381 கடைகளுக்கு எதிராக நடவடிக்கை

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் அறிக்கையின்படி, பண்டிகை காலத்தின் போது, மனித பாவனைக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்த 381 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  ஜனவரி மாத நடுப்பகுதி வரை, மனித பாவனைக்குத் தகுதியற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளைக் கண்டறியும் விசேட சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என, அதன் செயலாளர் சமில் முதுகட தெரிவித்தார்.

அறிக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பில் விசாரணை

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் உட்பட இருவர் கைது

9 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் வர்த்தகர் ஒருவரும் பிட்டகோட்டே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் மற்றுமொரு வர்த்தகரிடம் இருந்து இலஞ்சம் பெற்ற போதே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழரசுக் கட்சியின் இடைக்கால பதில் தலைவரானார் சீ.வி.கே சிவஞானம்

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜாவும் எஞ்சியகாலங்களுக்கான பதில் தலைவராக சீ.வி.கே.சிவஞானமும் செயற்படுவார் என தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு தீர்மானித்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் அறிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட அறிவிப்பு

சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

யோஷித ராஜபக்ஷவுக்கு CID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷவுக்கு, கதிர்காமத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்ய குற்றவியல் விசாரணை திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (ஜன. 03) ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முடிச்சு மாறிகள் குறித்து அவதானமாக இருப்பது அவசியம்

பண்டிகை காலம் என்பதால், சகலரும் அவதானமாக இருக்க வேண்டும். தங்களிடம் இருக்கிறதோ, இல்லையோ, எனினும், பண்டிகையை கொண்டாடுவதில் சகலரும் ஆர்வமாக இருப்பர். சிலர், கடன்களை பெற்றாவது, தங்களுடைய பிள்ளைகளுக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுப்பர். வீடுகளையும் சுத்தம் செய்து கொள்வர். இவ்வாறு கஷ்டப்படுவோரும் இருக்கின்றனர். மிக இலாவகமாக ஏமாற்றும் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

திருகோணமலை கடலில் மிதந்த Target விமானத்தால் பதற்றம்

திருகோணமலை கடலில் சிறிய ரக விமானம் ஒன்று மிதப்பதை கண்ட மீனவர்கள் குழு அதை மீட்டு வந்து அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.. கரையில் இருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் இந்த சிறிய ரக விமானம் இருந்துள்ளது.

சுமார் 150 கோடி ரூபாயை மோசடி செய்த தம்பதிக்கு விளக்கமறியல்

நிதி மோசடி செய்து இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில் நேற்று (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தம்பதியினர் எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மன்மோகன் சிங் மறைவு: நாளை இறுதி கிரியை

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து, 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று, மத்திய அரசு தெரிவித்துள்ளது.