிவதாகவும், மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தைரியம் அவர்களுக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டுப் பயணம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வார் என புதிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார். புதிய அரசாங்கம் தேசத்தை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை நகர்கிறது என்பதை உலகிற்கு எடுத்துரைக்க உத்தேசித்துள்ளதாகவும், இலங்கை பிரஜைகளுக்கு நிலையான மற்றும் அழகான நாட்டை உறுதி செய்யும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
ரவி, நாமல், சத்தியலிங்கம் – வெளியானது அதிவிசேட வர்த்தமானி
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக நாமல் ராஜபக்ஷ மற்றும் தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவு செய்யபட்டு அவர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நாற்காலி ஒரு முள் படுக்கை
(முருகானந்தம் தவம்)
வரலாற்றுப் பதிவுகளுடன் நடந்து முடிந்த இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் தலைவரான அனுரகுமார திசாநாயக்க மக்களின் 2ஆவது ‘அரகலய’ புரட்சி மூலம் 5,634,915 நேரடி வாக்குகள், 1,05,264 விருப்பு வாக்குகள் என்ற அடிப்படையில் 5,740,179 மொத்த வாக்குகளைப் பெற்று ஜனாதிபதிக் கதிரையை அலங்கரித்துள்ளார்.
சற்றுமுன் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்
தீவிரமடையும் காற்று மாசு: 19 இலட்சம் பேர் பாதிப்பு
21இல் ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் வெளியீடு
பெருந்தோட்டங்களிலும் வடக்கிலும், தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை நியமித்ததன் மூலம் உலகிற்கு ஒரு செய்தி சொல்லப்பட்டுள்ளதாக, சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன், எதிர்வரும் 21ஆம் திகதி, ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்ததன் பின்னர் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் நாட்டின் நிதி நிலைமையை அதற்கேற்ப மாற்றி அமைக்க முடியும் என, மனித உரிமை செயற்பாட்டாளர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.